நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத் தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த ததுவனார் தங்குங் கோயில் காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார் வீதித் தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவை யாறே.
- திருஞானசம்பந்தர்.
திருவையாறு, திருவெறும்பியூர், திருமயேந்திரப்பள்ளி திருத்தென்குடித்திட்டை திருக்கலிக்காமூர் , திருமூக்கீச்சரம், திருச்சத்திமுற்றம் , திருக்குரக்குக்கா, திருவியலூர் , திருக்கருக்குடி, திருவிளமர் திருக்குருகாவூர் வெள்ளடை ,திருக்கழிப்பாலை , திருக்குரங்கணில்முட்டம், திருவேட்டக்குடி ,திருநன்னிலம்(திருநன்னிலத்துப் பெருங்கோயில்) திருகோகர்ணம்(கோகர்ணா), திருக்கருவிலிக்கொட்டிட்டை, திருப்பள்ளியின் முக்கூடல் ,திருவிடைவாய், திருக்கோடி(கோடிக்கரை), திருக்கொள்ளிக்காடு திருஇராமேச்சரம், திருவைகாவூர், திருஇலம்பையங்கோட்டூர், திருஆனைக்கா,திருஆப்பனூர்,திருப்பரங்குன்றம்,திருவெஞ்சமாக்கூடல், திருக்கோழம்பம், திருத்தென்குரங்காடுதுறை,திருநனிபள்ளி,திருநெல்வெண்ணெய் , திருத்தருமபுரம் ,திருநள்ளாறு, திருக்கோட்டாறு திருஅறையணிநல்லூர்,திருமீயச்சூர் இளங்கோயில், திருக்கடவூர் வீரட்டம் , திருக்கடவூர் மயானம் திருக்கருவூர் ஆனிலை(கரூர்) திருக்கானப்பேர்(காளையார் கோயில்) , ,திருவேதிகுடி,திருகற்குடி, திருநெடுங்களம், திருக்கோணமலை மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருக்கண்டியூர்,சக்கரப்பள்ளி, திருநல்லூர், திருச்செம்பொன்பொள்ளி , திருப்பறியலூர் திருவலஞ்சுழி, திருநீலக்குடி, திருத்தெளிச்சேரி, திருமீயச்சூர், திருச்சிறுகுடி, திருஅரிசிற்கரைப்புத்தூர், திருக்கொண்டீச்சரம், இடும்பாவனம், திருவெண்டுறை,திருக்கொள்ளம்பூதூர், திருஏடகம், திருஆடானை,திருமுருகன்பூண்டி, திருக்கோவலூர் வீரட்டம்,இடையாறு,திருவல்லம், திருமாற்பேறு, திருஇடைச்சுரம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் ,திருக்குடந்தைக் காரோணம், திருக்கானூர், திருவடுகூர், திருப்பூந்துருத்தி, திருப்பாற்றுறை, திருக்கூடலையாற்றூர், திருப்பழனம் திருநெய்த்தானம் திருத்தெங்கூர், திருவிற்கோலம்(கூவம்) ,திருப்பெரும்புலியூர் ,திருஅழுந்தூர் ,திருவக்கரை, திருவெண்காடு , திருப்பழையாறை வடதளிதிருக்குடமூக்கு(கும்பகோணம்),முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூசனை மூலிகையான இஃது ஒரு கற்ப மூலிகையாகும்; அஃதாவது, இன்ன பிணிக்கு மட்டுமே மருந்துதென்று அமையாது எல்லாப் பிணிகளையும் நீக்கும் தன்மையுடையது. இஃது கூவிளம், கூவிளை என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.
இது மூன்று கூட்டிலைகளை மாற்றடுக்கில் கொண்டு உருண்டையான மணமுள்ள சதைக்கனிகளைப் பெற்ற முட்களுள்ள பெரிய மரம். திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்பெறும்.
வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.
தண்ணறு மத்தமுங் கூவிளமும் வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும் நண்ணல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட னேத்தப் புனையிழையார் அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.3
Name | Vilvam Tree |
Family | Rutaceae |
Genus | Aegle |
Species | Marmelos |
Authority | (L.) Correa |
Type | Deciduous |
Common Family | Citrus |
Native | S. E. Asia, India |
Size | Medium |
Height | 18 m |
Wiki | wikipedia |
Links | flowersofindia ars-grin theplantlist |
Language COmmon | Bel, Beli fruit, Bengal quince, Stone apple, golden apple, - Bael, Bilva, കൂവളം (Kuvilam), మారేడు (maredu), ಬೇಲದ ಹಣ್ಣ (belada hannu), बेल (Sirphal), બીલી, (Bael)بیل, (Sirphal) سری پھل , বেল, gorakamli, कवीठ (Kaveeth), Beel, Maja, pokok maja batu, มะตูม /matuum/ (tree: ต้นมะตูม /ton matuum/; fruit ลูกมะตูม luug matuum) |
Language Hindi | Bael, bel, bil, beel, bila, sirphal |
Description | Bel is a fruit-bearing tree which is cultivated throughout India, as well as in Sri Lanka, northern Malaya, Java and in the Philippines. The tree, which is the only species in the genus Aegle, grows up to 15 meters tall and bears thorns and fragrant flowers. Leaves are alternate, pale green, trifoliate; terminal leaflet, 5.7 cm long, 2.8 cm broad, having a long petiole; the two lateral leaflets, almost sessile, 4.1 cm long, 2.2 cm wide, ovate to lanceolate having reticulate pinnate venation; petiole, 3.2 cm long. Flowers, greenish white, sweetly scented, bisexual, stalked; stalk, 8 mm long; diameter of a fully open flower is 3 cm; flowers, borne in lateral panicles of about 10 flowers, arising from the leaf axils. It has a woody-skinned, smooth fruit 5-15 cm in diameter. The skin of some forms of the fruit is so hard it must be cracked open with a hammer. It has numerous seeds, which are densely covered with fibrous hairs and are embedded in a thick, gluey, aromatic pulp. The fruit is eaten fresh or dried. The juice is strained and sweetened to make a drink similar to lemonade, and is also used in making Sharbat. is a sacred tree, dedicated to Lord Shiva. The offering of bael leaves is a compulsory ritual of the worship of Lord Shiva in the hills. This importance seems largely due to its medicinal properties. All parts of this tree, viz., root, leaf, trunk, fruit and seed, are used for curing one human ailment or another. |
Where | Someshwara Temple, Ulsoor, Bangalore Bull Temple, Basavangudi, Bangalore Jogpalya Main Road, Jogpalya, Bangalore |
Color | Pale |
Texture | Shallow Furrows |
Info | Corky |
Size | 3 cm |
Color | creamy |
Info | 4 or 5 petals, Fragrant |
Season | Mar-Apr |
Size | Large |
Shape | Globose |
Color | Green turning Orange |
Type | Trifoliate |
Leaflet Numbers | 3 |
Shed | Feb |
Size | 2.5 cm |
Shape | Straight |
Info | Solitary |
Vilvam Tree - Flower Bud
< PREV < வாழைமரம் |
Table of Content | > NEXT > விழல்புல் |