logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பறியலூர் ([கீழப்] பரசலூர்)

இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர், தக்ஷபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: இளங் கொம்பனையாள்.

தல மரம்:

தீர்த்தம் : உத்திரவேதி தீர்த்தம். சிவ கங்கை, சந்திர புட்கரணி

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

 

Tiruppariyalur temple

  • மக்கள் வழக்கில் கீழப் பரசலூர் என்று வழங்குகின்றது.

     

  • தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனை மூலம் பறித்ததால் 'பறியலூர் ' என்றும்; தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும் இஃது வழங்கலாயிற்று.

     

  • வீரபத்திரரை ஏவித் தக்கனைத் சம்ஹரித்த தலம்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -    1. கருத்தன் கடவுள் கனலேந்தி (1.134); 

பாடல்கள்      :     அப்பர்       -       தெய்வப் புனற்கெடில (6.07.6); 

                    சேக்கிழார்    -       பாடும் அப்பதி பணிந்து (12.28.441 & 442) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

    தல மரம் : வில்வம்

 

Specialities

  • அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

     

  • கருவறைச் சுவரில் தக்கன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது.

     

  • மூலவர் பெரிய திருமேனி - சுயம்பு மூர்த்தி - சதுர ஆவுடையார்; கோமுகம் மாறி உள்ளது.

     

  • இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒன்பதும் இல்லை. சூரியன் மட்டுமே உள்ளார்.

     

  • இங்கு அர்த்தசாம வழிபாடு பைரவருக்கு நடத்தப்படுகிறது.

     

  • சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலக் கல்வெட்டில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜ நாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர் " என்றும்; இறைவன் "திருவீரட்டான முடையார்", "தக்ஷேஸ்வரமுடையார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

     

  • திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் அருளிச் செய்த தலபுராணம் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில் 'செம்பொன்னார் கோயிலை' அடைந்து, அவ்வூர் மெயின் ரோட்டில் 'நல்லாடை' என்று கைகாட்டி காட்டும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று, 'பரசலூர் ' சாலையில் திரும்பி 2 கி. மீ. செல்லவேண்டும். (இப்பாதை குறுகலான ஒருவழிப் பாதை). தொடர்புக்கு :- 04364 - 205 555.

Related Content