இறைவர் திருப்பெயர்: சுந்தரேஸ்வரர், திருமேனியழகர்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, சாந்தநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : தேவதீர்த்தம். அழகு தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், அருச்சுனன் முதலியோர்
Sthala Puranam
கோயில் அமைந்துள்ள பகுதி 'கோயில் மேடு ' என்றழைக்கப்படுகிறது.
அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அருள் செய்ததாகப் புராண வரலாறு சொல்கிறது.
இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வண்டிரைக்கும் மலர்க்கொன்றை (3.66); பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் (6.71.3); சேக்கிழார் - அடியவர்கள் (12.28.443) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய (வேடரூபர், வேடநாயகி) திருமேனிகள் சிறப்பானவை; வேடரூபர், கையில் வில்லேந்திக் கம்பீரமாக காட்சித் தருகிறார்.
ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருமேனியழகரான சுவாம வேடமூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடுகிறார்; இது "கடலாடுவிழா " என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுவதால் இக்'கடலாடு விழா 'வை கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள்.
Contact Address