logo

|

Home >

hindu-hub >

temples

திருவியலூர் (திருவிசநல்லூர் / திருவிசலூர்)

இறைவர் திருப்பெயர்: யோகானந்தீஸ்வரர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: சாந்தநாயகி, சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சடாயுதீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், சடாயு

Sthala Puranam

Tiruviyalur temple

Tiruviyalur temple

மக்கள் திருவிசலூர், திருவிசநல்லூர் என்று சொல்கின்றனர். திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களிருப்பதால் இப்பதி "பண்டாரவாடை திருவிசலூர் " திருவிசநல்லூர் என்று வழங்கப்படுகிறது.

 

  • சடாயு வழிபட்டு பேறு பெற்றத் தலம்.

 

தேவாரப் பாடல்கள் :     பதிகங்கள்     :     சம்பந்தர்    -    1. குரவங்கமழ் நறுமென்குழல் (1.13); பாடல்கள்      :      அப்பர்     -       வீழி மிழலை (6.70.7);                      சேக்கிழார்   -       வெங் கண் (12.28.294) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

 

சைவசித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகிய 'திருவுந்தியார் ' பாடிய 'திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் ' அவதரித்த தலம்.

 

சோழர் காலக் கல்வெட்டில் இத்தலம் "வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு, மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் " என்றும், இறைவன் பெயர் "திருவிசலூர் தேவ பட்டாகரர், சிவயோகநாதர் " எனவும் குறிக்கப்படுகிறது.

 

இரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டில், விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும், அபிஷேகத்திற்கு நிலம் விட்ட செய்தியையும், காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன.

 

இராசேந்திரன் காலக் கல்வெட்டில், அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும், அவன் மனைவியான அரசி, சுவாமிக்கு தங்க நகைகளும், அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவிடைமருதூர் - வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்தும் செல்லலாம்; நகரப் பேருந்துகள் உள்ளன. தொடர்பு : 0435 - 2000679, 09444747142.

Related Content