இறைவர் திருப்பெயர்: பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.
இறைவியார் திருப்பெயர்: அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.
தல மரம்:
தீர்த்தம் : சூரியபுட்கரணி, காவிரி.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் , திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி, சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், அருணகிரிநாதர் முதலியோர்
Sthala Puranam
சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)
நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.
இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.
அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.
சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.
இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கலையார் மதியோடு (1.36), 2. பணிந்தவர் அருவினை (1.120), 3. புலனைந்தும் பொறிகலங்கி (1.130), 4. கோடல் கோங்கங் (2.6), 5. திருத்திகழ் மலைச்சிறுமி (2.32); அப்பர் - 1. மாதர் பிறைக்கண்ணியானை (4.3), 2. விடகிலேன் அடிநாயேன் (4.13), 3. கங்கையை சடையுள் (4.38), 4. குண்டனாய்ச் சமணரோடே (4.39), 5. தானலா துலக மில்லை (4.40), 6. குறுவித்த வாகுற்ற (4.91), 7. சிந்திப் பரியன (4.92), 8. அந்திவட் டத்திங்கட் (4.98), 9. சிந்தை வாய்தலு (5.27), 10. சிந்தை வண்ணத்த (5.28), 11. ஆரார் திரிபுரங்கள் (6.37), 12. ஓசை யொலியெலா (6.38); சுந்தரர் - 1. பரவும் பரிசொன் (7.77); பாடல்கள் : மாணிக்கவாசகர் - ஐயாறு அதனில் (8.2.85 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல்; ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - குந்தி நடந்து (11.6.3) க்ஷேத்திரத் திருவெண்பா; சேக்கிழார் - நங்கள் நாதனாம் (12.2.35) திருமலைச் சிறப்பு, ஆயவாறு மற்று (12.21.373,382,384 & 385) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மாடு புனல் (12.28.299,300,301,303 & 949) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், தேவர் பெருமான் (12.29.71) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம், வட கரையில் (12.37.131,132,134,135,138 & 140) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
தல மரம் : வில்வம்
Specialities
சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.
நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழாவில் இத்தலத்து இறைவன் தனைத்தானே பூசித்தது ஆத்மபூஜை என்ற உத்ஸவம் நடக்கிறது.இப்பெருவிழாவின் இறுதியில் சப்தஸ்தான உத்ஸவம்(ஏழுர்த்திருவலம்) மிகப்பிரபலம்.
பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
Contact Address