இறைவர் திருப்பெயர்: பரங்கிரிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: ஆவுடைநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : சரவணப்பொய்கை, இலட்சுமி தீர்த்தம், பிரமகூபம். காசி தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், பராசரமுனிவரின் புதல்வர், நக்கீரர், சிபிமன்னன், பிரம்மா ஆகியோர்.
Sthala Puranam
இத்தலம் சிவத்தலமாயினும், இன்றைய நடைமுறையில் முருகனுக்குரிய சிறப்புதலமாகவே வழிபடப்படுகின்றது.
11 கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பிய படைகளின் இடிபாடுகளிலிருந்து கோயிலை காப்பதற்காக முத்துக் கருப்பன் மகன் செட்டி என்பவன், கோபுரத்திலிருந்து விழுந்து இறந்துவிட, அவன் குடும்பத்தாருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்தியை கல்வெட்டு கூறகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நீடலர்சோதி வெண்பிறையோடு (1.100); சுந்தரர் - கோத்திட்டையுங் கோவலுங் (7.002); பாடல்கள் : சம்பந்தர் - அண்ணாமலை (2.39); அப்பர் - திண்குணத்தார் (6.16.4); பட்டினத்துப் பிள்ளையார் - பருப்பதம் (11.30.58) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - தேன் நிலவு பொழில் (12.28.884) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், பரமர் திருப்பரம் குன்றில் (12.37.102 & 103) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
Specialities
Contact Address