இறைவர் திருப்பெயர்: பிரம்மபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மலர்க்குழல் மின்னம்மை.
தல மரம்:
தீர்த்தம் : காசி தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர், சேக்கிழார், மார்க்கண்டேயர், பிரமன்.
Sthala Puranam
இறைவன், பிரமனை ஒரு கல்பத்தில் எரித்து, நீராக்கி, மீண்டும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை அருளிய தலமாதலின் இப் பெயர் பெற்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வரிய மறையார் பிறையார் (2.80); அப்பர் - 1. குழைகொள் காதினர் (5.38); சுந்தரர் - 1. மருவார் கொன்றை (7.53); பாடல்கள் : சேக்கிழார் - சீர் மன்னும் (12.21.248) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், பரவி ஏத்தி (12.28.535) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கண் ணரைப் பணிந்து ஏத்தி (12.29.145) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
இத் தலத்தின் காசித் தீர்த்ததிலிருந்துதான் திருக் கடவூர் வீரட்டானேச்சுவரருக்கு நாள்தோறும் திருமஞ்சன நீர் கொண்டு வரப்படுகிறது.
இவ் வூரில் உள்ள 16 கல்வெட்டுகளில் ,15 பிற்கால சோழர்கள், ஒன்று பாண்டிய மன்னன் கல்வெட்டுகள் உள்ளன.
Contact Address