இறைவர் திருப்பெயர்: கபர்த்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பிருகந்நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார், உமையம்மை, திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன், ஏரண்டமுனிவர் முதலியோர்
Sthala Puranam
ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.
அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. விண்டெலாமல ரவ்விரை (2.002), 2. என்னபுண்ணியஞ் செய்தனை (2.106), 3. பள்ளமதாய படர்சடை (3.106); அப்பர் - 1. ஓதமார் கடலின் (5.66), 2. அலையார்புனற்கங்கை (6.72); நக்கீரதேவ நாயனார் - 1. வணங்குதும் (11.12) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை; பாடல்கள் : அப்பர் - மருக லுறை (4.15.6), பொன்னள வார் (4.105), கற்றானைக் (6.01.2), தெய்வப் புனற்கெடில (6.07.6), ஏந்து மழுவாளர் (6.25.5), பொருங்கைமதக் (6.33.1), கொண்டலுள்ளார் (6.51.9), புலிவலம் (6.70.11), அலையார் (6.72.1), கருவாகிக் (6.86.1), கலஞ்சுழிக்குங் (6.93.6), விரிசடையாய் (6.99.6); சுந்தரர் - மைகொள் கண்டன் (7.12.10), நிறையனூர் (7.31.5); கபிலதேவ நாயனார் - வந்தா றலைக்கும் வலஞ்சுழி (11.22.20) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, பரணதேவ நாயனார் - பார்மேவு கின்ற (11.24.53) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - நல்லூரில் (12.21.215) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மதி புனைந்தவர் வலஞ்சுழி (12.28.379,380,381,383,389 & 1193) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கு நின்று (12.29.68) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : வில்வம்
Specialities
திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.
Contact Address