இறைவர் திருப்பெயர்: சிவக்கொழுந்தீசர்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : சூல தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார்,சேக்கிழார், உமை அப்பர் முதலியோர்
Sthala Puranam
இறைவனை உமை வழிபட்டுத் தழுவி முத்தமிட்டதால் 'சத்தி முத்தம்' என்று வழங்குகிறது.
அப்பர், தனக்குத் தருவடி தீட்சையருளுமாறு வேண்டிப்பாட, இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளிய சிறப்புடைய பதி. இவ்வாறு அருளிய மூர்த்தியே இங்கு மூலவராக உள்ளார்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. கோவாய் முடுகி யடுதிறற் (4.96); பாடல்கள் : அப்பர் - தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1); கபிலதேவ நாயனார் - மன்னும் பிறப்பறுக்கும் (11.22.37) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; சேக்கிழார் - எறி புனல் பொன் மணி (12.21.192 & 193) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், திருவாறை மேற்றளியில் (12.28.390 & 391) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
மூலவர் பக்கத்தில் தலவரலாற்றுச் சிறப்புடைய - இறைவி சிவலிங்கத்தைக் கட்டித் தழுவி முத்தமிட்ட திருக்கோல உருவத்தைக் கண்டுத் தரிசிக்கலாம்.
மூல வாயிலின் முன்னால் ஒருபுறத்தில், சத்தி முத்தம் தரும் தல ஐதீக மூர்த்தி உள்ளார்.
சம்பந்தர் இத்தலத்திலிருந்து இறைவன் அருளிய முத்துப்பந்தர் நிழலில் திருப்பட்டீச்சுரம் சென்று வணங்கிப் பதிகம் பாடினார்.
கல்வெட்டில் இறைவன் "திருச்சத்தி முற்றம் உடையர், திருச்சத்திவனப் பெருமாள்" எனக் குறிக்கப்படுகிறார்.
அக்காலத்தில் கோயில் நிலங்களில் வரிகளை வசூலிக்கும் விதிமுறைகளைப் பற்றியும், விளக்கெரிக்க காசும், ஆடும் அளித்ததையும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
Contact Address