இறைவர் திருப்பெயர்: ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மேகலாம்பிகை, மோகநாயகி, நித்யகல்யாணி.
தல மரம்:
தீர்த்தம் : திருக்குளம், கொள்ளிடம்.
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், மார்க்கண்டேயர், சூரியன் முதலியோர்.
Sthala Puranam
இங்குள்ள அம்பிகையை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறு கிட்டும் என்று நம்பப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. காரார் கொன்றை கலந்த (1.56); பாடல்கள் : சேக்கிழார் - ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் (12.28.348) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் ; வில்வம்
Specialities
அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, "தேவசபை" என்றழைக்கப்படுகிறது.
கல்வெட்டில் இத்தலம் "கொள்ளிடம் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை" என்றும் இறைவன் "திருப்பாற்றுறை மகாதேவர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களில் ஒன்றின் மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடம் இருந்ததாக அறிகிறோம்.
Contact Address