இறைவர் திருப்பெயர்: கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: கல்யாண சுந்தரி, திரிபுரசுந்தரி, பர்வதசுந்தரி.
தல மரம்:
தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அகத்தியர், பிருங்கி முனிவர், வாயு.
Sthala Puranam
கயிலை மலையிலிருந்து வாயுவால் ஏவப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத்தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். இது சுந்தரகிரி எனப்படுகிறது.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கியது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கொட்டும் பறைசீராற் (1.86), 2. பெண்ணமருந் திருமேனி (2.57), 3. வண்டிரிய விண்டமலர் (3.83); அப்பர் - 1. அட்டுமின் இல்பலி யென்றன் (4.97), 2. நினைந்துருகும் அடியாரை (6.14); பாடல்கள் : சம்பந்தர் - மனவஞ்சர்மற் றோடமுன் (2.39.6); பாடல்கள் : அப்பர் - புல்ல மூர்தியூர் (5.65.5), நாக மரைக்கசைத்த (6.002), செல்வப் புனற்கெடில (6.007.1), நில்லாதே பல்லூரும் (6.013.8), நடையுடைய (6.22.5), நல்லூரே நன்றாக (6.25.10), நதியாருஞ் சடையானை (6.69.7), நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10), பிறையூருஞ் சடைமுடியெம் (6.71.4), அல்ல லடியார்க் (6.82.9); பட்டினத்துப் பிள்ளையார் - நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - நற்றவன் நல்லூர்ச் சிவன் (11.34.25) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார் - பிறைத் தளிர் (12.7.6,43,46 & 49) அமர் நீதி நாயனார் புராணம், கோவாய் முடுகி (12.21.194,195,197 & 213) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், காவின் மேல் (12.28.365,366 & 371) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : வில்வம்
Specialities
அமர்நீதி நாயனாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் உள்ளன.
See also:
Contact Address