logo

|

Home >

hindu-hub >

temples

பழையாறை வடதளி திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: தர்மபுரீஸ்வரர் (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவன்), சோமேசர் (இவர் பழையாறை இறைவன்) .

இறைவியார் திருப்பெயர்: விமலநாயகி (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவியார்), சோமகலாம்பிகை (இவர் பழையாறை இறைவியார்).

தல மரம்:

தீர்த்தம் : சோம தீர்த்தம். விசுவ தீர்த்தம்

வழிபட்டோர்:அப்பர், நம்பியாண்டார் நம்பி , சேக்கிழார், கருடன், ஆதிசேஷன் முதலியோர்.

Sthala Puranam

  • இவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது; அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.

 

Sri Dharmapureeswarar temple

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    அப்பர்    -    1. தலையெ லாம்பறிக் குஞ்சமண் (5.58); 

பாடல்கள்      :    அப்பர்    -       தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1); 

       நம்பியாண்டார் நம்பி   -       மிண்டும் பொழில்பழை யாறை (11.34.8); 

                   சேக்கிழார்  -       சீரில் நீடிய செம்பியர் (12.07.1) அமர் நீதி நாயனார் புராணம், 
                                        நல்லூரில் நம்பர் அருள் (12.21.215,294 & 300) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,  
                                        சண்பை வரும் பிள்ளையார் (12.28.389 & 399) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.  

   

     தல மரம் : நெல்லி 

    

Specialities

  • சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.

     

  • பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.

     

  • தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.

     

  • இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.

     

  • பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.

     

  • சம்பந்தப்பெருமான் "அப்பரே" என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலம்.

     

  • சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.

     

  • மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த திருத்தலம்.

     

  • மங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.
    	மங்கையர்க்கரசியாரின் 
    	அவதாரத் தலம்	: பழையாறி (கீழப் பழையாறை).
    	வழிபாடு		: குரு வழிபாடு.
    	முத்தித் தலம் 	: மதுரை
    	குருபூசை நாள் 	: சித்திரை - ரோகிணி.
    

     

  • மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)

     

  • அமர்நீதி நாயனார் அவதரித்த திருப்பதி.
    	அமர்நீதியாரின் 
    	அவதாரத் தலம்	: பழையாறி (கீழப் பழையாறை).
    	வழிபாடு		: சங்கம வழிபாடு.
    	முத்தித் தலம் 	: நல்லூர்.
    	குருபூசை நாள் 	: ஆனி - பூரம்.
    

     

  • இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.

     

  • இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.

     

  • குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.

     

  • இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷுணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

Contact Address

அமைவிடம் அ/மி. சோமேசுவரர் திருக்கோயில், பழையாறை வடதளி, பட்டீசுவரம் (அஞ்சல்), கும்பகோணம் (வட்டம்) - 612 703. தொலைபேசி : +91-99948 47404 / +91-93444 36299 / 0435-3919971. மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்.

Related Content