இறைவர் திருப்பெயர்: மருதீஸ்வரர், இடையாற்றீசர்.
இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பெண்ணையாறு
வழிபட்டோர்:சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர்
- சுக முனிவர் வழிபட்டது. சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்ட இத்தலத்தில் கிளிகள் பறந்து கொண்டு இருக்கும். கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றைக் கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.
- அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
- கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.
- இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
திருமுறைப் பாடல்கள் :
பதிகங்கள் : சுந்தரர் - 1. முந்தையூர் முதுகுன்றங் (7.31);
பாடல்கள் : சேக்கிழார் - நலம் பெருகும் (12.29.171 & 172) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையத்து இடையாறு உள்ளது.
தொடர்பு :
04146 - 216045, 9442423919