logo

|

Home >

hindu-hub >

temples

திருஅரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்)

இறைவர் திருப்பெயர்: படிக்காசுவைத்த பரமர், சொர்ணபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: சிவாம்பிகை,சௌந்திரநாயகி, அழகம்மை

தல மரம்:

தீர்த்தம் : அரிசில் நதி

வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர், புகழ்த்துணை நாயனார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

 

  • பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் செருவிலிபுத்தூர் என்னும் இத்தலம் அரிசிற்கரைப்புத்தூர் மருவி அழகாபுத்தூர் என தற்போது வழங்கப்பெறுகிறது.

     

  • கோட்செங்கட்சோழன் திருப்பணி செய்யப்பெற்றது.

     

  • இஃது புகழ்த்துணை நாயனார் அவதாரத் தலம்; நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் வளாகத்தில் உள்ளது.

     

  • இறைவனார் புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசு அருளியத் தலம்.
    	அவதாரத் தலம்	: அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்)
    	வழிபாடு		    : இலிங்க வழிபாடு.
    	முத்தித் தலம் 	: அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்)
    	குருபூசை நாள் 	: ஆவணி - ஆயில்யம்.
    

 

kOil pirAkArach chuRRu

 

திருமுறை பாடல்கள்

பதிகங்கள்  :  சம்பந்தர்   -   1.  மின்னுஞ் சடைமேல் (2.63);

                          அப்பர்        -   1.  முத்தூ ரும்புனல் (5.61);

                          சுந்தரர்      -    1.  மலைக்கு மகள்அஞ்ச (7.9);

பாடல்கள்  : சேக்கிழார்  -       நல்லூரில் நம்பர் அருள் (12.21.215,216 & 217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 

                                                       பாடும் அரதைப் (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,   

                                                       வாசி அறிந்து காசு அளிக்க (12.29.60) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,

                                                      செருவிலிபுத்தூர் மன்னும் (12.56.1) புகழ்த்துணை நாயனார் புராணம்,

 

 

Specialities

  • மூவர் பெருமக்கள் பாடல் பெற்றத் திருத்தலம்.
  • மேற்கு பார்த்த சந்நிதி
  • சோழர் கால 7 கல்வெட்டுகள் உள்ளன.

Contact Address

அமைவிடம் அ/மி. சொர்ணபுரீசுவரர் திருக்கோயில், அழகாபுத்தூர், கும்பகோணம் - 612 401. தொலைபேசி : 0434 - 2466939 மாநிலம் : தமிழ் நாடு அமைவிடம் : கும்பகோணம் - நாச்சியார்கோவில் சாலையில் உள்ளது.

Related Content