இறைவர் திருப்பெயர்: சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம். (ஒன்று தூர்ந்துபோயிற்று.) மற்றொன்று சிதிலமாகியுள்ளது).
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார், வக்கிராசுரன் முதலியோர்
- வக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை - வலிய கரையையுடைய இடமாதலின் (கோயிலைச் சுற்றிலும் கற்பாறைகள்) வற்கரை - வக்கரை என்றாயிற்று என்பதும் பொருந்துகின்றது.
- குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது. வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். வெற்றி அடைந்த காளி வழிபட்ட தலம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கறையணி மாமிடற்றான் (3.60); பாடல்கள் : அப்பர் - கொக்கரை (4.66.9), நக்க ரையனை (5.22.5), தக்கனது வேள்விகெடச் (6.74.7), கயிலாய (6.51.1), மண்ணிப் படிக்கரை (6.70.6); கபிலதேவ நாயனார் - நக்கரை சாளும் (11.22.45) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - கன்னி மாவனம் காப்பு (12.28.963 & 964) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திண்டிவனம் - மயிலம் - வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று, 'பெரும்பாக்கம் ' என்னும் இடத்தில் பிரியும் கிளைப் பாதையில் 7-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்தில் செல்லலாம்.
தொடர்பு :
0413 - 2688949