logo

|

Home >

hindu-hub >

temples

திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி)

இறைவர் திருப்பெயர்: திருமேனியழகர், சோமசுந்தரர்.

இறைவியார் திருப்பெயர்: வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை.

தல மரம்:

தீர்த்தம் : மயேந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார் , இந்திரன், மயேந்திரன், சந்திரன் ஆகியோர்.

Sthala Puranam

view the temple

 

இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்கப்படுகிறது. பண்டை நாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பகுதி கோயிலடிப்பாளையம் என்பது.

 

அருகில் உள்ள தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. திரைதரு பவளமுஞ் (3.31); பாடல்கள்    :  சேக்கிழார்  -      வைகும் அந்நாளில் (12.28.129) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

 

ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது.

 

இக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது.

 

ஆண்டுதோறும் இன்றும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர்.

Contact Address

அமைவிடம் : இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சிதம்பரம் - சீர்காழிச் சாலையில் கொள்ளிடம் பாலம், ஆச்சாள்புரம் இவறைக் கடந்து செல்லவேண்டும். சாலையில் இடை வளைவுகள் அதிகம் இருப்பதால் அங்காங்கே விசாரித்துக்கொண்டு செல்வது நல்லது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து (ஆச்சாள்புரம் வழியாக) நகரப்பேருந்துகள் செல்கின்றன. தஞ்சை, கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.
தொடர்புக்கு :- 04364 - 292 309.

Related Content