logo

|

Home >

hindu-hub >

temples

திருவடுகூர் - வடுக பைரவர் - தலவரலாறு (ஆண்டார்கோயில், திருவாண்டார் கோயில்)

இறைவர் திருப்பெயர்: வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர்நாதர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : வாமதேவ தீர்த்தம். பெண்ணையாறு

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், வடுக பைரவர்(சம்ஹார பைரவர்).

Sthala Puranam

Vadugur temple

  • வடுகூர் என்ற பெயர் பிற்கால வழக்கில் ஆண்டார்கோயில் என்றாகி இன்று மக்கள் வழக்கில் "திருவாண்டார்கோயில்" என்று வழங்குகிறது.
  • அஷ்டபைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்ட தலமாதலின்; வடுகர் வழிபட்டது வடுகூர் என்று பெயர் பெற்றது.
  • ஆண்டவனார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர்; கோயிற் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று - ஆண்டார் கோயில். 'திரு' என்னும் அடைமொழி சேர்ந்து 'திருஆண்டார் கோயில்' என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. சுடுகூ ரெரிமாலை யணிவர் (1.87);                    சேக்கிழார்    -       கன்னி மாவனம் காப்பு (12.28.963) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

  • இக்கோயில் சோழர்காலக் கலைப் பாணியில் அமைந்துள்ளது.
  • சுவாமி விமானம் தஞ்சைக் கோயிலமைப்பில் உள்ளது.
  • கோயில் தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
  • அஷ்டமி தினங்களில் சுவாமி மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம். கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. 
  • தமிழ் வருடப்பிறப்பின்போது திருக்கல்யாண உத்சவம்,

Contact Address

அமைவிடம் மாநிலம் : புதுச்சேரி விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி - கோலியனூர், கண்டமங்கலம்) பேருந்துச் சாலையில் சென்று, கோலியனூர், வளவனூர் தாண்டி, புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள இக்கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 9994190417.

Related Content