logo

|

Home >

hindu-hub >

temples

திருவேதிகுடி

இறைவர் திருப்பெயர்: வேதபுரீசுவரர், வாழைமடுநாதர்.

இறைவியார் திருப்பெயர்: மங்கையர்க்கரசி.

தல மரம்:

தீர்த்தம் : வேததீர்த்தம். வைத தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், பிரமன். (வேதம்; வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.)

Sthala Puranam

வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். ( 'விழுதிகுடி' என்பது மருவி 'வேதிகுடி' ஆயிற்று என்பர் ஒருசாரார்.)

 

சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார்.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்   - 1. நீறுவரி ஆடரவொ டாமைமன (3.78);                       அப்பர்    - 1. கையது காலெரி நாகங் (4.90); பாடல்கள்      :    சம்பந்தர்   -     குத்தங்குடி வேதி குடி (2.39.10),                         அப்பர்    -      பூதியணி (6.51.2),                                       வீழி மிழலை (6.70.7),                                        நற்கொடிமேல் (6.71.3);                     சேக்கிழார்  -     இறைஞ்சி ஏத்தி (12.28.356 & 357) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.   

 

தல மரம் : வில்வம்

 

Specialities

மகாமண்டபத்தில் உள்ள விநாயகர் (தலவிநாயகர்) வேதவிநாயகர் எனப்படுகிறார்.

 

இறைவன் நான்கு முகங்களாலும் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில்; இடக்காலை உயர வைத்து அற்புதமாகக் காட்சித் தருகிறார்.

 

முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி "வேதிகுடி மகாதேவர் " என்றும், "பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்படுகிறார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ள தலம். திருக்கண்டியூரிலிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: 9345104187 , 04362 - 262334

Related Content

Thiruvedhikudi