இறைவர் திருப்பெயர்: சற்குணேஸ்வரர், சற்குணநாதர், மணக்கோல நாதர், கல்யாணேஸ்வரர், இடும்பாவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களவல்லி, மங்களநாயகி, கல்யாணேஸ்வரி.
தல மரம்:
தீர்த்தம் : பிரமதீர்த்தம், அகத்தியதீர்த்தம், எமதீர்த்தம், சமூக புட்கரணி, ஏக தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார் , இடும்பன், பிரமன், அகத்தியர், எமன், இராமர் ஆகியோர்.
Sthala Puranam
இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன் மணந்து கொண்டதால் வியாசமுனிவர் பாண்டவர்களைப் பார்த்து "இடும்பைக்கு அருள் செய்த இப்பதி இன்று முதல் இடும்பாவனம் என்று வழங்குவதாகுக" என்றமையால் இப்பதி இடும்பாவனம் என்று பெயர் பெற்றது என்பது புராண வரலாறு.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. மனமார்தரு மடவாரொடு (1.17); பாடல்கள் : சேக்கிழார் - கண் ஆர்ந்த (12.28.623) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
தல விநாயகர் : வெள்ளை விநாயகர்.
இறைவன் அகத்தியருக்கு மணக்கோலம் காட்டியருளிய தலம். (சுவாமிக்குப் பின்னால் மணவாளக்கோலம் உள்ளது.)
இத்தலம் பிதிர்முத்தித் தலங்களுள் ஒன்று; ஆகவே பிதிர் வழிபாடுகளைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.
மராட்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு அளவற்ற மான்யங்களை அளித்துள்ள செய்தியைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
Contact Address