இறைவர் திருப்பெயர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்.
இறைவியார் திருப்பெயர்: போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : நளதீர்த்தம், சிவகங்கை.
வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார், திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி.
Sthala Puranam
இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.
திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பாடக மெல்லடிப் பாவை (1.7), 2. போகமார்த்த பூண்முலையாள் (1.49), 3. ஏடுமலி கொன்றையர (2.33), 4. தளிரிள வளரொளி (3.87); அப்பர் - 1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள் (5.68), 2. ஆதிகண்ணான் முகத்திலொன்று (6.20); சுந்தரர் - 1. செம்பொன் மேனிவெண் ணீறணி (7.68); பாடல்கள் : அப்பர் - பூவ னூர்தண் (5.65.8), வாரேறு வனமுலையாள் (6.02.4), சிந்தும் புனற்கெடில (6.07.10), முந்தி யிருந்தாயும் (6.41.5), பல்லார் பயில் (6.58.8), நதியாருஞ் சடையானை (6.69.7), நள்ளாறும் பழையாறுங் (6.71.10), தக்கனது வேள்விகெடச் (6.74.7), அல்ல லடியார்க் கறுப்பார் (6.82.9); சுந்தரர் - தேசனூர் வினைதேய (7.31.8), நாற்றானத் தொருவனை (7.38.4), நள்ளாறு தெள்ளா றரத்துறை (7.92.9); நம்பியாண்டார் நம்பி - அடைத்தது மாமறைக் காடர்தம் (11.35.91) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி; சேக்கிழார் - சீர்தரு செங்காட்டங்குடி (12.21.240) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், போற்றி இசைத்துப் (12.28.454,455,459,782,901 & 903) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், விண் தடவு (12.29.143 & 144) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : தர்ப்பை
Specialities
இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்).
இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்..
Contact Address