விழல் Dineria hohenaekeri, Horseht.; Gramineae.
படர்தருஞ்சடை முடியினார் பைங்கழலடி பரவுவார் அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரா வரையினார் விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் விடல்தரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.
. - திருஞானசம்பந்தர்.
திருவிளநகர் திருத்தலத்தில் தல விருட்சமாக விளங்குவது விழல் ஆகும். இஃது நாணல் இனத்தைச் சார்ந்த புல்லினமாகும். இதன் தாள் விளிம்புகள் கூரானவை. கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது. இதன் அரிசியே மருத்துவப் பயனுடையது. இது தமிழகத்தில் ஏரி, குளங்களில் காணப்படுகின்றது.
< PREV < வில்வமரம் |
Table of Content | > NEXT > விழுதி |