நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார் அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.
திருவீழிமிழலை என்னும் தலத்தின் தலமரமாக விளங்குவது விழுதி ஆகும். வீழி என்பதும் விழுதியைக் குறிப்பதே. தலத்தின் பெயர் தலமரத்தால் பெற்றதாகும். இது தனியிலைகளையும் மங்கலான வெண்ணிற பூக்களையும் செந்நிறப் பழங்களையும் உடைய முள்ளில்லாத சிறுசெடியாகும். இதன் இலை, காய், வேர் முதலியன மருத்துவப் பயன்கொண்டவை.
வாத நோய் தீர்த்தல், வீக்கம் கரைத்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது
< PREV < விழல்புல் |
Table of Content | > NEXT > விளாமரம் |