logo

|

Home >

hindu-hub >

temples

திருஇடைச்சுரம் - (திருவடிசூலம்) ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்.

இறைவியார் திருப்பெயர்: கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

வழிபட்டோர்:அம்பாள், அப்பர், சேக்கிழார், சனற்குமாரர், கெளதம ரிஷி, பிருங்கி ரிஷி ஆகியோர்.

Sthala Puranam

idaiccuram temple

  • பார்வதிதேவி பசுவடிவில் பால் சொரிந்து இறைவனை வழிபட்டத் தலம்.
  • வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த ஒரு பசு சரியாகப் பால் தரவில்லை. இடையன்  பசுவைக் கண்காணித்த போது புதருக்குள் சென்று பால் சொரிவதைக் கண்டான். ஊர் மக்களுடன் சென்று பார்த்த போது சிவபெருமான் மரகதலிங்கமாகச் சுயம்புவாகக் காட்சி கொடுத்தார். அவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். ஞானம் தரும் பாலைப் பூஜை செய்து கொண்டதால் சிவபெருமானுக்கு ஞானபுரீஸ்வரர் என்று பெயர்.
  •  சிவபெருமானே இடையன் உருவில் திருஞானசம்பந்தரை அழைத்து வந்து காட்சி கொடுத்தார் என்று ஒரு செய்தி உண்டு

 

திருமுறைப் பாடல்கள் : 1. சம்பந்தர்   - 1. வரிவள ரவிரொளி (1.78). 2. அப்பர்      -    சிந்தும் புனற்கெடில (6.7.10). 3. சேக்கிழார்  -    சென்னி இள மதி (12.28.1125,1126 & 1128) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்

 

 

 

 

Specialities

  • தொண்டை நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 27வது தலமாகும்.
  • மக்கள் வழக்கில் தற்போது "திருவடிசூலம்" என்று வழங்குகிறது.
  • மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில் கோயில் அமைந்துள்ளது.
  • கருங்கல் கட்டமைப்புடைய பழைமையான திருக்கோயில்; கருவறை அகழி அமைப்புடையது.
  • பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சன்னதி உள்ளது 
  • கோயிலில் நால்வர் பிரதிஷ்டை உள்ளது.
  • மூலவர் - மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி. தீபாராதனையின்போது தீபம் மரகத மேனியில்பட்டு பிரகாசிப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. இத்தல சம்பந்தர் தேவாரப் பதிகம் முழுவதிலும் மரகதலிங்கத்தின் அழகு புகழ்ந்து பாடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
  • சோழ அரசன் குலோத்துங்க சோழதேவன் ஆட்சியில் ஜயங் கொண்ட சோழ மண்டலத்திலுள்ள களத்தூர்க் கோட்டத்தின் பகுதியான வளநாட்டிலுள்ள திருவிடைச்சுரம் என்று(335 of 1908) குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் திருவிடைச்சுரமுடைய நாயனார்; திருவிடைச்சுரம் உடையார் என்றும், வழங்கப்பெறும். இங்கு ஜனனபுரீசுவரர் கோயில் ஒன்று உள்ளது. மேலும் கோவர்த்தன அம்பாள் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் உருவம் நிறுவ, பெருந்தண்டிலத்திலுள்ள கருப்பக்கிருகம் கட்டப்பட்டதையும் கூறுகிறது(346 of 1908). இந்த இறைவி கருப்பக்கிருகத்திற்கு விளக்குப்போட, ஆவன செய்யப்பட்டுள்ளது(347 of 1906). மகாமண்டலேசுவர குமார ஜலகராஜ திருமலையதேவ மகாராயரால் விளக்குக்காகவும் படையலுக்காகவும் நிலம் கொடுக்கப்பட்டது(337 of 1908). பிள்ளையார் நீலங்கநாயனாரைப் பற்றி(342 of 1908) விவரிக்கின்றது. ஏனையவை விளக்கிற்காகவும் பிறவற்றிற்காகவும் பொன், நிலம், ஆடுகள், பசுக்கள் இவைகள் அளிக்கப்பட்டமையை அறிவிக்கின்றன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு செங்கற்பட்டு - திருப்போரூர் சாலையில் இத்தலம் உள்ளது. "திருவடிசூலம்" பேருந்து நிறுத்தத்திலிருந்து உள்ளே 1-கி. மீ. சென்றால் ஊரை அடையலாம். வாகனங்களில் கோயில் வரை செல்லலாம். தொடர்பு : 044 - 27420485, 09444523890

Related Content

திருக்கச்சூர் (கச்சூர்) ஆலக்கோயில், மருந்தீசர் தல வரலாறு

திருக்கழுக்குன்றம் திருக்கோயில் தல வரலாறு

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் (அச்சரப்பாக்கம்) தல