இறைவர் திருப்பெயர்: உஜ்ஜீவநாதஸ்வாமி, உச்சிநாதர், முக்தீசர், கற்பகநாதர்.
இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை), பாலாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : பொன்னொளி ஓடை, குடமுருட்டி (இது தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு.),ஞானவாவி, எண்கோண தீர்த்தம், நாற்கோணதீர்த்தம் என்பன.
வழிபட்டோர்:கரன், நாரதர், உபமன்யு முனிவர், மார்க்கண்டேயர், அருணகிரிநாதர், சம்பந்தர், அப்பர், சுந்தரர்.
Sthala Puranam
தற்போது மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வடந்திகழ் மென்முலை (1.43); அப்பர் - 1. மூத்தவனை வானவர்க்கு (6.60); சுந்தரர் - 1. விடையா ருங்கொடியாய் (7.27); பாடல்கள் : அப்பர் - மறைக்காட்டார் (6.51.7), எச்சில் இளமர் (6.70.4), நற்கொடிமேல் (6.71.3); சேக்கிழார் - சிலந்திக்கு அருளும் (12.21.302) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், தொழுது புறம்பு அணைந்து (12.28.342 & 343) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், ஆயிடை நீங்கி (12.29.92 & 93) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
தல மரம் : வில்வம்
Specialities
நந்திவர்ம பல்லவ மன்னனால் அமைக்கப்பெற்ற கோயில்; இப்பகுதிக்கு 'நந்திவர்ம மங்கலம் ' என்னும் பெயருண்டு.
இங்கே கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.
இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது, (தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு) சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது.
கொடிமரத்தின் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு - எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டுநீங்கி வந்து நின்ற, சுவாமியின் - பாதம் உள்ளது.
மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.
கல்வெட்டில் 'நந்திவர்ம மங்கலம்', 'ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்' இவ்வூர் என்றும்; இறைவன் 'உய்யக்கொண்டநாதர் ' என்றும் குறிக்கப்படுகிறது.
(கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியது என்ற செய்தியை 'கெஜட்' வாயிலாக அறிகிறோம்.)
Contact Address