இறைவர் திருப்பெயர்: அக்கினீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை.
தல மரம்:
தீர்த்தம் : தீர்த்தக்குளம். காவிரி, அக்கினி தீர்த்தம்
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார்,அக்கினி.
Sthala Puranam
கொள்ளி - நெருப்பு. அக்கினி வழிபட்ட தலமாதலின் 'கொள்ளிக்காடு' என்று பெயர் பெற்றது.
இத்தலத் தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிப்பிடப்படுவதால் மக்கள் ஒரு காலத்தில் இக்கோயிலை "கரியுரித்த நாயனார் கோயில்" என்றும் அழைத்து வந்ததாக தெரிகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நிணம்படு சுடலையின் நீறு (3.16); பாடல்கள் : சேக்கிழார் - நம்பர் மகிழ் திருவாரூர் (12.28.574) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
மூலவர் சிவலிங்கத் திருமேனி; சற்று சிவந்த நிறமாகவுள்ளது. (அக்கினி வழிபட்டது.)
இத்தலத்து இறைவனருளால் சனிதோஷம் நீங்கப் பெற்ற திரிபுவனசக்கரவர்த்தி, தானமாகத் தந்த 120 ஏக்கர் நன்செய் (கோயிலை சுற்றி) இன்று கோயில் நிர்வாகத்தில் உள்ளது.
Contact Address