இறைவர் திருப்பெயர்: | கல்யாணவிகிர்தேஸ்வரர், விகிர்தநாதேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை, விகிர்தநாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | குடகனாறு. விகிர்த தீர்த்தம் |
வழிபட்டோர்: | சுந்தரர், அப்பர், சேக்கிழார் முதலியோர் |
இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் (கூடல்) உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.
இத்தலத்திலுள்ள இறைவன் ஒரு சமயம், உமையே ஒரு முதிர்ந்த கிழவியாக வடிவு கொண்டு வீற்றிருக்க, சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து தன் பிள்ளைகளை அக்கிழவியிடம் ஈடு காட்டிப் பொன் வாங்கிச் சுந்தரருக்கு அளித்தார்; என்ற செய்தியைக் கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் தெரிவிக்கிறது.
கல்வெட்டில் இறைவன் பெயர் 'வெஞ்சமாக்கூடல் விகிர்தர் ' என்றும் இறைவி பெயர் 'பனிமொழியார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. எறிக்குங் கதிர்வே யுதிர் (7.42); பாடல்கள் : அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6.70.8); சேக்கிழார் - பருவம் அறாப் (12.28.338) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், ஆயிடை நீங்கி (12.29.92) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து இக்கோயில் கருங்கற்கள் 2 கி.மீ தூரம் அடித்துச் செல்லப்பட்டு, ஊரும் அழிந்த நிலை நேர்ந்து பல்லாண்டுகட்கு பிறகு, பல லட்சங்கள் செலவில் இத்திருக்கோயிலை புதியதாக எடுப்பித்து 1986-ல் மகாகும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.
மூலவர் சந்நிதி வாயில் கதவுகளில் கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழிலும் உள்ள மூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பாகவுள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கரூர் - அரவக்குறிச்சி சாலையில் சீத்தப்பட்டி (அ) ஆறுரோடு பிரிவில் 8-கி. மீ. செல்லவேண்டும். கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து (Town Bus) வெஞ்சமாங்கூடல் வழியாக செல்கிறது. தனி ஊர்தியில் செல்வோர் கோயில் வரை செல்லலாம். தொடர்பு : 04324 - 262010, 09943527792.