logo

|

Home >

hindu-hub >

temples

திருநெடுங்களம்

இறைவர் திருப்பெயர்: நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், அகத்தியர்.

Sthala Puranam

 

 

Nedunkalam temple

  • மக்கள் கொச்சையாக பேசும்போது மட்டும் இத்தலத்தை 'திருநட்டாங்குளம்' என்கின்றனர்.

     

  • தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.

 

தேவாரப் பாடல்கள்	:   

பதிகங்கள்   :   சம்பந்தர்   -   1. மறையுடையாய் தோலுடையாய் (1.52); 

பாடல்கள்    :    அப்பர்    -       எழிலார் இராச சிங்கத்தை (4.15.7), 
                                     சீரார் புனற்கெடில (6.007.9),
                                     ஆண்டானை (6.054.1), 
                                     கொடுங்கோளூர் (6.070.5), 
                                     நள்ளாறும் (6.071.10),
                                     அலையார் (6.072.1); 
                  
                   சுந்தரர்    -      நாளும் நன்னிலம் (7.012.8); 

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - தொட்டுத் தடவித் (11.005.8); 

                 சேக்கிழார்   -      ஏறு உயர்த்தார் (12.28.348 & 349) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.                          

 

   தல மரம் : வில்வம்

 

 

Specialities

  • இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.

 

  • மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.

     

  • நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

     

  • மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.

     

  • இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.

     

  • கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும்; இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

     

  • இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - தஞ்சை சாலையில் வந்து துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி. மீ. சென்று நெடுங்களத்தையடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கின்றன. திருச்சி - மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. தொடர்பு : 0431 - 2520126

Related Content