இறைவர் திருப்பெயர்: | ஆபத்சகாயேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பவளக்கொடியம்மை, வண்டார்கருமென் குழலம்மை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | தேவதீர்த்தம். சகாய தீர்த்தம் |
வழிபட்டோர்: | சம்பந்தர்,அப்பர், சேக்கிழார், சுக்கிரீவன், அநுமான், வாலி. |
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பரவக்கெடும் வல்வினை (2.35); அப்பர் - இரங்கா வன்மனத்தார்கள் (5.63); பாடல்கள் : அப்பர் - கயிலாயமலை (6.71.11); சேக்கிழார் - மருங்கு உள (12.28.416) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
சோழர் காலக் கல்வெட்டுகள் பதிமூன்றும், பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும் உள்ளன.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். அதன் வடக்கே 1 கி. மீ. தூரத்தில் கோவில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ஆடுதுறை என அழைக்கப்படுகின்றது. தொடர்புக்கு:- 94434 63119 , 94424 25809.