இறைவர் திருப்பெயர்: அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி.
தல மரம்:
தீர்த்தம் : அக்கினி (கடல்) தீர்த்தம், அமுத தீர்த்தம்.
வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார், இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள்.
Sthala Puranam
திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தலவரலாறு கூறுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. கடிதாய்க் கடற்காற்று (7-32); பாடல்கள் : சேக்கிழார் - தெண் திரை சூழ் கடல் (12.28.622) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், எழுந்து பணிந்து (12.37.88 & 89) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
Specialities
குழகர் கோயில் உள்ள இடம் கோடியக்காடு, கடல் உள்ள இடம் கோடியக்கரை என்று சொல்லப்படுகிறது.
சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது.
தக்ஷிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் "அமிர்த விநாயகராவார்".
Contact Address