logo

|

Home >

hindu-hub >

temples

திருவிடைவாய்

இறைவர் திருப்பெயர்: விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: உமையம்மை, அபிராமி.

தல மரம்:

தீர்த்தம் : புண்ணியகோடி தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர்

Sthala Puranam

  • சோழநாட்டு காவிரி தென்கரையில் இது 114வது தலமாகும்.

 

இத்தலம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டத் திருமுறைத் தலமாகும். கி. பி. 1917ல் இத்தலம் கண்டெடுக்கப்பட்டது. மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் இருந்ததாகவும், தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

 

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - மறியார் கரத்தெந்தையம்.

Specialities

ஐயடிகள் காடவர்கோன் தம்முடைய க்ஷேத்திரக் கோவையில் "தென் இடைவாய்" என்று குறிப்பிட்டுப் பாடுகிறார்.

 

  • கோயிலில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் மாவட்டம், கொரடாச்சேரி - கூத்தாநல்லூர் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் பிரியும் "திருவிடைவாயில்" என்னும் வழிகாட்டிப் பாதையில் 2 கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தற்போது திருவிடைவாயில் என்று வழங்குகிறது.

Related Content

விடைவாய்க்குடி (வாக்குடி, வாழ்குடி) Vidaivaikkudi (Vakkudi,