logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கழிப்பாலை

இறைவர் திருப்பெயர்: பால்வண்ணநாதர்.

இறைவியார் திருப்பெயர்: வேதநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : கொள்ளிடம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், வால்மீகி முனிவர் முதலியோர்

Sthala Puranam

thirukazipalai temple

இது முன்பு, கொள்ளிட வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்தது.கொள்ளிடத்தின் வெள்ளத்தால் முற்றிலும் பாழ்பட்டுவிட்டது. திரு. பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோவில்கட்டி, அதில் கழிப்பாலை இறைவரையும், இறைவியாரையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :  சம்பந்தர்   -   1. புனலாடியபுன் (2.21),                                  2. வெந்தகுங்குலியப் (3.44);                  அப்பர்     -   1. வன பவள (4.6),                                  2. நங்கையைப்பாகம் (4.30),                                  3. நெய்தற் குருகுதன் (4.106),                                  4. வண்ணமும்வடிவுஞ் (5.40),                                 5. ஊனுடுத்தி (6.12);                சுந்தரர்     -   1. செடியேன் தீவினை (7.23); பாடல்கள்   :   சம்பந்தர்   -     ஆரூர்தில்லை யம்பலம்  திருக்ஷேத்திரக்கோவை;                    அப்பர்      -     தெய்வப் புனற்கெடில (6.7.6) காப்புத்திருத்தாண்டகம்,                                     காலனைக்கா லாற்காய்ந்த (6.33.8) ஆரூர் அரநெறி திருத்தாண்டகம்,                                     மண்ணிப் படிக்கரை (6.70.6) க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம்;       பரணதேவ நாயனார்  -      தாமென்ன நாமென்ன (11.24.34 & 63) சிவபெருமான் திருவந்தாதி;              சேக்கிழார்     -     மேவிய பணிகள் (12.21.172) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                     கைம் மான் மறியார் (12.28.167) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                     அந் நாளில் தம் பெருமான் (12.29.166) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

 

 

Specialities

  • இது இன்று சிவபுரி எனப்படுகிறது.

 

  • சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு படி எடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, சிதம்பரத்திற்கு தென் கிழக்கே 10-கி.மீ. தூரத்தில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
தொடர்பு : 09842624580.

Related Content