இறைவர் திருப்பெயர்: சூக்ஷிமபுரீஸ்வரர், மங்களநாதர், சிறுகுடியீசர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, மங்களாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்.
வழிபட்டோர்: சம்பந்தர் , சேக்கிழார், கருடன், செவ்வாய், கந்தர்வர் ஆகியோர்.
Sthala Puranam
நன்னிலம் வட்டத்தில் சிறுகுடி என்னும் பெயரில் பல ஊர்களிருப்பதால் அவற்றினின்றும் வேறுபாடறிய இத்தலம் 'திருச்சிறுகுடி' என்றழைக்கப்படுகிறது.
அம்பிகை, கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். "சிறுபிடி" - என்பது மருவி 'சிறுகுடி' என்றாயிற்று என்பர்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. திடமலி மதிலணி சிறுகுடி (3.97); பாடல்கள் : சேக்கிழார் - தக்க அந்தணர் (12.28.537 & 538) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
சங்க இலக்கியத்தில் புகழப்படும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாம் 'பண்ணன்' என்னும் கொடை வள்ளல் வாழ்ந்த தலம்.
சம்பந்தரின் இத்தலத்துப் பதிகம் 'திருமக்கால்' யாப்பில் அமையப்பெற்றது.
மங்கள தீர்த்தத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செய்வாய்க் கிழமை காலை மாலை வந்து நீராடி வழிபட்டுச் செல்கின்றனர். இஸ்லாமியர் முதலிய வேற்று மதத்தவர்களும் வந்து நீராடி வழிபட்டுத் திருநீறு பெற்றுச் செல்கின்றர்.
செவ்வாய் தோஷமுள்ளவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது பிரசித்தம் - செவ்வாய் வழிபாடு விசேஷமானது.
நவக்கிரக சந்நிதி - சனீஸ்வரனுக்கு கீழே "சனைச்சரன்" என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர். இதற்கு 'மெதுவாக ஊர்ந்து செல்பவர் ' என்று பொருள்.
"தேனமலர் பொழிலணி சிறுகுடி" - என்னும் சம்பந்தரின் வாக்குக்கேற்ப - சுவாமிக்கு முன்னால், முன் மண்டபதில் வலப்புறத்தில் சுவர் ஓரத்தில் தேனடை உள்ளது. சாளரம் அமைத்து அதன்வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்து போகுமாறு செய்து, மண்டபத்தின் உட்புறத்தில் இரும்புவலை போட்டுப் பாதுகாத்துள்ளனர்.
இத்தலத்திற்குரிய சிறப்பு மூர்த்தமாகிய "சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி " மிகமிகச் சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து அம்பாளை ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள்மீது கை போட்டுக்கொண்டு காட்சித் தரும் அழகு - கண்டு அநுவித்தாலே உணர முடியும்.
Contact Address