logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கானூர்

இறைவர் திருப்பெயர்: செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சிவலோக நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : கொள்ளிடம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், அக்கினி முதலியோர்

Sthala Puranam

Kanur temple

1924-ல் வெள்ளம் வந்தபோது கோயில் முழுவதும் மூடிவிட்டது. அதன்மீது ஒரு கரும்பு மட்டுமே முளைத்திருக்கக் கண்டு, திரு. என். சுப்பிரமணியஐயர் என்பர் முயன்று தோண்டிப் பார்த்தபோது கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இப்பெருமானுக்கு கரும்பேஸ்வரர் என்று பெயராயிற்று.

 

(திருக்கானூர் என்னும் ஊர்ப் பெயர் மாறி, இன்று மக்கள் குடியிருப்பு ஒரு சிலவே இருப்பதாலும், மணற் பகுதியை அடுத்திருப்பதாலும் மக்கள் இவ்விடத்தை மணல் மேடு என்றே வழங்குகின்றனர்.)

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. வானார்சோதி மன்னுசென்னி (1.73);                      அப்பர்      -    1. திருவின் நாதனுஞ் (5.76); பாடல்கள்      :    சம்பந்தர்    -       ஆனூரா வுழிதருவான் (1.61.9);                      அப்பர்      -        ஆனைக் காவில் (4.15.2),                                           இடைமரு தீங்கோ (6.70.3);                                        சுந்தரர்     -        மருகல் உறைவாய் (7.47.5);                     சேக்கிழார்   -        அதன் மருங்கு கடந்து (12.34.308) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                           பொங்கு புனலார் (12.21.301) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.  

 

 

Specialities

 

  • விமானம் ஏகதளம் - உருண்டை வடிவமானது.
  • அம்பாள் சாளக்ராம விக்ரஹம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு (தனிப் பேருந்தில், வாகனங்களில் வருவோர்) திருக்கண்டியூரிலிருந்து, சிவாலயத்திற்கு நேர் எதிரில் செல்லும் திருக்காட்டுப் பள்ளிச் சாலையில் சென்று திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, அங்கிருந்து காவிரிப் பாலத்தைத் தாண்டி, வலப்புறமாக பிரிந்து செல்லும் கும்பகோணம், மயிலாடுதுறை பாதையில் சிறிது தூரமே வந்து, உடனே இடப்புறமாகப் பிரியும் விஷ்ணம்பேட்டை சாலையில் திரும்பிச் சென்று, விஷ்ணம்பேட்டையை அடைந்து, (வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு) திருக்கானூர் கோயிலுக்குச் செல்லும் வழியைக் கேட்டறிந்து அச்சாலையில் (மண்சாலை) நடந்து செல்ல வேண்டும். வயல்களின் நடுவே செல்லும் இச்சாலையின் முடிவில் மக்கள் குடியிருக்கும் பகுதிவரும்; அங்கிருந்து மணலில் கொஞ்ச தூரம் நடந்து மேட்டைக் கடந்து கொள்ளிடக் கரைமீதேறி வலப்புறமாகத் திரும்பி சென்றால் சிறிது தூரத்தில் கோயிலை அடையலாம். (விஷ்ணம்பேட்டையில் இருக்கும் குருக்களை அழைத்துக்கொண்டுதான் தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.) தொடர்பு : 04362 - 320067, 09345009344.

Related Content