இறைவர் திருப்பெயர்: ஏடகநாதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஏலவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : புரம தீர்த்தம். வைகை ஆறு
வழிபட்டோர்: புரமன், திருமால், ஆதிசேஷன், கருடன், வியாசர், பராசரர், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர்.
Sthala Puranam
திருஞானசம்பந்தர் ஆற்றிலிட்ட ஏடு எதிரேறி கரையடைந்த தலமாகும். "வாழ்க அந்தணர்" என்னும் பதிக ஏட்டை சம்பந்தர் வைகையில் இட, அது ஆற்று நீரை எதிர்த்துச் செல்ல, பின்பு "வன்னியும் மத்தமும்" என்னும் திருப்பதிகம் பாடியவுடன் அந்த ஏடு ஒதுங்கி நின்ற திருத்தலம்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. வன்னியும் மத்தமும் (3.32); பாடல்கள் : அப்பர் - தெண்ணீர்ப் புனற்கெடில (6.7.7); சேக்கிழார் - ஏடகம் பிள்ளையார் (12.28.850) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
தல தீர்த்தமான பிரம தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபடின் "சித்தப்பிரமை" நீங்குவது இத்தலத்தின் தனிப் பெருமையாகும்.
அம்மன் சந்நிதி கற்றூண் ஒன்றில் திருஞானசம்பந்தரின் சிற்பம் சின்முத்திரையுடனும், தலைமாலையுடனும் (கையில் தாளமின்றி) அழகாக காட்சித் தருகிறது.
பங்குனி உத்திரம் முதலிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஏடு எதிரேறிய விழா ஆவணி முதல் நாளில் நடைபெறுகிறது.
இத்தலம் "பாகனூர்க் கொற்றத்து திருவேடகம்" என்றும், இறைவன் பெயர் "திருவேடகம் உடைய நாயனார்" என்றும் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
Contact Address