logo

|

Home >

hindu-hub >

temples

திருநீலக்குடி (தென்னலக்குடி)

இறைவர் திருப்பெயர்: மனோக்ஞ நாதசுவாமி, வில்வாரண்யேசுவரர்,பிரமநாயகர், நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர், காமதேனுபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அநூபமஸ்தனி (திருமணக்கோலம்),பக்தாபீஷ்டதாயினி (தவக்கோலம்).

தல மரம்:

தீர்த்தம் : தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம தீர்த்தம், க்ஷீரகுண்டம்.

வழிபட்டோர்:அப்பர்,வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் முதலியோர்.

Sthala Puranam

 

 

entrance of the temple

 

 

  • மக்கள் வழக்கில் 'தென்னலக்குடி' என்று வழங்குகின்றது.

     

  • பாற்கடலில் அமுதுகடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சையுண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் திருநீலக்குடி என்றாயிற்று.

 

second entrance of the temple

 

தேவாரப் பாடல்கள்	: 

பாடல்கள்   :   அப்பர்    -    1. வைத்த மாடும் மனைவியும் (5.72);

பாடல்கள்   :   அப்பர்    -       நற்கொடிமேல் (6.71.3).

Specialities

 

  • இத்தலத்திற்கு பஞ்சவில்வாரண்ய«க்ஷத்திரம் என்றும் பெயருண்டு.

     

  • அப்பரின் திருவாக்கில் 'நெல்லுநீள் வயல் நீலக்குடி' என்று மலர்ந்ததற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.

     

  • உட்பிரகாரத்தில் பிரம்மா வழிபட்ட பிரம்மலிங்கம் உள்ளது.

     

  • மூலவர் - சிறப்பான, அதிசய மூர்த்தியாக திகழ்கிறார். இங்கு மூலவருக்கு தைலாபிஷேகம் (எண்ணெய்) விசேஷம். எவ்வளவு எண்ணெய் வார்த்துத் தேய்த்தாலும் அவ்வளவும் பாணத்திற்குள்ளேயே சுவறிப்போகும்; வெளியே வழியாது. தவமிருக்கும் அம்பாளே, சுவாமிக்குத் தலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஆகவே அம்பாள் முன் எண்ணெய் வைத்துப் பின்பு எடுத்துச் சுவாமிக்குத் தேய்ப்பர். (சித்திரை, கார்த்திகை, மாசியில் இந்த அபிஷேகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

     

  • இங்குள்ள பலாமரம் தெய்விகமானது. காய்க்குங் காலத்தில் நித்யபடியாக பலாச்சுளை நிவேதமுண்டு. நிவேதித்த பலாச்சுளைச் சாப்பிடுவது நல்லது. ஆனால் நிவேதிக்காமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக்கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாபழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப்போவது இன்றும் கண்கூடானதொன்றாகும் என்று சொல்லப்படுகிறது.

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தை அடுத்துள்ளது. ஆடுதுறையிலிருந்தும் தென்னலக்குடிக்கு பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு:- 94428 61634 ,0435 - 2460660.

Related Content

திருமங்கலக்குடி