இறைவர் திருப்பெயர்: | பஞ்சவர்ணேஸ்வரர், ஐவண்ணப்பெருமான், மூக்கீச்சரத்தடிகள் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | காந்திமதியம்மை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், குடமுருட்டி |
வழிபட்டோர்: | சம்பந்தர், சேக்கிழார், பிரமன், உதங்க முனிவர், கார்கோடகன் முதலியோர் |
வேதச் சுருதி என்ற அந்தணன் பூஜித்து, பேயுருவம் நீங்கப் பெற்றான்.
சங்ககாலச் சோழர் தலைநகர். "மாட மதுரையும் பீடார் உறந்தையும்", "கறங்கிசை விழாவின் உறந்தை ", "அறந்துஞ்சு உறந்தை", "அறங்கெழு நல்லவை உறந்தை" என்ப சங்க இலக்கியம்.
வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது மதம் பிடித்த யானையைக் கோழி வீரத்துடன் வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு. கோழி முக்கால் யானையை வென்றதால் இத்தலம் மூக்கீச்சரம் எனப்பெற்றது. (முறஞ்செவி வாரணம் முன்சமம் முறுக்கிய புறஞ்செவி வாரணம் - சிலப்பதிகாரம்)
சூரவாதித்த சோழன் வேட்டையாடி வரும் போது நாகதீர்த்த கரையில் (சர்ப்பநதி எனப் பெயர் பெற்ற தீர்த்தம் உறையூருக்கு வடக்கே குடமுருட்டி வாய்க்காலாக இன்றும் ஓடுகிறது: ) நாகராசனின் ஐந்து பெண்களும் தனித்தனி இலிங்கம் வைத்துப் பூசிபதைக் கண்டான். ஐவர்களின் இளையவள் காந்திமதி. சோழன் அவளைக் காதலித்து மணந்த பின், காந்திமதி நாகலோகம் சென்று, தன் தந்தையாகிய நாகராசனிடம் அவன் பூசித்த இலிங்கத்தின் ஒரு பாதியையும், தன் தாய் பூசித்த காந்திமதியம்மை திருவுருவத்தையும், தான் பூசித்த இலிங்கத்தோடு சகோதரிகள் பூசித்த இலிங்கங்களையும் கேட்டுப் பெற்று வாங்கி வருகிறாள்.தன் நாகலோகத்து அரசன் பூசித்த இலிங்கம், ஐந்து பெண்கள் பூசித்த ஐந்து இலிங்கங்கள் ஆக ஆறு இலிங்கத்தையும் தனித்தனியே அமைத்து, நாகலோக
த்திலிருந்து கொண்டு வந்த காந்திமதியம்மை திருவுருவத்தையும், சூர ஆதித்த சோழன் தன் அறையில் வைத்துப் பூசித்து வந்தான், ஒரு நாள் ஆறு இலிங்கங்களும், காந்தியம்மை திருவுருவமும் காணப் பெறாதவனவாயின. அப்போது அசரீரி வாக்கானது 'நாம் வில்வனத்தில் வில்வ நிழலில் ஆறு உருவமும் ஒர் உருவமாகிப் பக்கத்தில் தேவியுடன் வீற்றிருக்கிறோம். அவ்விடமே நமக்கு விருப்பம். அவ்விடத்திலேயே கோயிலை அமைப்பாயாக என்று கூறியது. அவ்வாறே சூரவாதித்தன் கோயில் கட்டுகிறான். இங்கே
குறிப்பிடப்பெறும் ஆறு இலிங்கங்களும் நாகலோகத்தில் பூசிக்கப் பெற்றவை.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சாந்தம் வெண்ணீறெனப்பூசி (2.120); பாடல்கள் : சேக்கிழார் - கற்குடி மாமலை (12.28.343) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : வில்வம்
அவதாரத் தலம் : உறையூர் (மூக்கீச்சுரம்). வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : கருவூர் (கரூர்) குருபூசை நாள் : ஆடி - கார்த்திகை.
உறையூர்ப் புராணம் | மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
உறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் | மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
அமைவிடம் நிர்வாக அதிகாரி, அ/மி. பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி : 0431 - 2768546, 094439 19091.