இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சாந்தநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி.
வழிபட்டோர்: அப்பர், சேக்கிழார், காமதேனு.
Sthala Puranam
தற்போது மக்களால் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.
உமை, பசுவின் வடிவில், தன்கொம்பால் பூமியைக் கிளறியவாறே இறைவனைத் தேடிவந்தபோது, கொம்புப்பட்டுக் குருதி பெருகி இறைவன் வெளிப்பட்டார். உமை (பசு) தன் பாலையே பெருமான்மீது (சிவலிங்க மூர்த்தம்) சொரிந்து புண்ணை ஆற்றினாள் என்பது வரலாறு. மூலத்திருமேனியின் மீது வெட்டுப்பட்டது போன்ற - பசுவின் கொம்பு பதிந்த ஆழமான வடு உள்ளது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. வரைகிலேன் புலன்க ளைந்தும் (4.67), 2. கண்ட பேச்சினிற் காளையர் (5.70); பாடல்கள் : அப்பர் - திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70.9); சேக்கிழார் - நல்லூரில் நம்பர் அருள் (215,216,217 & 291) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.
Specialities
வெளவால் நெத்தி மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷி உருவமும்; ஒருபுறத்தில் மூன்று திருவடிகளுடன் கூடிய ஜ்வரஹரேசன் உருவமுமுள்ளது.
சுரநோயால் வாடுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது.
கார்த்திகை வியாழன் எமகண்டத்தில் ஒவ்வொரு வருடமும் விழா எடுக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெருகிறது.
Contact Address