இறைவர் திருப்பெயர்: நற்றுணையப்பர்.
இறைவியார் திருப்பெயர்: மலையான் மடந்தை, பர்வத புத்ரி.
தல மரம்:
தீர்த்தம் : சொர்ண தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர்,சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்
Sthala Puranam
திருஞானசம்பந்த சுவாமிகள்
எழுந்தருளியபோது இத்தலம் பாலைவனமாக இருந்ததாகவும், அவரது பதிகச் சிறப்பினால் நெய்தல்
(மணல் பிரதேசம்) நிலமாகிப் பின்னர் கானகமாய் மருதமுமாகிச் செழித்தது என்றும் கூறப்படுகிறது.
வயலும் வயல் சூழ்ந்த இடமும் மருதம் எனப்படும்.
"நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானகமாக்கி யஃதே
போதின் மலிவயல் ஆக்கிய கோன்"
என்ற நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் இச்செய்தி
விதந்து கூறப்பட்டுள்ளது.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. காரைகள் கூகைமுல்லை (2.84);
அப்பர் - 1. முற்றுணை யாயினானை (4.70);
சுந்தரர் - 1. ஆதியன் ஆதிரையன் (7.97);
பாடல்கள் : சம்பந்தர் - அறப்பள்ளி (2.39.4);
அப்பர் - புல்ல மூர்தியூர் (5.065.5),
நாக மரைக்கசைத்த (6.002.2),
பல்லார் பயில்பழனப் (6.58.8),
பொருப்பள்ளி (6.71.1);
சுந்தரர் - தேசனூர் வினைதேய (7.31.8),
மறக்கொள் அரக்கன் (7.93.4);
நம்பியாண்டார் நம்பி - நாதன் நனிபள்ளி (11.35.17) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி,
கள்ளம் பொழில்நனி பள்ளித் (11.36.4) ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்,
ஞாலத் தினர்அறிய (11.38.75) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை;
சேக்கிழார் - ஆண்ட அரசு (12.21.189) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
காரைகள் கூகை முல்லை (12.28.115) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
தேவர் பெருமான் (12.29.148 & 149) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
Specialities
Contact Address