logo

|

Home >

hindu-hub >

temples

திரு இராமேச்சுரம் - (இராமேஸ்வரம்)

இறைவர் திருப்பெயர்: இராமநாதர், இராமேசுவரர், இராமலிங்கம்,

இறைவியார் திருப்பெயர்: மலைவளர்காதலி, பர்வதவர்த்தினி

தல மரம்:

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்(கடல்), இராம, இலட்சுமண, தனுஷ்கோடி முதலான 64 தீர்த்தங்கள்

வழிபட்டோர்:இராமர், இலட்சுமணன், சீதாதேவி, அனுமான், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார்

Sthala Puranam

 

rameswaram temple

rameswaram temple inside view

 

இராவணனைக்கொன்ற பிரமஹத்தி நீங்குவதற்காக இராமன், சீதை, இலட்சுமணனுடன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல வேளை குறித்து கைலாசத்திலிருந்து லிங்கம் கொண்டு வரும்படியாக இராமன் அனுமானை அனுப்ப, நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து ஆஞ்சநேயர் லிங்கம் கொண்டுவருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை மணலால் செய்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்யப்பெற்ற லிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை. அனுமனை ஆறுதல் செய்வதற்காக இராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டுவந்த விசுவலிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கே பூசை முதலியன முதலில் செய்ய வேண்டுமென்று இராமன் ஆணையிட்டார்.

இராமபிரான் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் என்றும், அவர் சீதையுடன் புஷ்பவிமானத்தில் இலங்கையிலிருந்து அயோத்திக்குச் செல்லும் போது இந்தத் தலத்தைக் காட்டினார் என்றும் இராமாயணம், சிவபுராணம், பத்மபுராணம், முதலியவற்றில் கூறப்பட்டிருக்கிறது. எவ்வாராயினும் இராமர் இந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை.

இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது எனப்படுகிறது. அங்கே தன் வில்லினால் தோண்டிய தீர்த்தம் தனுஷ்கோடியாகும்.சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குதான் செய்தல்வேண்டும்.

இராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்குப் பிறகும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. பஞ்சபாண்டவர்களும், பலராமரும் (கிருஷ்ண பகவானின் தமையனார்) புராண வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்தத் தலத்திற்கு வந்து வழிபட்டனராம். 'இமசேது பரியந்தம்'' காசி இராமேசுவரம்'' என்று சாதாரணமாக வழங்கும் பழமொழிகள் இராமேசுவரம், சேது இவற்றின் பெருமையைக் காட்டுகின்றன. 
 

 

இராமேஸ்வரம் திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்    -   1. அலைவளர் தண்மதி (3.10),                                     2. திரிதரு மாமணி (3.101);                     அப்பர்      -   1. பாசமுங் கழிக்க கில்லா (4.61);             பாடல்கள்     :   அப்பர்      -      நாடகமா டிட (6.71.8);                   சுந்தரர்     -      ஈழ நாட்டுமா தோட்டம் (7.12.7);                   சேக்கிழார்  -     தேவர் தொழும் (12.21.409) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                        புண்ணியனார் (12.28.887) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

இராமேஸ்வரம் திருக்கோயிலின் பிரகாரத்தில் உள்ள தீர்த்தங்களும் அவற்றின் மகிமையும்

வ எண்

தீர்த்தத்தின்

பெயர்

 

தீர்த்தம் உள்ள இடம்

தீர்த்தத்தின் மகிமை

 

  1.  
மஹாலெட்சுமி தீர்த்தம்அனுமார் கோவிலுக்கு தெற்குப் புறம் உள்ளது

தர்மராஜன்

 ஸ்நானம் செய்து

 ஐஸ்வரியம் பெற்றது

  1.  
சாவித்திரி தீர்த்தம்அனுமார் கோவிலுக்கு மேல் புறம் உள்ளதுகாசிபர் மகாராஜா சாபம் நீங்கியது
  1.  
காயத்திரி தீர்த்தம்அனுமார் கோவிலுக்கு மேல் புறம் உள்ளதுகாசிபர் மகாராஜா சாபம் நீங்கியது
  1.  
சரசுவதி தீர்த்தம்அனுமார் கோவிலுக்கு மேல் புறம் உள்ளதுகாசிபர் மகாராஜா சாபம் நீங்கியது
  1.  
சேதுமாதவ தீர்த்தம்

மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தெப்பக்

குளம்

லெக்ஷ்மி விலாசமும், சித்த சுத்தியும் பெறுவர்
  1.  
கந்தமாதன தீர்த்தம்சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளதுமகா தரித்திரம் நீங்கி சகல ஐஸ்வரியமும் பெற்று பிரம்மஹத்தியாதி பாபநிவர்த்தி பெறுவர்
  1.  
கவாட்ச தீர்த்தம்சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளதுநரகத்திற்குப் போகமாட்டார்கள்
  1.  
கவாய தீர்த்தம்சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளதுகற்பக விருச்ச வாசம்
  1.  
நள தீர்த்தம்சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளதுசூர்ய தேஜஸை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்
  1.  
நீல தீர்த்தம்சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளதுசமஸ்த யாக பலனையும் அடைந்து அக்னி யோக பதவியை அடைவார்கள்
  1.  
சங்கு தீர்த்தம்கோவில் உட்பிரகாரத்தில் உள்ளதுவத்ஸ் நாப முனிவர் செய் நன்றி மறந்த பாவம் நீங்கியது
  1.  
சக்கர தீர்த்தம்கோவில் உட்பிரகாரத்தில் உள்ளதுசூரியன் பொன் கை பெற்றது
  1.  
பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்கோவில் உட்பிரகாரத்தில் உள்ளதுபிரம்மஹத்தியாதி பாவங்கள் நிவர்த்தி
  1.  
சூரிய தீர்த்தம்கோவில் உட்பிரகாரத்தில் உள்ளதுதிரிகால ஞானமும் அந்தந்த உலகப் பிராப்தியும் உண்டாகும்
  1.  
சந்திர தீர்த்தம்கோவில் உட்பிரகாரத்தில் உள்ளதுதிரிகால ஞானமும் அந்தந்த உலகப் பிராப்தியும் உண்டாகும்
  1.  
கங்கா தீர்த்தம்கோவில் உட்பிரகாரத்தில் உள்ளதுஞானசுருதி ராஜன் ஞானம் பெற்றது
  1.  
யமுனா தீர்த்தம்கோவில் உட்பிரகாரத்தில் உள்ளதுஞானசுருதி ராஜன் ஞானம் பெற்றது
  1.  
கயா தீர்த்தம்கோவில் உட்பிரகாரத்தில் உள்ளதுஞானசுருதி ராஜன் ஞானம் பெற்றது
  1.  
சிவ தீர்த்தம்கோவிலுக்குள் நந்தி தேவருக்கு தென்புறம் உள்ளதுபைரவர்பிரம்ம ஹத்தி நிவர்த்தியானது
  1.  
சாத்யமிர்த தீர்த்தம்அம்மன் சன்னதியில் உள்ளதுபுருரூனு சக்கரவர்த் திக்கு சாபம் நீங்கியது
  1.  
சர்வ தீர்த்தம்ஸ்ரீ இராமநாத சுவாமி சன்னதிக்கு முன்னால்சுதரிசனர் பிறவிக் குருடும், நோயும் நரை திரையும் பலமற்ற சரீரமும் நீங்கி வளமடைந்தது.
  1.  
கோடி தீர்த்தம்கோவில் முதல் பிரகாரத்தில் உள்ளதுஸ்ரீ கிருஷ்ண பகவான் மாமனாகிய கம்ஸனைகொன்ற பாவம் நீங்கியது

இராமேஸ்வரம் திருக்கோயிலைச் சுற்றியுள்ள தீர்த்தங்கள்

வ எண்

தீர்த்தத்தின்

பெயர்

 

தீர்த்தம் உள்ள இடம்

தீர்த்தத்தின் மகிமை

 

  1.  
வேதாள வரத தீர்த்தம்மண்டபத்திற்கு தெற்கே உள்ளதுசுதரிசனன் சாப  விமோசனம்
  1.  
பாப விநாச தீர்த்தம்மண்டபத்திற்கு தெற்கே உள்ளதுமகாபாதகம் செய்த பிராமணனும் சூத்திரனும் மோட்சம் அடைந்தது
  1.  
பைரவ தீர்த்தம்பாம்பனில் உள்ளதுபிரம்மஹத்தி தோஷ நிவாரணம்
  1.  
கபி தீர்த்தம்பாம்பனில் உள்ளதுஅரம்பை சாப விமோசனம்
  1.  
சீதா குண்டம்தங்கச்சிமடத்திற்கு வடக்கே உள்ளதுஇந்திரன் பிரம்மஹத்தி நீங்கியது
  1.  
மங்கள தீர்த்தம்தங்கச்சிமடத்திற்கு வடக்கே உள்ளதுமனோஜவ ராஜன் ராஜ்யம் அடைந்தது
  1.  
அமிர்த வாபி தீர்த்தம்ஏகாந்தராமசுவாமி கோயிலில் உள்ளதுஅகஸ்தியர் சகோதரன் மோட்சம் அடைந்தது (சர்வ அபிஷ்ட சித்தி)
  1.  
ருண விமோசன தீர்த்தம்ஏகாந்தராமசுவாமி  கோயிலில் வடக்கே உள்ளதுசமஸ்த கடன்களும் நிவாரணம்
  1.  
லெக்ஷ்மண தீர்த்தம்இராமேஸ்வரம்-பாம்பன் ரஸ்தாவில் உள்ளதுபலராமனுக்கு பிரம்மஹத்தி நீங்கியது
  1.  
ராம தீர்த்தம்இராமேஸ்வரம்-பாம்பன் ரஸ்தாவில் உள்ளதுதர்மராஜன் பொய் சொன்ன பாவம் நீங்கியது
  1.  
சீதா தீர்த்தம்இராமேஸ்வரம்-பாம்பன் ரஸ்தாவில் உள்ளதுதர்மராஜன் பொய் சொன்ன பாவம் நீங்கியது
  1.  
சுக்ரீவ தீர்த்தம்கந்தமாதன பர்வதம் செல்லும் பாதையில் உள்ளதுபூர்வ ஞானமும்  சூர்யலோகபதியும் அடைவர்
  1.  
அங்கத தீர்த்தம்கந்தமாதன பர்வதம் செல்லும் பாதையில் உள்ளதுதேவேந்திர பதவி பிராப்தி
  1.  
ஜாம்பவ தீர்த்தம்கந்தமாதன பர்வதம் செல்லும் பாதையில் உள்ளதுஆயுள் விருத்தி
  1.  
கெந்தமாதன தீர்த்தம்கந்தமாதன பர்வதம் செல்லும் பாதையில் உள்ளதுவைகுண்ட பிராப்தி
  1.  
தரும தீர்த்தம் இஷ்டார்த்த சித்தி
  1.  
வீமன் தீர்த்தம் இஷ்டார்த்த சித்தி
  1.  
அருச்சுனன் தீர்த்தம் இஷ்டார்த்த சித்தி
  1.  
நகுல தீர்த்தம் இஷ்டார்த்த சித்தி
  1.  
சகாதேவ தீர்த்தம் இஷ்டார்த்த சித்தி
  1.  
திரௌபதை தீர்த்தம்பத்ரகாளி கோவிலுக்கு பக்கத்தில் உள்ளதுஸ்தீரி புருஷர் நேசமாய் தீர்க்காயுஷை அடைவார்கள்
  1.  
பிரம்மதீர்த்தம்பத்ரகாளி கோவிலுக்கு பக்கத்தில் உள்ளதுபிரம்மதேவனுக்கு சாப நிவர்த்தி
  1.  
அனுமகுண்ட தீர்த்தம்பத்ரகாளி கோவிலுக்கு பக்கத்தில் உள்ளதுதர்ம சகாராஜன் புத்திர ப்ராப்தியை அடைந்தது
  1.  
அக்னி தீர்த்தம்இராமநாத சுவாமி  கோவிலுக்கு எதிர்புறம் உள்ள சமுத்திரம் 
  1.  
நாக தீர்த்தம்கோவிலுக்கு ஈசான திக்கில் தேவஸ்தான மடத்தில் உள்ளதுகங்கை முதலிய  சகல தீர்த்தங்களும் பரிகரிக்கும் நிமித்தம் இதில் வாசம் செய்வதால் ஸ்நானம் செய்பவர்களுக்கு மோட்ச சித்தியைத் தரும்.
  1.  
அகஸ்திய தீர்த்தம்கோவிலுக்கு ஈசான திக்கில் உள்ளது.கட்சிவான் மனோரமையை அடைந்தது.
  1.  
ஜடாயு தீர்த்தம்தனுஷ்கோடி செல்லும் பாதையில் உள்ளதுபிருகு, தத்தாத்ரேயர், துருவாசர், சுகர், சித்த சுத்தி அடைந்தது.
  1.  
தனுஷ்கோடி தீர்த்தம்தனுஷ்கோடியில் உள்ள சமுத்திரம் (இரத்தினாஹாரமும் மஹோததியும் ஒன்றாக கூடும் இடம்)அசுவத்தாமன்   நித்திரை செய்தவர்களை கொன்ற  பாவமும், தர்ம குப்தன் பைத்தியமும், பராவசு என்ற பிராமணன் பிரும்மஹத்தி தோஷமும், சுமதி மகா பாதகமும், தராசாரான் சம்சர்க்க பாதக தோஷமும் நிவர்தியானது.
  1.  
தேவதீர்த்தம்ஸ்ரீராமசந்நிதிக்கு முன்னால்அசுரர்களை ஜெயிக்கும் நிமித்தம் இந்திரன் யாகம் பண்ணியது
  1.  
கஜன் தீர்த்தம்ஸ்ரீராமசந்நிதிக்கு முன்னால்இந்தத் தீர்த்தங்களில் ஆட சமஸ்த பாப நிவாரணம்
  1.  
சரவண தீர்த்தம்ஸ்ரீராமசந்நிதிக்கு முன்னால்இந்தத் தீர்த்தங்களில் ஆட சமஸ்த பாப நிவாரணம்
  1.  
குமுதம் தீர்த்தம்ஸ்ரீராமசந்நிதிக்கு முன்னால்இந்தத் தீர்த்தங்களில் ஆட சமஸ்த பாப நிவாரணம்
  1.  
ஹரன் தீர்த்தம்ஸ்ரீராமசந்நிதிக்கு முன்னால்இந்தத் தீர்த்தங்களில் ஆட சமஸ்த பாப நிவாரணம்
  1.  
பனகன் தீர்த்தம்ஸ்ரீராமசந்நிதிக்கு முன்னால்இந்தத் தீர்த்தங்களில் ஆட சமஸ்த பாப நிவாரணம்
  1.  
விபீஷண தீர்த்தம்ஸ்ரீராமசந்நிதிக்கு முன்னால்மனோதுக்கம் சமஸ்தரோகம் மகா தரித்ரம் துஷ்வப்னம் நிவர்த்தி

 

சேது தீர்த்தம் 
சேது தீர்த்தத்தில் நிராடுதலையும் , ராமேசுவரம் கோயிலை வழிபடுதலையும் ஒவ்வொரு இந்துவும் தம் வாழ்நாளில் செய்யவேண்டிய கடமையாகக் கருதுகிறார்கள். சேது தீர்த்தத்தில் நீராடுதல் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாகக் கருதப்படும் கோயில்களில் ஒன்று இராமேசுவரம்.சேது தீர்த்தத்தில் நீராடி, இராமேஸ்வரத்தை வழிபட்டால் மக்கட் பேறு கிடைக்கும் என்று இந்துக்கள் எல்லோரும் நம்புகின்றனர். இராமேசுவரத்திலுள்ளவர்கள் நிலங்களை எருதுகள் கொண்டு இப்போதும் உழுவதில்லை. மற்ற இடங்களில் இருப்பதுபோல் இங்கே எண்ணெய் ஆட்டும் செக்குகளும் இல்லை

இது, ஜோதிர்லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும்.இத்திருக்கோயில் காசிக்கு நிகரான யாத்திரைத் தலமாக முக்கியத்துவம் பெற்றது. காசிக்குத் தொடங்கப்பட்ட யாத்திரை இராமேசுவரத்தில் மூர்த்தியை வழிபட்ட பின்னர்தான் முடிவு பெறுகின்றது. காசிக்குச் சென்ற பயன் கைகூடுவது இராமேசுவரத்தில் தான் என்பது ஆன்றோர் வாக்கு. இராமேசுவரத்தில் வழிபாடும், மகோததியும் (வங்காள விரிகுடா) இரத்தினாகரமும் (இந்துமாகடல்) கூடுமிடமான
தனுஷ்கோடியில் (சேது) முழுக்கும் செய்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும். இரு கடல் சங்கமத்தில் பிதுர்க் கடன் செய்தலும், அஸ்தி கரைத்தலும் வழக்கமாக நடக்கின்றன. தொடர்ந்து காணப்படும் பாறைகளும் சிறு தீவுகளும் பழம்பெரும் சேதுவின் எஞ்சிய பகுதிகள் என்று சொல்லப்படுகின்றன.

இராமேஸ்வரம் திருவிழாக்கள் 
வசந்தோற்சவம்    வைசாக சுக்கில சஷ்டி- வைசாக பௌர்ணமி            10 நாட்கள்
இராமலிங்கப் பிரதிஷ்டை உற்சவம்    ஜேஷ்ட (ஆனி) சுக்கில சுத்த சஷ்டி - அஷ்டமி        3 நாட்கள்
திருக்கல்யாணம்    ஆஷாட (ஆடி) பகுள கிருஷ்ணாஷ்டமி  -  சிராவண சுத்தம்        17 நாட்கள்
நவராத்திரி விழா    பாத்ரபத (புரட்டாசி ) சுத்த சுக்கில பிரதமை  - தசமி                 10 நாட்கள்
கந்த சஷ்டி        ஆஸ்வீஜ (ஐப்பசி) சுத்த சுக்கில பிரதமை - ஆஸ்வீஜ சுத்த சஷ்டி        6 நாட்கள்
ஆருத்திரா தரிசனம்    மார்க்க சீரிஷ (மார்கழி ) சுத்த சஷ்டி - சுத்த பெவர்ணமி        10 நாட்கள்
தெப்போற்சவம்     தை பௌர்ணமி பஞ்ச மூர்த்தி புறப்பாடு 
மகாசிவராத்திரி      மாக (மாசி) கிருஷ்ணபட்சம் சஷ்டி - அமாவாசை            10 நாட்கள்

இங்கு உள்ள நந்தி (செங்கற் சுண்ணாம்பு) சுதையால் ஆக்கப்பெற்றது. நீளம்: 22 அடி.அகலம்: 12 அடி, உயரம் : 17 அடி.

இராமநாதர் கோயிலுக்கு உயர்ந்த மதிற் சுவர்கள் உள்ளன. கிழக்கு மேற்கில் 865 அடி நீளமும், தெற்கு வடக்கில் 657 அடி அகலமும் இருக்கின்றன. 

பிரகாரங்கள்: இந்தக் கோயிலில் மிகச்சிறந்த பகுதி அதன் நீண்ட பிரகாரங்கள். இருபுறங்களிலும் ஐந்தடி உயரமுள்ள மேடை மேல் தூண்கள் வரிசையின் நடுவே இப்பிரகாரங்கள் அமைந்துள்ளன. மூன்றாவது மேற்குப் பிரகாரமும் மேற்குக் கோபுர வாயிலிலிருந்து சேது மாதவர் சந்நதிக்குப்போகும் வழியில் கூடுமிடமும் சொக்கட்டான் பலகைபோல் அமைந்திருப்பதால், அந்த இடத்திற்குச் சொக்கட்டான் மண்டபம் என்று பெயர். வசந்தோற்சவத்தில் இம்மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளச் செய்யப்படும். ஆடி,மாசி மாதங்களில் ஆறாம் நாள் திருவிழாக்களும் இங்கு தான் நடத்தப் பெறுகின்றன. மூன்றாவது வெளிப்பிரகாரம் உலகத்திலேயே மிக நீண்டது என்ற பெருமை பெற்றது. தெற்கு வடக்குப் பிரகாரங்கள் ஒவ்வொன்றும் 640 அடி நீளமும் கிழக்கு மேற்குப் பிரகாரங்கள் ஒவ்வொன்றும் 400 அடி நீளமும் உடையன.கிழக்கு மேற்கு உட்பிரகாரங்கள் ஒவ்வொன்றும் 244 அடி நீளமும், தெற்கு வடக்கு உட்பிரகாரங்கள் ஒவ்வொன்றும் 352 அடி நீளமும் உடையன. அவற்றின் அகலம் 15 1/2 அடி முதல் 17 அடி வரையுள்ளது. கோயிலின் முக்கிய சந்நிதியைச் சுற்றிலும் தனிப் பிரகாரங்கள் இருக்கின்றன. கிழக்கிலும் மேற்கிலும் உள்ளவை ஒவ்வொன்றும் 117 அடி நீளமும், தெற்கிலும் வடக்கிலும் உள்ளவை ஒவ்வொன்றும் 172 அடி நீளமும் உடையன. அவற்றின் அகலம் 143 அடி முதல் 17 வரையுமாகும். ஆகவே கோயிலிலுள்ள  பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி; வெளிப்பிரகாரத்தில் 1200 தூண்கள் இருக்கின்றன. அவற்றின் உயரம் தரையிலிருந்து மேல்தளம் வரை 30 அடி. இவையே கோயிலில் மிக அழகிய சிற்பச் சிறப்புடையனவை. மிருதுவான கல்லால் கட்டப்பெற்றிருக்கின்றன. 

இராமேஸ்வரம் கோயில் கட்டிய வரலாறு கி. பி. 12-ம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரம பாகு என்பவர் இத்திருக்கோயிலில் இப்போதுள்ள மூலஸ்தானத்தை (கர்ப்பக் கிரஹம்) கட்டினார் என்பதற்குரிய சான்றுகள் உள்ளன.அதன் பின் பதினைந்தாவது நூற்றாண்டில் இராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி அவர்களும், நாகூரைச் சேர்ந்த வைசியர் ஒருவரும் 78 அடி உயரமுள்ள மேற்குக் கோபுரத்தையும் மதில் சுவர்களையும் கட்டினர். மதுரையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் அம்பாள் கோவில் பிரகாரம் மற்றும் சில திருப்பணியையும் செய்தார். பதினாறாம் நூற்றாண்டில் கோயிலின் தெற்கு இரண்'டாம் பிரகாரத்தை இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி கட்டினார். பின்னர் அதே நூற்றாண்டில் மதுரை மன்னர் விசுவநாத நாயக்கன் கீழ் குறுநில மன்னராக இருந்த சின்ன உடையான் சேதுபதி கட்டத் தேவர் நந்தி மண்டபத்தையும் மற்றும் சில திருப்பணிகளையும் செய்தார். பதினேழாவது நூற்றாண்டில் தளவாய் சேதுபதி அவர்களால் திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபுரத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டது. பதினெட்டாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் அம்பாள் சன்னதியில் பள்ளியறையும், முன் மண்டபமும் இரவி விஜயரெகுநாத சேதுபதி என்பவரால் கட்டப்பட்டது. பின்னால் அதே நூற்றாண்டில் முத்து ராமலிங்க சேதுபதி அவர்களால் உலகப் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது.

 

  • பாண்டியர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டுகள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு ராமேஸ்வரம் இரயில்நிலையத்திலிருந்து 1.5-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பெருநகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தனுஷ்கோடி செல்பவர்கள் தனுஷ்கோடி இரயில் நிலையம் வரை இரயிலில் செல்வதுதான் சிறந்தது. அங்கிருந்து 3-கி. மீ. தூரத்தில் தனுஷ்கோடி தீர்த்தம் உள்ளது. தொடர்புக்கு :- 04573 - 221223.

Related Content

திருப்பருப்பதம் - (ஸ்ரீசைலம் ஜோதிர்லிங்கம் )

ஸோமநாதம் ஜோதிர்லிங்கம் (சோம்நாத், சௌராஷ்ட்ரம், குஜராத் )

உஜ்ஜைனி மஹாகாலேஸ்வரர் திருக்கோயில் (ஜோதிர்லிங்கம்)

ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கம் தலபுராணம் Omkareshwarar Jyotirli