பாயிரம்.
விநாயகர் துதி.
திருவி னாயகன், மருக னாகிய,
ஒருகை மாமுகன், சரண மோதுவாம்.
கடவுள் வாழ்த்து.
சபாநாயகர்.
கானேந்துகுழற்கவுரிவிழிகளிப்பவிருமுனிவர்கனிந்துபோற்றத்
தேனேந்துமலர்ப்பொழில்சூழ்தில்லைநடந்தனையியற்றுதேவதேவன்
வானேந்துமைம்பூதவகையனைத்துந்தன்னுருவாவயங்கக்காட்டு
மானேந்துகரத்தொருவன்மலரேந்துசரணமலர்வழுத்திவாழ்வாம்.
சிவகாமவல்லியார்.
சிலையொருகையடக்கியலைகடலொருகையடக்கியபின்செழுந்தமிழ்க்கு,
நிலையதனைவயக்குமமர்முனிவனுக்கோர் மொழியுதவு நிமலனைத்தந்,
தலைமகளைக்கலைமகளை யணிவிழியாக் கொண்டகிலமளிக்குந்தெய்வ,
மலையரயன்பயந்தபரம்பரையடியை யிறைஞ்சிமனவாட்டந்தீர்வாம்.
குமாரக்கடவுள்.
அன்றோங்கிச்சூர்தடிந்திட்டறனோங்குமமரர்துயரனைத்துமோட்டிச்,
சென்றோங்கிவருந்தகரையூர்ந்திமையாவிழி படைத்ததேவர்க்கெல்லா,
நன்றோங்கவவருறையு நாடுதவிக்கல்லார நலக்கமேவுங்,
குன்றோங்குமொருகுகனைக் குறைநீங்க நெஞ்சகத்தாற்குறித்து வாழ்வாம்.
சமயகுரவர்.
கந்தநாண்மலரயன்றாழ்காழி வருமறைக்கன்றைக்கயிலைதன்னை,
யந்தமில்சீரையாற்றிற்கண்டவருட்பெருங்கடலையானையூர்ந்து,
கொந்தவிழ்நாண் மலர்க்கொன்றையான் பறம்புகண்ட குணக்குன்றையன்று,
மந்திரர்கள்பெருந்தகையாய் வாதவூர் வருமணியைவழுத்தி வாழ்வாம்.
அறுபத்து மூவர்.
சித்த மாசகல், முத்தி சேரறு
பத்து மூவர்நங், கத்த ராவரே.
அவையடக்கம்.
மதிவளர் சடாடவி மன்ற வாணனார்.
விதியுளி பூசைபோல் விதியில் பூசையுங்
கதுமெனக் கோடலாற் கடையன் புன்சொலு
மதியுடை யறிஞர்கண் மரபிற் கொள்வரே.
பாயிரம் முற்றிற்று.
நூல் வரலாறு.
திவ்விய மங்கள தேஜோமயமாகிய சிவபெருமானே பரம்பொருளென்றுணர் ந்த உண்மைஞானத்தையுடைய வசிட்டர் – வேதாரணியர் – புலத்தியர் – துருவாசர் – சுகர் – மாண்டவியர் – சம்வர்த்தர் – சுநச்சேபர் – சம்புபத்தர் – சதாநந்தர் – ஆத்திரேயர் – சௌநகர் - புலகர் – சமதக்கிநி – சங்கர் – மாதேசர் – லிகிதர் – பராசர் – குற்சர் – கற்கர் – நாரதர் – விச்சுவாமித்திரர் - பரத்துவாசர் – உத்தாலகர் – காசிபர் – வாமதேவர் - கண்ணுவர் முதலாகிய ருஷிசிரேஷ்டர்கள் முன்னொரு காலத்தில் நைமிசாரண்ணி யத்தில் திருவெண்ணீறு சண்ணித்து, திரிபுண்டரமணிந்து, அக்கமாலைசூடிச் சிவத்தி யாநபரராய், வேதாகமங்களாற் பரமபதியைத்துதித்து வாழ்ந்திருந்தனர். அக்காலத்துச் சதுர்வேத ஷடங்க அஷ்டாதஶபுராணங்களை வியாதமுநிவர்பால் ஐயந்திரிபறவுணர் ந்த புண்ணியவடிவினராகிய ஸூதபுராணிகர் அங்கெழுந்தருள, முநிவர்கள் கண்டு எதிர்கொண்டழைத்து அருக்கியபாத்திய ஆசமாதிகளாலுபசரித்துத் தகுந்த ஆதநத்தி ருத்தி “மும்மலமற்ற முநிபுங்கவரே! எமது தவப்பேற்றால் தேவரீர் ஈண்டெழுந்தரு ளப் பெற்றோம். சிவபிரானே அகிலலோக சிருஷ்டியாதி பஞ்சகிருத்திய காரணரெ ன்றும், அவரது திருவடியே அழிவற்ற நற்கதியையளிப்பதென்றும், அவரை மகிழச் செய்வது ஸ்ரீ பஞ்சாக்ஷரமந்திரமேயென்றும் யாங்கள் உணர்ந்திருந்தும் அப்பெருமா னது புகழைக் குறிக்கும் பலபுராணங்களைத் தேவரீர் அடியேங்கட்குபதேசித்திருந் தும், அம்மகாதேவன் அடியார்க்குறும் இடுக்கண்களைந்து இஷ்ட சித்திகளை யருளும்படி அநாதியே சகளீகரித்த அவசரங்களென்னும் அஷ்டாஷ்ட மூர்த்தமாகிய சிவபராக்கிரமத்தை நன்குணரும்படி அநுக்கிரகஞ்செய்யவேண்டும்'' என்று விண்ணப்பிக்க, ஸூதமுனிவர் “நைமிசாரணியவாசிகளே! பெரியோரைச் சேவித்தது வீண்போகாமற் சிவபுண்ணியத்தைப் பெறச்செய்தீர்கள்” என்று கூறிச்சிறிதுநேரம் அசைவறச் சிவயோக நிஷ்டைகூடி வீற்றிருந்து, காளகண்டமுங் கண்ணொரு மூன்றுந் தோளொருநான்குஞ் சுடர் முகமைந்துமுள்ள சுயஞ்சோதியாகிய சிவபிரானை யுள்ளத்திருத்தி "நீங்கள் விரும்பிய சரிதை பதினெண் புராணங்களிலுஞ் சிறந்த புராணரத்திநமாக விளங்கும் ஸ்ரீஸ்காந்த மகா புராணத்திலுள்ள சநற்குமார சங்கிதை – சூதசங்கிதை - சங்கரசங்கிதை விஷ்ணு சங்கிதை - பிரமசங்கிதை - சூரியசங்கிதையாகிய ஆறு சங்கிதைகளுள், சநற்குமார சங்கிதையில் மூர்த்திமான்மியமுரைத்த சர்க்கத்தில், திருநந்திதேவர் சநற்குமாரமுநிவருக்குக் கூறியதாக வுள்ளது. இதனை அவர்பாற்றெரிந்த வியாதமுநிவர் எனக்குபதேசித் தருளினர். அதனை ஒருவகையாகக் கூறுகின்றேன். திரிகரண சுத்தியோடு கேட்பீர் களாக'' என்று சூதமுநிவர் எம்பெருமானது அஷ்டாஷ்ட மூர்த்தங்களின் பிரபாவத் தைக் கூறக்கேட்டு உரை குழற, உடலசைய, உள்ளமுருக, இன்பவெள்ளம் பெருகப்பரவினர் பாடினர் – ஆநந்தக்கூத்தாடினர். பரவசராய் அத்திருவுருவங்களை யருச்சித்து அரியபுண்ணியத்தைக் கைக்கொண்டு எழுந்தருளி யிருந்தனர்.
அஷ்டாஷ்டமூர்த்த நாமத் தியாநம்
“லிங்கம்லிங்கோத்பவஞ்சைவ முகலிங்கம்ஸதா ஶிவம்
மஹாஸதாஶிவஞ்சைவோ மாமஹேஶமத:பரம்
ஸுகாஸநமுமேஶந்து ஸோமாஸ்கந்தந்ததைவச
சந்த்ரஶேகரமூர்த்திஞ்ச வ்ருஷாரூடம்வருஷாந்திகம்
புஜங்கலளிதஞ்சைவ புஜங்கத்ராசஸமேவச
ஸந்த்யாந்ருத்தம்ஸதாந்ருத்தம் தாண்டவம்ஜாஹ்நவீதரம்
கங்காவிஸர்ஜநஞ்சைவ த்ரிபுராந்தகமேவச
கல்யாணஸுந்தரஞ்சைவ அர்த்தநாரீஶ்வரந்ததா
கஜயுத்தம்ஜ்வராபக்நம் ஶார்த்தூலஹரவிக்ரஹம்
ததாபஶுபதஞ்சைவ கங்காளம்கேஶவார்த்தகம்
பிக்ஷாடநந்துஶிம்ஹக்நம் சண்டேஶ்வரப்ரஸாதகம்
தக்ஷிணாமூர்த்திதத்பேதம் யோகவீணாதரந்ததா
காலாந்தகந்துகாமாரிம் லகுளேஶ்வரபைரவம்
ஆபதுத்தாரணஞ்சைவ வடுகம்க்ஷேத்ரபாலகம்
வீரபத்ரமகோராஸ்த்ரம் தக்ஷயஜ்ஞஹரந்ததா
கிராதம்குருமூர்த்திஞ்ச அஶ்வாரூடம்கஜாந்திகம்
ஜலந்தரவதஞ்சைவ மேகபாதந்த்ரிமூர்த்திகம்
த்ரிமூர்த்தித்ரிபதஞ்சைவ ததாகௌரீவரப்ரதம்
சக்ரதாநஸ்வரூபஞ்ச கௌரிலீலாஸமந்விதம்
விஷாபஹரணஞ்சைவ கருடாந்திகமேவசமவச
ததாப்ரஹ்மஶிரஶ்சேதம் கூர்மஸம்ஹாரமேவச
மத்ஸ்யாரிந்துவராஹாரிம் ப்ராத்தநாமூர்த்தமேவச
ரக்தபிக்ஷாப்ரதாநஞ்ச ஶிஷ்யபாவந்ததைவச
ஷடாநநந்ததாஷ்டாஷ்ட விக்ரஹம்பாவயேத்ஸதா."