"வேதமோ டாகம மெய்யா மிறைவனூ
லோதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக
நாக னருளவை நாடிலிரண் டந்தம்
பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே”- என்றதும்.
"வயந்துவேத ஶிவாகமயோர்ப்பேதம் நபஶ்யாம:வேதோபி ஶிவாகம:” - வேதசிவாகமங்கட்குப் பேதங்காண்கின்றிலம். வேத மேசிவாகமம். - என்றதும்; இப்பெற்றி நோக்கியேயென்க.
ஆகமங்கள் | கிரந்தசங்கியை | உபபேதங்கள் | திருஅங்கம் |
காமிகம் | பரார்த்தம் | மூன்று | திருவடி |
யோகஜம் | இலக்ஷம் | ஐந்து | கணைக்கால் |
சிந்தியம் | இலக்ஷம் | ஆறு | திருவடிவிரல்கள் |
காரணம் | கோடி | ஏழு | கெண்டைக்கால் |
அசிதம் | நியுதம் | நான்கு | முழந்தாள் |
தீப்தம் | நியுதம் | ஒன்பது | தொடை |
சூக்ஷ்மம் | பதுமம் | ஒன்று | குய்யம் |
ஸஹஸ்ரம் | சங்கம் | பத்து | கடித்தானம் |
அஞ்சுமான் | ஐந்துலக்ஷம் | பன்னிரண்டு | முதுகு |
சுப்ரபேதம் | மூன்றுகோடி | ஒன்று | கொப்பூழ் |
விஜயம் | மூன்றுகோடி | எட்டு | உதரம் |
நிஸ்வாஸம் | கோடி | எட்டு | நாபி |
ஸ்வயம்பூதம் | ஒன்றரைக்கோடி | மூன்று | முலை |
ஆக்நேயம் | முப்பதினாயிரம் | ஒன்று | கண் |
வீரம் | நியுதம் | பதின்மூன்று | கழுத்து |
ரெளரவம் | எட்டற்புதம் | ஆறு | செவி |
மகுடம் | இலக்ஷம் | இரண்டு | திருமுடி |
விமலம் | மூன்றிலக்ஷம் | பதினாறு | கை |
சந்திரஞானம் | மூன்றுகோடி | பதினான்கு | மார்பு |
முகவிம்பம் | இலக்ஷம் | பதினைந்து | திருமுகம் |
புரோற்கீதம் | மூன்றிலக்ஷம் | பதினாறு | திருநாக்கு |
இலளிதம் | எண்ணாயிரம் | மூன்று | கபோலம் |
சித்தம் | ஒன்றரைக்கோடி | நான்கு | நெற்றி |
சந்தானம் | ஆறாயிரம் | ஏழு | குண்டலம் |
சர்வோக்தம் | இரண்டிலக்ஷம் | ஐந்து | உபவீதம் |
பாரமேசுவரம் | 12-இலக்ஷம் | ஏழு | ஆரம் |
கிரணம் | ஐந்துகோடி | ஒன்பது | இரத்தினாபரணம் |
வாதுளம் | இலக்ஷம் | பன்னிரண்டு | பரிவட்டம் |
இவ்வாகமங்கள் சாதாக்கிய மூர்த்தியாகிய இப்பெருமானுக்கு இவ்வாறு திருமேனியாகக் கூறப்படும். [திருவை அங்கங்களுக் கெல்லாங் கூட்டி யுரைத்துக் கொள்க.]
இவர் படிகநிறம் – சடைமுடி - ஐந்து திருமுகம் - பத்துக்கரங்கள் – ஒருதேகம் - இரண்டு திருவடிகள் - வலக்கரத்து இச்சை ஞாநக்கிரியையென்னும் மூவிலைச் சூலமும், பராசத்தி ரூபமாயமழுவும், கர்த்துருபாவமான கட்வங்கமும், வாளும், பீஜாபூரகமும், வச்ரமும், ஜநநபயத்தைப் போக்குவதான அபயமும், இடக்கரத் துரித்தி குணமாகிய நாகமும், தூல சூக்கும பூதங்களை நடத்தும் மாயாரூபமாகிய பாசமும், குணமாகிய நீலோற்பலமும், அங்குசமும், சுத்தா சுத்த அத்துவாவைப் பிரவர்த்திக்குங் குணமான தமருகமும், போகத்தைத்தரும் வரதமும், நாதகுணமா கிய மணியும், சங்கார குணமாகிய அக்கிநியும், திரோதாயி யென்னும் பரிவட்டமும், அருளாகிய சுகந்தமும் பரையாகிய மாலையும், அநுக்கிரகாங்குரமான சிறுநகையும் பொருந்தித் தியானபூஜாநிமித்தம் சகளத் திருவுருக் கொண் டெழுந்தருளி யிருப்பினும், இவையிற்றிற்கு அப்பாற்பட்டு மிருப்பர். இது கன்மசாதாக்கியத் திருவுருவாதலின், மேற் சிவலிங்கமூர்த்திக்குக் கூறிய அனைத்தும் ஈங்கு மொக்கு மெனவறிக. இவ்வகைப் பிரபாவங்களையுடையது ஸதாசிவமூர்த்தமெனப்படும்.
''பத்மாஸநஸ்தம்பஞ்சாஸ்யம் ப்ரதிவக்த்ரம்திரிலோசனம்
த்ருக்க்ரியேச்சாவிஶாலாக்ஷம் ஜ்ஞாநசந்த்ரகலாந்விதம்
தவளேஶாநவதநம் பீதம்தத்புருஷாநநம்
க்ருஷ்ணாகோரமுகோபேதம் ரக்தாபம்வாமதேவகம்
ஸுஶ்வேதம்பஶ்சிமாஸ்யைகம் ஸத்யோஜாதம் ஸமூர்த்தகம்
நாகோபவீதிநம்ஶாந்தம் ஜடாகண்டேந்துமண்டிதம்
ஶக்த்யஸீஸூகட்வாங்கம் வரவ்யக்ரகராம்புஜம்
தக்ஷிணேவாமஹஸ்தேச டமரும்பீஜபூரகம்
நாகாக்ஷஸூத்ரநீலோப்ஜம் பிப்ராணம்பஞ்சபி:கரை:”
ஸதாசிவாய நம: