logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-simhagna-murthi

ஸிம்ஹக்ந மூர்த்தி

ஸிம்ஹக்ந மூர்த்தி
ஸிம்ஹக்ந மூர்த்தி

 ஹிரண்யகசிபனென்று மியற்பெயருடைய ஒருவன் அசுரகுலத்திற்றோன்றி, தமது குலகுருவாகிய வெள்ளியை விளித்து "ஆசிரியனே! யாரை வணங்கித் தவஞ்செய்தால் அடைதற்கரிய வரம்பெற்று, வரம்பில்காக்காலம் வலிமிகுந்து வாழலாம்'' என வினவ, சுக்கிரன் “அரசர் அரவாபரணனையன்றி யத்தகையவரத்தை யளிப்போர் யாவர்'' என்று, அப்பரமனைப்பணியும் பலமுறையையும் பயிற்றி தனதுலகுசார, ஹிரண்யகசிபு சிவபிரானது திருவடிகளை இதயத்திலிருத்தி எண்ணில்லாக் காலமியற்றிய தவத்திற்கிறைவர் மகிழ்ந்து “யாது வேண்டுவது?'' என, அசுரன் அண்ணலே! பிருதிவி முதலிய ஐம்பூதங்கள் - ஆயுதக்கருவிகள் – வானவர் – மாநுடர் -பறவை - விலங்கு முதலிய பிராணிகள் இவையொன்றனாலும் இரவிலும் பகலிலும் இறவாவரம் வேண்டும்' என்றேற்ப, எம்பிரான் “அவ்வாறே யாகுக," என வரமருளினர்.

தான்பெற்ற வரத்தினாற் றருக்கெய்திய தானவன், நால்வகை சேனையையுங் கடல்போற்கூட்டிக் காசினி முழுதினுக்குங் காவலனானான். தேவரம்பையர் சித்தமாதர் இயக்க ஸ்திரீகள் முதலானாரைச் சாமரையிரட்டப்பணித்து, இந்திரன் முதலிய வெண்டிசைக்காவலர் வந்து நாடொறும் வணங்கிப் பணிப்பனபுரிய வமைத்து, பிரமன் தன்பெயரைக் கேட்கும் தொறு நடுங்கும்படி, கருடர் - காந்தருவர் - சித்தர் வித்தியாதரர் முதலானார் சித்தந்திகைக்கச் செங்கோல் செலுத்தினன். அக்காலத்தில் அவனாக்கினையா லனைவரும் (ஹிரண்யாயநம:) எனக் கூறவேண்டுவதேயன்றி வேறொருவரையுஞ் சொல்லப்படாது. இதனைப்பொறாத இமையவர் விண்டுமூர்த்தியைக் கண்டு விளம்ப, சார்ங்கன் தனதொருகூற்றை அவனது தவப்புதல்வனாக ஜநிப்பித்தனன். அப்புதல்வன் ஐந்து வயதடையப் பள்ளியில் விட்டுப்படிப்பிக்க எத்தனிக்கையில், உத்திரவின்படி உபாத்தியாயர் (ஹிரண்யாய நம:) என்று போதிக்க , சிறுவனாகிய பிரஹலாதன் (ஸ்ரீநாராயணாய நம:) என, ஐயர் அரசனுக்கு அறிவிக்க, அசுரன் பலவகைத்தண்டஞ்செய்தும் பயனுறாமையால் "நீ கூறுகின்ற பரம்பொருள் யாண்டுளது.'' எனக் கேட்க, பிதாவை
நோக்கிப் பிரஹலாதன் “இறைவனெங்குமுளன்'' எனக்கூறினன்.

பாகவத புராணம்.

''சாணிலு முளனோர் பெற்றி யணுவினைச் சதக்கூ றிட்ட
கோணிலு முளன்மா மேருக் குன்றிலு முளனிந் நின்ற
தூணிலு முளனீ சொன்ன சொல்லினு முளனிச் செய்தி
காணுதி விரைவி னென்றா னன்றெனக் கநகன் சொன்னான்."

கேட்ட ஹிரண்யகசிபு கோபங்கொள்கையில், நாராயணன் கரவடிவுஞ் சிங்கவடிவுங் கூடிய நரசிங்கமாகத் தூணைப்பிளந்து கொண்டு வெளிவந்து அவனுடனரும்போராற்றி, அத்தானவத் தலைவனைத் தன்மடியிலிருத்தி, நகங்களால் மார்பைப்பிசந்து குடரைப் பிடுங்கி மாலையாயணிந்து இராப்பகலுக்கி டையாகிய சாயுங்காலப்பொழுதில் மேலிட்டு, ஒரு துளி யுதிரமுங் கீழ்விழாமற் கையிலேற்றும் வாய்வைத்தும் பருகி உயிர்மாய்த்தனர். (அவனைச் சங்கரித்த காலத்தையே இரணியவேளையென்பர் ) திருமகள் கொழுநன் அசுரனுதிரமருந்திய வெறியால் அவனிமாக்களை வாரி வாயிற்பெய்து, செருக்குற்ற செயல்கண்டஞ்சிய தேவர் ஒருநொடியி லுலகமழியுமென வுட்கொண் டோடிச்சென்று, திருக்கைலையை யடைந்து திருநந்திதேவராற் சிவபிரானுக்குரைப்ப, பரமசிவன் “பயப்படாதீர்கள்” என்று பகர்ந்து, இருசிரமும் இணையில்லாச்சிறகும் கூரிய நகமுமுடைய எட்டுக்காலும் நெடியவாலும் பேரிரைச்சலும் கடுங்கோபமுங் கொண்ட சரபத்திருவுருவுடன் நரசிங்கத்தை நண்ணி இடி முழக்கு போலிரைந்து உதிரவெள்ள மூற்றெடுத்தோடச் சிங்கச்சிரசையும் கைகளையுங் கறித்துத்தள்ளி மேலுட்கார்ந்து சிங்கத்தின் சருமத்தை யுரித்துத் திருமேனிபோற் போர்வையாகக் கொண்டு வெள்ளிமலையையடைந்தனர். விண்டு பண்டையவுணர்வு தோன்ற, பரமனைப் பூசித்து நரசிங்கபுராண மோதி வைகுந்தமுற்.றனர்.

நரசிங்கத்தின் சிரத்தை யறுத்துத் தலைமாலையிலணிந்ததாகவும் சரிதமுளது. இரணியகசிபனைச்சங்கரித்த நரசிங்கத்தின் இருமாப்பைச் சரபரூபமேற்று நாசஞ்செய்தமையாற் சிவபெருமான் ஸிம்ஹக்நமூர்த்தியெனப் பெயருற்றனர்.

ருக்வேதம்.- அஹம்ம்ருணா:ஶரபாயருஷிபந்தவே.

ஶ்ருதி-தைத்திரீயம்.

ஹரிக்0ஹரந்தமநுயந்திதேவா:விஶ்வஶ்யேஶாந0ருஷபம்மதீநாம்.

ஸ்காந்தபுராணம்.

ஹரிம்ஹரந்த0ஶரம்பம்விஶ்வஸ்யேஶாநமீஶ்வரம்
அநுயாந்திஸுராஸ்ஸர்வே நமோவாக்யைல்ஸஹாத்ருதம்.

காஶிகாண்டம்.

புராஹிரண்யகஶிபு0புதைத்யராஜம்மஹாபலம்
ஹத்வாதத்ருதிராபாந ப்ரமத்தம்யாசித:ஸுரை:
ருத்ர:ஶரபரூபேண நரஸிம்ஹமபீடயத்.

ந்ருஸிம்ஹோத்தரபுராணம்.

ததோந்ருஹிம்ஹமாலோக்யசங்க்ரம்யகநஸாஹஸ:
தந்ந்ருஹிம்ஹஶிரோயாவந் நகைஶ்சேத்தும்ஸமுத்யத:!இத்யாதி
ஏவம்ஸஶூலசக்ரௌதெள மஹாரணஸமுத்தருதௌ
விலோக்யவிபுதாஸ்ஸர்வே மஹாபயமுபாயய:! இத்யாதி!
ந்ருஹிம்ஹஶரபௌத்ருஷ்ட்வா ததோப்ரஹமஸுரைஸ்ஸஹ
துஷ்டாரிபரமப்ரீத: கரௌக்ருதாம்ஜலி0தத:

ஸ்காந்தபுராணம்.

ஶூலாயுதாயஸுரப்ருந்தகமொளிமாயா
லீலாயமாநசரணாம்புஜபல்லவாய
ஹேலாவலேப்பரிபூதக்ருஹிம்ஹரம்ஹௌ
லீலாபராயஶரபாக்ருதயேநமோஸ்து.

ப்ரஹமாண்ட புராணம்.

ருஷய:- கதம்தேவ: ஸர்வஜகத் ஸ்ருஷ்டிஸ்தித்ய0தகார:
ஶரபாக்யம்மஹாகோரம்விக்ருதம்ரூபமாஸ்தித:
ஸூத:- ஶ்ருண்வந்துருஷயஸ்ஸர்வே - இத்யாதி
ஏதாவதுக்த்வாபகவாந்ஸவ்ரீடம் நரகேஸரீ -
அபாரமேககரணை: ஸமாப்யாத்யம் திகம்ஹரி
தத்ஸே0த்யக்தவாந்விஷ்ணுர்ஜீவிதம்ஸ்வாபராதத:
தத்வக்த்ரம்தஸ்யக்குத்தியஞ்சஹ்ருத்வாஶாரபவிக்ரஹ:
அதேந்த்ரியத்வமகமத்வீரபத்ரகூணாத்தவ:

காஞ்சிப்புராணம்.

''நன்னா லிரண்டு திருவடியு நனிகின் வாலு முகமிரண்டுங்
கொன்னார்சிறகு முருத்திரமுங் கொடும்பேரார்ப்பு மெதிர்த்தோற்றச்
செந்நீர் பருகிச் செருக்குநர மடங்க லாவி செகுத்துரிகொண் 
டொன்னார்குலங்கண் முழுதழித்த வுடையான்சரபத் திருவுருவம்.”

ஸிம்ஹக்நமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

Sarabeswarar in Thirumurais - திருமுறையில் சரபேஸ்வரர்

Sarabeshvarar