logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-umamahesha-murthi

உமாமஹேச மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி
உமாமஹேச மூர்த்தி
  • உலக மாதாவாகிய உமாதேவியார் இறைவன் திருக்குறிப்பின் வண்ணம் பஞ்சகிருத்திய மியற்றி அக்கிரியிலுஷ்ணமும் நீரில் தட்பமும் மலரில் மணமும் மணியிலொளியும் போல அபிந்நாபாவமாயிருப்பாள். அக்கருணையுருவாகிய சத்தியே பஞ்சகிருத்திய நிமித்தமாகக் கிருத்திய பேதத்தால் ஐவகைப்படும். அவை முறையே பராசத்தி – ஆதிசத்தி – இச்சாசத்தி – ஞானசத்தி - கிரியாசத்தி என்பனவாம். அவற்றுட் பராசத்தி பரமசிவத்தி லாயிரத்தொரு கூறு கொண்டது. ஆதிசத்தி பராசத்தியிலாயிரத்தொருகூறு கொண்டது. இச்சாசத்தி ஆதிசத்தியி லாயிரத்தொரு கூறுகொண்டது. ஞானசத்தி இச்சாசத்தியிலாயிரத்தொரு கூறுகொண்டது. கிரியா சத்தி ஞானசத்தியி லாயிரத்தொரு கூறுகொண்டது. இவற்றுள் ஆதிசத்தி ஆத்மாக்களுக்கு விஷய சுகத்தைப் பொருத்தும். இச்சாசத்தி சிருஷ்டியைச்செய்யும். ஞானசத்தி சர்வான்மாக்களுடைய கன்மங்களையும், அந்தக் கன்மங்களுக் கீடான தநு கரண புவந போகங்களையும், உபாதாநத்திரயங்களினின்று முண்டாக்கும்.

வாதுளாகமம்.

''தச்சிவேதுபராஶக்திஸ் ஸஹஸ்ராம்ஶாதஜாயத
தச்சக்தேஶ்துஸ்ஹஸ்ராம்ஶா தாதிஶக்திஸமுத்பவ:
அஸ்யாம்ஶ்ஶக்தேஸ்ஸஹ்ராம்ஶா திச்சாஶக்திஸமுத்பவ:
தச்சக்தேஸ்துஸஹஸ்ராம்ஶாத் ஜ்ஞாநஶக்திஸமுத்பவ:
அஸ்யாஶ்ஶக்தேஸ்ஸஹஸ்ராம்ஶாத் க்ரியாஶக்திஸமுத்பவ:
ஏதாவைஶக்தய:பஞ்ச நிஷ்களத்வேநகீர்த்திதா:
ஶிவஸ்ருஷ்டிரியம்ப்ரோக்தே'' இதி.

இவ்வகையாகத் தோன்றிய ஐவகைச்சாத்திகளில் பின் வரும் பராசத்தியானது பக்குவமலராகிய ஆன்மாக்களைக் கருணையால் அநுக்கிரகிக்கும். ஆதிசத்தியானது ஆணவமலம் பக்குவமாகும்படி செலுத்தும். ஞாநசத்தி சத்தர்க்கு ஞானவொளியாகிச் சர்மசக்ஷுராதி யக்ராஹியமான தேஜோரூபமாம். இப் பஞ்சசத்திகளின் தசாம்சபேதத் தால் சகளநிஷ்களமாகிய ஸதாஶிவரூபமாம். இக் கருத்துப்பற்றியே ''சத்திதான் சிவத்தையீன்றும்'' என அருணந்தி சிவாசாரியர் திருவாய் மலர்ந்தனர். ''கறைக்கண்டனுக்கு மூத்தவளே'' என்றதும் இப்பெற்றி நோக்கியே யென்க. தசாம்சம்
என்றதாற் பத்திலொன்று அகளமாகிய சாதாக்கியமாம்.

வாதுளாகமம்.

"பராஶக்தேர்தஶாம்ஶேக ஶிவஸாதாக்யஸம்பவ:
பராஶக்த்யுத்பவத்வாச்ச ஶுத்தத்வாச்சிவஉச்யதே."

வாதுளாகமம்.

''கர்மேஶஸ்யஸஹஸ்ராம்ஸ்ஹாந் மஹேஶஸ்யஸமுத்பவ:
மஹேஶம்ஸகளம்வித்யாத் ஸ்ருஷ்டிஸ்திதிலயாத்மக:
பஞ்சவிம்ஶத்பேதேந தந்மூர்த்தி:பஞ்சவிம்ஶதி:
ஶுத்தேத்வநிஶிவ:கர்தரப்ரோக்தோநந்தோஸதேப்ரபுரிதி''

உமாமஹேஶாய நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

உமேச மூர்த்தி

சோமாஸ்கந்த மூர்த்தி

சந்திரசேகர மூர்த்தி

ருஷபாரூட மூர்த்தி

ருஷபாந்திக மூர்த்தி