logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-lingamurthi

இலிங்கமூர்த்தி

  •  
  • ஒலி முதலிய புலன்களின்றி மனோ வாக்குகளுக்கெட்டாததாய் 
  • அளவில்லாத பேரொளியாய்த் தனக்குமேல் நாயகமில்லாததாய் அருவமாய் நின்மலமாய்க்குணர கிதமாய் அநந்தகுணமணியாய் வண்ணமற்றதாய் நாசரகிதமாய்ச் சர்வஜகத்துக்கும் ஏதுவாய் அவ்யக்தமெனப் பழமறை பகர்வதாகியுள்ளது சுத்தசிவம். மேற்கூறிய விலக்கணங்களையுடைய அப்பரசிவம் ஆன்மாக்களின் தியாநபாவனா நிமித்தம் நிட்கள சகளத் திருவுருக் கொண்ட நிலை இலிங்கமெனப்படும்.  இத்தேகத்தை யதிஷ்டித்துள்ளவனாகிய பரசிவன் இலிங்கி யாம். 
  • முன்னர்க்கூறிய அவ்விலிங்கம், வ்யக்தம் - வ்யக்தாவ்யக்தம்-அவ்யக்தமென மூவிதமாம். அவற்றுட் சந்திரசேகரர் முதலிய பல திருவுருவங்களையுடைய சகளவுருவமே வ்யக்தம். சகளநிஷ்களமே வ்யக்தாவ்யக்தம். நிஷ்களமே அவ்யக்த மென்பர். இனி வ்யக்தாவ்யக்தம் சிவலிங்கவுருவமாம். 
  • அதன் திருவுருவில் விருத்தமே ருத்ர பாகம். பீடத்தின் அதோபாகத்தின் அடிநான்குமூலை பிரமபாகம். நடுவின் எட்டு மூலைவிஷ்ணுபாகம் இவற்றுட் பிரமபாகம் நபும்ஸ்கலிங்கம். விஷ்ணுபாகம் ஸ்திரீலிங்கம். உருத்திரபாகம் புல்லிங்கமாம். 
  • இதுவே பிரணவமுதற் பொருள். இதன்சோதி யுருவமே மகார அகார உகாரமாயிருக்கும். அகார வாச்சியமே சிவம். உகார வாச்சியமே சத்தி மகாரவாச்சியமே பரம் எனவும், அகாரம் நாதம், உகாரம் விந்து , மகாரம் கலை எனவும், வேதங்கூறும். இவை சிவனது அவ்யக் தவுருவாகிய நிஷ்களம். இவ்வோங்கார சிவசத்திலிங்கத்திற் சதாசிவாதியர் தோற்ற லயமாவர். அகாரங்கண்டம், உகாரங் கோமுகம், மகாரம் வட்டமாய், சிவசாதாக்கியம் – அமூர்த்திசாதாக்கியம் - மூர்த்திசாதாக்கியம் – கர்த்திசாதாக்கியம் - கன்மசாதாக்கியமாகும். அவற்றுள் சிவசாதாக்கியமாவது கரண வியாத்தி யதீத மாய் அதிசூக்குமமாய் மகாசோதியுருவாய் நிரஞ்சநமாய்ப் பரா சத்தியால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. இதுவே லயத்தாநம். இதை யதிஷ்டிக்குஞ் சத்தி சாந்திய தீதை. அமூர்த்தி சாதாக்கியமாவது வடிவுறுதியாய்க் கலைகளுக்கப்பாற்பட்டு அநேக சூரியருதித்ததை யொத்த தாணுலிங்க மத்தியத்திற் காண்டற்கரிய திருவுருப்பெற் றெழுந்தருளியிருப்பது. இஃது அமூர்த்தமாகிய காந்தியென்னுஞ் சத்தியால் அதிஷ்டிக்கப்பட்டிருக்கும். மூர்த்திசாதாக்கியமாவது காணப்பட்ட வடிவையுடைத் தாய்க் காலாக்கிநி தேஜஸை யுடையதாய் இலிங்க வடிவாகி ஊர்த்வபாகத்து ஒருதிருவதனமும் இச்சை ஞாநக் கிரியைகளாகிய மூன்று திருநேத்திரங்களும் அகண்டிதமானமூர்த்தமுமுடையது. இது வித்தை என்னுஞ் சத்தியால் அதிஷ்டிக்கப் பட்டிருக்கும் கர்த்திருசாதாக்கியமாவதுசத்தாய், சுத்தபடிக வொளிகொண்ட திவ்ய லிங்கமாய் நாலுதிருமுகமும் பன்னிரு திருநேத்திரங்களுமுடைத்தாய் வலப்பாற் சூலம் கட்கம் வாள் அபயம், இடப்பால் நாகம்பாசம் மணிவரதம் ஆகியவற்றைப் பெற்றுக்கருத்தாவுக்குக் குணமாய்ப் பிரதிட்டாசத்தியை அடைந்திருப்பது. கன்ம சாதாக்கியமாவது தொழிலென்னும் யோகராமத்தையடைந்து நாத மயமான ஞாநலிங்கமும், அபேதவிந்து யேமான கிரியாபீடமுங் கூடிப் பஞ்சகிருத்தியஞ் செய்வது. இது நிவர்த்திசத்தியுடன் கூடியிருக்கும். சிவசாதாக்கியம் அமூர்த்தி சாதாக்கியம் மூர்த்திசாதாக்கியம் கர்த்திரு சாதாக்கியம் இவை நான்கும் நாதத்துத் தொழில் அறுதி கன்மசாதாக்கியம் தொழில். நிவிர்த்தி பிரதிட்டை வித்தை சாந்தி யென்னுஞ் சத்திகள் நான்கும் விந்துவிற்றொழில். சாந்திய தீதையில் தொழிலறுதி. இவ்வகைத் தொழிற்கொண்ட நிவிர்த்தியே முதலானபீடமும், தொழிலறுதியான கர்த்திருமுதலான விலிங்கமும், கன்மசாதாக்கியமான விலிங்கமும், சாந்திய தீதையான நான்கும் தந்தொழில்களை பள்ளடக்கித்திரண்ட குடீலாபீடத்து வியாபிநி முதலிய சத்திகளாற் பிரேரேமிகப்பட்டுள்ள இந்திகையாதியாய் நாதகலைகளைந்தும் பொருத்தின் இடம் நாதமயமான இலிங்கமாம். இந்நாதமயமான விலிங்கத்தின் கண் இடை குடக்கு வடக்கு தெற்கு கிழக்கு முதலிய திசைகளிலுள்ள சதாசிவன் ஈசன் பிரமன் ஈசன் ஈசானன் முதலிய மூர்த்திகனிடத்துச் சாதாக்கிய முதலிய ஐந்தும் பொருந்தியுள்ள அவசரம் கன்மசாதாக்கியமாம் முன்னர் மொழிந்த ஐவகைச் சாதாக்கியங்களுட் சிவசாதாக்கியம் பரமசிவத்தையும், அமூர்த்திசாதாக்கியஞ் சிகசாதாக்கியத்தையும், மூர்த்திசாதாக்கியம் அமூர்த்திசாதாக்கியத்தையும், கர்த்திரு சாதாக்கியம் மூர்த்திசாதாக்கியத்தையும், கன்மசாதாக்கியங் கர்த்தருசாதாக்கியத் தையும் பொருந்திற்கும். இஃது அழிவில்லாப் பொருள்கட் கெல்லாமாதாரமாய் அழிபொருள்களை யதிஷ்டிப்பித்திருப்பது. இது பஞ்சமூர்த்திகளுடைய ஒருமைப் பாட்டி லுண்டாதலாலும், அண்டத்துப் பிண்டங்கட்குயிராய் நிற்றலாலும், பிண்டிகை யெனப்பட்ட பீடத்தில் எழுந்தருளியிருத்தலாலும், பிண்டமான சத்தி தானே திருமேனியாதலாலும், கருணாநிலையான நிஷ்களமும் பெருமையுற்ற சகளமுந் திரண்டு பிண்டமென்னும் பெயரை யுடையதாயிருக்கும்.
  • பிரம விஷ்ணு ருத்திரரை யதிஷ்டிக்கப்பட்ட பீடமும், அதற்கு ஏதுவான மஹேஶ்வரரை யதிஷ்டிக்கப்பட்ட கல்லபத்திரமும், இவ்வகைய சிவபீடத் தெழுந்தருளியிருக்குஞ் சிவமூர்த்தியான சதாசிவமும், அவர் திருமுக முதலிய திருவுறுப்புகளை யதிஷ்டிக்குஞ் சிவசத்தி கிரியைகளாகிய வித்தியாதேகமும், அதற்கு மூர்த்திமானாகிய சிவோபாதி ஐந்தும், அபரநாதம் அபரவிந்துவையும் பரநாதம் பரவிந்துவையும் அதிஷ்டிக்கப்பட்ட சாதாக்கியமென்று பெயருற்றதே இலிங்கம்.
  • பின்னும் சிவபெருமான் அதிகாரத்தனமாகிய சதாசிவரெழுந் தருளியிருக்கும் பதுமத்தின் நிழங்கு பிரமாண்டமாகிய பிருதிவிதத்துவம். அப்பு முதலிய கலையீறாகச்சொல்லிய இருபத்தொன்பது தத்துவமும் நாளம். அமரேசமுதலிய புவனமெழுபத்திரண்டும் நாளத்தின் கண்டங்களாகிய முள்ளுகள். புத்தி குணமாகிய பஞ்ச சற்பாவம் நாளத்தின் சூத்திரமான நூல். புறவிதழைச் சுமந்து நிற்கும் முடிச்சுப்படம் மாயாதத்துவம். உள்ளிதழ் சுத்தவித்தியா தத்துவம். சுத்தவித்தியா புவன கலாசத்திகள் அறுபத்து நான்குங் கன்னிகை கலையறுபத்து நான்குங் குண்டலி. வித்தை ஐம்பத்தோரக்ஷரம். வட்டம் நான்கும் ஞானங் கிரியை யிச்சையாதி சத்திகளால் வியாபிக்கப்பட்ட சூரியன்-சந்திரன்-அக்கினிமண்டலமாம். பிருதிவி முதலிய முப்பத்தொரு தத்துவங்களையு மதிஷ்டிக்குஞ் சுத்த வித்தை யினுடைய வியாத்தியான சத்திமண்டலமென்னும் அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதமாய்நிற்பது சிவாதகமாம் சுத்ததத்துவ மிருபத்து மூன்றும் இவற்றை யதிஷ்டிக்கும் சமனையுன்மனைகள் திருமேனியாம். இவ்வகைப் பெருமையுற்றதே தியாநலிங்கம். இலிங் = லயம், கம் = தோற்றம்; ஆகவே சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியத்தைச் செய்யு மீசுரப்பிரபாவம் இலிங்கமெனப்படும்.

வாதுளாகமம்.

“ஸௌவீர்யம் நாஸ்திதத்தேஹே மாம்ஸாஸ்திருதிரக்நச     
இந்த்சாபஇவாகாஶே தர்ப்பணேப்ரதிபிம்பவத்     
அமூர்த்தத்வாத்கலாஹீநம் தத்ரூபம்லிங்கவத்பவேத்     
ஸூர்யகோடிப்ரதீகாஶம் ஜ்யோதிஸ்தம்பாக்ருதிஸ்திதம்     
எதஸ்யாந்தர்க்கதாமூர்த்தீ ரமூர்த்தாதிரிஹோச்யதே."

"ஏதத்வைதிவ்யலிங்கந்து மூலஸ்தம்பமிஹோச்யதே     
லிங்கேஸர்வம்ஸமுத்பந்தம் லயஸ்தத்ரைவ சோச்யதே     
ஸ்ருஷ்டிஸ்ஸம்ஹாரவோக்தம் லிங்காநாமஸ்யசோச்யதே."

தேவாரம் 

செங்க ணானும்  பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித்  திரிந்தவர் காண்கிலார்
இங்குற் றேனென்றி  லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப்  புண்ணிய மூர்த்தியே.   5.95.11

திருமந்திரம்.

"மலர்ந்த வயன்மா லுருத்திரன் மகேசன்     
பலந்தரு மைம்முகன் பரவிந்து நாதம்     
நலந்தரு சத்தி சிவன்வடி வாகிப்     
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.”

“அகார முதலா வனைத்துமாய் நிற்கும்     
உகார முதலா வுயிர்ப்பெய்தி நிற்கும்     
அகார வுகார மிரண்டு மறியில்     
அகார வுகார மிலிங்கம தாமே.”

இலிங்கமூர்த்தயே நம:  

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்   
 

Related Content

திருவாசகம் உரை - இராமலிங்கம்

Chidambara Puranam - Devotional Lectures

Devotional Lectures - Sivadharumodram - சிவதருமோத்ரம்

12 - Jyotirlingas -9. SRI RAMESHWAR Temple in Rameshwaram

லிங்கம் எதைக் குறிக்கிறது?