logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-bhikshatana-murthi

பிக்ஷாடந மூர்த்தி

பிக்ஷாடந மூர்த்தி
பிக்ஷாடந மூர்த்தி

 தேவதாருவர் முநிவர் சிவபக்தியில்லாராகி, யாகமே முத்தி பயக்கவல்ல நற்கருமமென்று சிந்தித்து விழைவுடன் எண்ணில்லா வேள்வி புரிவாராயினர். பரந்தவுலகில் நிகழும் பலவற்றையுமறிந்த பரமபதி அதனையுணர்ந்து, திருமாலைத் தம்பால்வரத் திருவுள்ளஞ் செய்ய, கமலைகேள்வன் கண்ணு தல்கருத்தறிந்து கயிலையங்கிரியை யடைந்து, திருநந்திதேவர் விடைபெற்றத் திருச்சந்நிதானத்தி னுட்சென்று சிவபெருமானைப் பணிந்துதிற்க, விடையூர்தி விருப்புடன் விண்டுவைக் கைப்பற்றியெழுந்து வெள்ளிமலையை விலகி வெளிவந்து "மாதவ! முன்னெருகால் நீகொண்ட மோகினி யுருவை யீண்டெய்துக.'' என, பன்னக்சயனன் பணிமேற்கொண்
டணியிழையா யப்பொழுதேயாயினன். மாவென்னும் பெயருக் கேற்பத் தமது திருவுருவைக்கண்டு மாலெய்தும்படி அம்பிகாபதியும் அவ்வரிவைக்கேற்ற ஆடவசிரேஷ்டாய் வடிவேற்று, கபாலமுஞ்சூலமுங் கையிற்பற்றித் திகம்பராய்ப் பிக்ஷாடநத் திருக்கோலங்கொண்டு, முநிவர்வாசமாகிய தாருவனத்தை மோகினிப் பெண்ணுடன் நண்ணினர்.

அச்சமயத் தருந்தவத்திருந்த அந்தணர்குழாம் அரிவையைக் கண்டு அறிவழிந்து தவநெறி தவறி அவசெறிகொண்டு காமவிருப்பமேலீட்டாற் பின்றொடர் ந்து. விளக்கைக்கண்ட விட்டில்போலத்துன்புறுவாராயினர். இத்தகைய மாயை யியற்றும் வலிதந்து மாயனாகிய மோகினியை மகாதேவன் பிரிந்து, கையிற் கொண்ட பரிகலத்தி லையமேற்பார்போல முநிவரர் வீதியிற்சென்று பண்ணோசை யோடு உள்ளாளக்கீதம்பாட முலிபன்னியர் கேட்டு, அவ்வினியவோசையுடன் பாடுவோனைக் காணவிரும்பி வீதிவாயிலில் வந்து பெருமானது பிக்ஷாடாத் திருக்கோலத்தைத் தரிசித்துக் காமத்துயரிற்கட்டுண்டு வருந்தினர். அரிவையர் சிலர் ஐயனையணையும்படி பிரார்த்தித்தனர்; பெண்கள் சிலர் பிச்சையிட்டனர்; கன்னியர் சிலர் காமநோயாற் கலையவிழ்ந்தனர்; மாதர்கள் சிலர் வளைகழன்றனர்; நங்கையர் சிலர் நாணமழித்தனர்; எம்பெருமானது திருவிளையாடலால் மாமாயா சாலவித்தைபோல் அம்மாதரிடம் நாற்பத்தெண்ணாயிரம் புதல்வர் அக்காலத் துதித்தனர்.

அப்பிள்ளைகள் பிக்ஷாடநமூர்த்தியைப்பணிய, புராரி ''நீவிர் எம்மை நோக்கித் தவஞ்செய்க' எனவிடுத்து, நகரின் புறம்போந்தனர். முநிவரை மோகிக்கச்செய்த மோகினி முதல்வனையடைய பின் வந்த பெருந்தவத்தினர் தத்தம் பெண்டிரை யவாவிச்சென்று கண்டு நம்மனைவிமாரும் இத்திகம்பரனால் நான் வளை முதலியவற்றைக் கழிந்தனர்போலுமென்று கருதி "நாமொரு பெண்ணாற் றவமழிந்து காமபாசத்தாற் கட்டுண்டோம். நம்பன்னியர் ஒருவன் மாயத்தாற் கற்பிழந்தனர்.'' என்று பேசிக் கிலேசித்து, தமது தவநிலையை மாயனால் மாய்த்ததும், தம்பன்னியர் கற்பையழித்ததும், சங்கரனேயென்று தமது ஞானத்தாலுணர்ந்து 'பெருந்தவமழியி னும் பிராயச்சித்தஞ் செய்யலாம்: கற்பழிந்ததே; கற்பகாலமுங்காசினியோர் நிந்திப்பரே!" எனக் கழறி, பிக்ஷாடநர் பின்செல்லும் பெண்டிரைக்கூவி, ''யாவர்பின் செல்கின்றீர்? கற்பழிந்தவர் கடுந்தழல்மூழ்கிக் காயத்தை யொழித்தல்கடன், அன்றேல் உமதூரையடைமின்'' என்றனர். காரிகைமார் கணவர் கழறிய மாற்றத் தைக் கருத்துட்கொண்டு கண்ணுதலைப்பிரியக் காலெழாது பின்றொடருகையில், கருணாமூர்த்தியின் திருவருளால், ஒருவாறு மனந்திரும்பி உம்பர் பெருமானுருவை யுட்கொண்டு ஊர்சேர்ந்தனர்.

சிவபெருமான் திருத்தெளிச்சேரி யென்னும் நகரினீங்கினர். முநிவர் சிவபிரானைக் கொல்லவேண்டுமென் றுட்கொண்டு அபிசாரவேள்வி செய்து அதனிற்றோன்றிய புலி நாகம் முயலகன் முதலியவற்றைப்பிரயோகிக்க அத்தன் அவற்றைச் சங்கரித்தும் உடை முதலியவாகத் திருமேனியிலணிந்துந் துன்புறாது திருமாலுடன் கயிலைசார்ந்து கமலைகேள்வனை விடைகொடுத்தனுப்பி எழுந்தருளி விருந்தனர். (அவர்கள் செய்த அபிசார வேள்வியைப்பற்றிய விவரங்களைச் சார்த்தூலஹரமூர்த்தத்திற் காண்க.)

தாருவந முநிவர் தவத்தையும், அவர் மனைவியர் கற்பையும் அழிக்கும்படி பெருமான் திகம்பரராய்ப் பிரமகபாலந்தாங்கிப் பலியேற்கச்சென்ற கோலமே பிக்ஷாடநமூர்த்தமெனப் பெயர்பெறும்.

தாருவநக்டாவிலாசம். காஸிஷ்டலைங்கம். வஸிஷ்டரை நோக்கி ஈஸ்வரவாக்கியம்.

விஷ்ணுஶ்சமாயயாப்ரஹ்மந் பார்யாபூந்நமமஸுந்தரீ
தயாஸஹமஹாக்ரீடாந் க்ருத்வாவேஷ0திகம்பரம்.

காஞ்சிபுராணம்.

''அடியிற் றொடுத்த பாதுகையு மசைந்த நடையு மிசைமிடறும்
வடியிற் சிறப்ப நடந்தரும் மூழை யேந்தி மருங்கணைந்த 
தொடியிற் பொலிதோண் முனிமகளிர் சுரமங் கையரை மயல்பூட்டிப்
படியிட் டெழுதாப் பேரழகாற் பலிதேர் பகவன் றிருவுருவம்.''

பிக்ஷாடநமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

The Lord on Alms, Bhikshatana

கங்காள மூர்த்தி

ப்ரார்தநா மூர்த்தி