- இலிங்கப் பிரபாவத்திற் பிரதிபாதித்த சிவலிங்கம், திருமுகங்களைப் பெற்றிருக்கின் முகலிங்கமெனப்பெறும்.
- அதுதான் ஆட்யம், அநாட்யம், ஸுரேட்யம், ஸர்வஸமம் என நான்குவகைப்படும். ஆட்யம் ஆயிரத்தொரு லிங்கங்களுடையது. ஸுரேட்யம் நூற்றெட்டு லிங்கங்களுடையது. அநாட்ய ஸுரேட்யலிங்கங்கள் திருமுகங்கள் பெறா. ஸர்வஸமம் 5-4-3-2-1 இவ்வகைய ஐந்து முகபேதங்களைப் பெறும். ஈசாநம் தற்புருஷம் வாமம் அகோரம் ஸ்த்யோஜாதம் முதலிய ஐந்தும், ஈசாநமொழிந்த முகங்கள் நான்கும், தற்புருஷ அகோர வாமதேவ முகங்கள் மூன்றும், தற்புருஷ ஸத்யோஜாத முகங்களிரண்டும், தற்புருஷ முகமொன்றும் பெற்றிரூக்கநிற்பது ஸர்வஸமமாகும்.
- மேற்கூறிய ஸர்வஸமலிங்கம் அல்லது முகலிங்கத்தின் பிரபாவத்தினை மற்றுமொருவகையால் ஆகமங்கள் கூறும். அதனை யொருவாறு சுருக்கிக் கூறுவாம்.
- அநாசிருதர் அநாதர் அநந்தர் வியோமரூபர் வியாபகரென்னு மூர்த்திகளை வரும், பராசத்தி 'கிரியாசத்தி ஞாநசத்தி இச்சாசத்தி ஆதிசத்தியரென்னும் ஐவகைச் சத்திகளைக்கொண்டு, முறையே சிவசாதாக்கியம் கன்மசாதாக்கியம் கர்த்திரு சாதாக்கியம் மூர்த்திசாதாக்கியம் அமூர்த்திசாதாக்கியங்களால், அசுத்த பஞ்சகிருத்தி
யங்களை நடாத்துதலால், இவை அநாசிருதருடைய அவதாகாரிய மென்னுங் கன்மசாதாக்கியருக்குச் சுத்தர்சுத்த பஞ்சகிருத்தியங்களின் தொழில்கள் தாமே ஐந்து திருமுகங்களாம். இதில் அநாசிருதராவார் சமனையாம் பராசத்தியும், உன்மனை யாம் பரமுந் தம்முளொன்றி ஆன்மாக்களைத் திருவுளத்தடைத்த நிலையர். - அநாசிருதராகிய இவர்க்குப் பிரமனளவாகவும், அநாகதர்க்கு விஷ்ணு அளவாகவும், அநந்தர்க்கு உருத்திரனளவாகவும், வியோம ரூபர்க்கு மகேச்சுரனளவாகவும், வியாபகர்க்குச் சதாசிவனளவாகவும் வியாத்தி. மேற்கூறிய ஐவருள், வியாபகருடைய மூர்த்திபேதமான ஆடகேசுரர் பாதாளாதிபதியாய் ஆங்குள்ளவர்தொழ எழுந்தருளுவர். வியோமரூபருடைய மூர்த்திபேதமான கூர்மாண்ட தேவநாயனார் இருபத்தெட்டுக்கோடி நரகத்திற்கதிபதியாயிருப்பர். அநந்தருடைய மூர்த்திபேதமான காலாக்கி. ருத்திரதேவர் பிரமாண்டத்தை யதிஷ்டித் தெழுந்தருளியிருப்பர். அநாகதருடைய மூர்த்திபேதமான ஆதாரசத்தி அண்டங்க ளைச் சுமந்து எழுந்தருளியிருக்கும். இவ்வகைச் சகலபுவநாதாரமாய்நின்று சிருட்டி- திதி-சங்காரம்-திரோபவம்- அநுக்கிரகம் என்னும் பஞ்சகிருத்தியங்களையும் நடத்துமி டத்துப் பிரம-விஷ்ணு-ருத்திர-மகேச்சுர-சதாசிவபேதமே முகலிங்கமெனவும் பெறும். விரிவு சிவாகமங்களுட் காண்க.
ஸித்தாந்த சாராவளி.
"ஏகாதிகம்லிங்கஸஹஸ்ரமாட்யே
த்வஷ்டோத்தரம்லிங்கஶதம்ஸுரேட்யே
விசேஷதஸ்ஸர்வஸமேஶவக்த்ர
மாட்யேப்யநாட்யேவிநதேவபூஜ்யே.''
முகலிங்காயா நம:
சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்