logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-chakradhana-svarupa-murthi

சக்ரதாநஸ்வரூப மூர்த்தி

சக்ரதாநஸ்வரூப மூர்த்தி
சக்ரதாநஸ்வரூப மூர்த்தி

உலக முழுவதும் ஒரே செங்கோலினா லரசுபுரிந்து வந்த குபன் என்னும் மன்னன் காரணமாகத் திருமால், ததீசி முநிவரையெதிர்த்துச்சமர்புரிந்து சகிக்கமுடியாராய்த் தமது சக்ராயுதத்தை அம்முநிபுங்கலன்மேற் பிரயோகிக்க, அது அம்முநிசிரேஷ்டாது வச்சிரயாக்கையிற்றாக்கி வாய்மடிந்து மீண்டது. அதுகண்ட அச்சுதன் அச்சமுற்று, மாயாரூபமொன்று தன்போலுண்டு செய்தனன். முநிவர் முனிந்து தமது காற்பெருவிரலையசைக்கக் கணக்கில்லாதவிண்டு மூர்த்திகள் வெளியே தோன்றினர். அதனால் அவர் தவவலி மிகுந்தவரென்றும், அவரை வெல்லத்தக்கவல்லமை தன்னிடத்தில்லையென்றும் சார்ங்கன் தெரிந்து, அம்முநிவரைச் சரண்செய்து மீண்டு தன்னுடன் போந்த வானவரை நோக்கி, ''யான் தீயரைச்செகுத்து உலகைப்புரக்குந் திதிக்கடவுளாதலின், எனக் கித்தகைய சக்ரம் இன்றியமையாதது: இதுபோல வேறொன்றுயாண்டுப்பெறுவேன்'' என்றிசைத்து வருந்த, இமையவர் ''சலந்தரனென்னுந் தானவத் தலைவனைச் சங்கரன் சங்கரிக்குமாறு திருவடியாற்கீறி நிருமித்த சுதரிசனமென்னுஞ் சக்கரப்படை அம்மஹாதேவன்பாலுள்ளது'' என மறுமாற்றங்கூறினர்.

அதுகேட்ட திருமால் சிந்தைகளித்துச் சிவார்ச்சனையாலதனை யடைவேனென் றுள்ளத்தமைத்து, ஓர் சிவலிங்கக் குறியை ஸ்தாபித்துப் பாசுபதவிரதம்பூண்டு சங்கற்பஞ்செய்து திருவெண்ணீறு தரித்து அக்கமாலைசூடி, தேவர்கள் பூசைக்குரிய உபகரணங்களைச் சித்தஞ்செய்து கொடுக்கப் பரமபதியைப் பதுமமலர் ஆயிரத்தால் நாடோறும் பவன் முதலிய திருநாமங்களோதி அருச்சிக்கத்தொடங்கினர். அவ்வாறு நிகழ்ந்து வருகையிற் பத்திவலையிற் படுவோராகிய பரமேச்சுரன் அவரதன்பின் முதிர்ச்சியை ஆர்கலிசூழ்ந்த அவனிமாக் கட்கறிவிக்க ஆயிரங்கமலத்தில் ஒருசலசத்தை மறைவாக்கினர். விண்டுவுணராரா கிப் பண்டு போற்பவன் முதலிய ஸகஸ்ரந் திருநாமங்களையோதி ஒவ்வொரு கஞ்சமாகவெடுத்துப் பூசித்து வந்து கடைசியில் ஓர் திருநாமத்திற்கு மலர்காணாராய் ''இஃதென்னை யாளாகவுடையார் திருவிளையாட்டு" என்றெண்ணி, தமதுபூசை முட்டுப்படாவண்ணம் விழியொன்றைப்பிடுங்கி மலராகப்பாவனை செய்து அர்ச்சித்து முடித்து ஆனந்தக்கடலுளழுந்தினர்.

உடனே, பிறைசூடிய பெருந்தகையார் களிகூர்ந்தவராகிச் சோதிமயமான பேருருவுடன் தெரிசனந்தர, திருமால் அஷ்டாங்க பஞ்சாங்கமாகப் பலமுறை பணிந்து, வேதவாக்கியங்களாற்றுதித்துக் கையேற்றுநிற்க, கருணைவள்ளல் “கமலைகேள்வா உன்பூசைக்கு மனங்களித்தோம். உனது கண்ணையளித்தோம். கமலக்கண்ணன் என நாமமடையக்கடவாய்'' என்று திருவாய்மலர்ந்தருளி, தமது திருக்கரத்திலிருந்த ஸுதர்சனம் என்னுஞ் சக்கராயுதத்தைப் பிரசாதஞ்செய்து எத்தகைய வலியினராயினும் நின்னை யெதிர்த்தோரை இஃது இமையளவிற் கொல்லும் ஆற்றலுடைய தென்றநுக்கிரகித்தனர். திருமால் இவ்வரங்களையும் ஸுதர்சனத்தையும் பெற்றுப் பலமுறை பணிந்து அருவியாறுபோற் கண்களில் ஆநந்தபாஷ்பஞ்சிந்தப் பலவகையாகப்பாடி ஆநந்தக்கூத்தாடி எம்பெருமானது திருவடியை முடியிற்சூடி வைகுந்தத்தைகாடி இடையறாச் சிவபக்தியுடன் வீற்றிருந்தனர்.

ஸ்காந்தபுராணம்.

ததிசிநாமிர்ஜிதஸ்த்வம்ஸ0க்ராமேஸமருத்கண:
கண்டூயமாநஶ்ஶிரஸி கதம்தத்விஸ்மருதம்த்வயா
சக்ரம்விக்ரமஸாஹாய்யம்சக்ரபாணேதவப்ரியம்
குத:க்ருத0தேநயச்சத்வ யாததபிவிஸ்ம்ருதம்.

ஆதித்யபுராணம்.

ஸுதர்ஶநாக்யம்யச்சக்ரம்லப்சவா0ஸ்தத்கதம்ஹரி:!
மஹாதேவாத்பகவதஸ்ஸூததத்வத்துமர்ஹவி, இத்யாதி,
ஹிமவத்பர்வதம்கத்வா பூஜயாமாஸஶங்கரம்
லிங்க0தத்ரப்ரதிஷ்டாப்யஸ்நாப்யகந் தோதகைஶ்ஶுபை
ஹ்ருதபுஷ்போஹரிஸ்தத்ரகிமித0த்விதிசிந்தயந்
ஜ்ஞாத்வாஸ்வநேத்ரமுத்த்ருத்யஸர்வத0த்ராவலம்பநம்
பூஜயாமாஸதேவேஶ்0, இத்யாதி.
ஏவமுக்த்வாததௌசக்கரம்ஸூர்யாயுதஸமப்ரபம்
நேத்ரஞ்சபத்மஸத்ரூஶ0விஷ்ணவேப்ரபவிஷ்ணவே
லோகேதுபுண்டரீகாக்ஷஇதிக்யாதி0கதோஹரி: இத்யாதி
மயிபக்திர்த்ருடாவிஷ்ணோ பவிஷ்யதிதவாநக
ஆஜேயஸ்த்ரிஷுலோகேஷுமத்ப்ரஸாதாத்பவிஷ்யஸி

வாமநபுராணம்.

அதாப்யேத்யஜகந்நாதம்ஸஹஸ்ரஶிரஸம்விபும்
ஆராதயாமாஸஹரி:ஸ்வயமாத்மாநமாத்மநா
ஸாங்கவர்ஷஸஹஸ்ரந்துபாதாங்குஷ்டேந்தஸ்திவாந்
தத:ப்ரீதோஹர:ப்ராதாத்விஷ்ணவேதுவரம்பரம்
ப்ரத்யக்ஷ0தைஜஸ0ஸ்ரீமத்திவ்யசக்ரம்ஸுதர்ஶந0, ப்ரதஶாந்தரே
அமோகஏஷோமரராஜபூஜீதோ
ஹ்ருதோமயாநேத்ரகதஸ்தபோபலாத்.

ஹரதத்தர் வாக்கியம்.

காயத்ரீவல்லபத்வாத்தஶரததநயஸ்தாபிதாராதிதத்வாச்சௌரை: கைலாசயா த்ராவ்ரதமுதிததயாபீஷ்ட ஸந்தாநதாநாந்நேத்ரேணஸ்வேநஸாகந்தஶஶதகமலைர் விஷ்ணுநாபூஜிதத்வாத்தஸ்மைசக்ரப்ரதாநாதபிசபசுபதிஸ்ஸர்வதேவப்ரக்ருஷ்ட:
அவதாரகோலத்திலே ததீசி முதிவர் மகிமையை அறியாமையால் அவர் பேரில் திருமால் பிரயோகித்த சக்கரம் கூர்மழுங்கித் திரும்பியதாதலின், அதற்குப் பிரதியாகச் சிவபிரானை யருச்சித்துப் பெருவலியமைந்த ஸுதர்ஶநத்தைப் பெற்றனர் என்பதற்கு, ஈண்டுச் சிலப்ரமாணங்காட்டினோம். ஆனால் விஷ்ணு இராமகிருஷ்ணாதி அவதாரங்களிலே மட்டும் சிவார்ச்சனை இயற்றினரா அல்லது அவதாரகோலமல்லாத ஆதிகாலத்தும் சிவபூசை செய்துள்ளாரா  எனப் பரியாலோசி க்கும்பக்ஷத்தில், சிவபிரான் பூஜிதரென்றும் வரதமென்றும், திருமாலே பூஜகரும் சிவவரலப்தமஹானென்றும் தெரியவேண்டும். அவற்றிற்குஞ் சில நியாயங்காட்டு வோம்.

ருக்வேதம்.

தவஶ்ரியேமருதோதுர்ஜயந்தேருத்ரயத்தேஜநிமசாருசித்ரம்
பதம்யத்விஷ்ணோருபமந்யதாயிதேந.

பராஶரபுராணம் ஷோடஶாத்யாயம்.

ரௌத்ரலிங்கம் மஹாவிஷ்ணுர்பக்த்யாசாருபமிலாமயம் – சாருசித்ரம்ஸமப் யர்ச்யலப்தவாந்பரமம்பதம் – ஸாசலக்ஷ்மீஸ்ஸமாக்யாதா மஹாவிஷ்ணோஸ்துவ ல்லபா – யஶ்யலிங்கம்ஸமப்யர்ச்சிய ஸபூஜ்ய: ஸர்வசேதநை:- எனப் பிரதிபாதிக்கும் வேதபுராண வாக்கியங்களில் ஆதிவிஷ்ணுவென்றும், மஹாலக்ஷிமியென்றுங் கூறப்பட்டதாகையால் அவதாரங்களில் மட்டுமல்லாமல், அநவரதம் அச்சுதன் அரனடியனேயாவன். பாரதம் துரோணபர்வத்தில் வியாஸாஶ்வத் தாமஸம் வாதத்திலும் வராஹபுராணத்திலும் இன்னும் பல இடங்களிலும் பிரமாணங்கள் விளங்கிக்கிடக்கின்றன. விஸ்தாரபயத்திற்குவெருவி விடுத்தாம்.

இனி அவர் ததீசிமுநிவர்மேற் பிரயோகித்த சக்ராயுதம் பண்டைக்காலத்தி லப்பது மநாமனுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதைப்பற்றியுஞ் சிறிது ஈண்டுக்கூற வேண்டுவதாயிற்று.

அசுரர் தொந்தரவைச்சகியாத தேவர் வேண்டுகோளுக்கிரங்கி அவர்களைச் சங்கரிக்கத்தக்க ஓர் ஆயுதம் எனக்கு வேண்டுமென்று கருதிய திருமால் இமயமலைச்சாரலில் ஓர் சிவலிங்கப்பிரதிட்டை' செய்து நாளொன்றுக்கு ஆயிரந் தாமரைமலர்களால் அநேககாலம் சிவார்ச்சனை செய்துவந்தனர். ஒருநாள் உமாபதி அவர் பத்திமுதிர்ச்சியைப் பரிசோதிக்கும்படி பதுமமொன்றனை மறைக்க மாதவன் தன் கண்ணொன்றைக் கமலமாகப்பாவித்து அருச்சித்தனன். அப்பொழுது அருள் வள்ளல் இடபாரூடராய்த்தரிசனந்தந்து ஓர் சக்ராயுதமுதவி யிதனால் அசுரரை யழித்தி என்றருளி, கண்ணையும் முன்போற்கடாக்ஷத்துச் செந்தாமரைக் கண்ணனெனப் பெயருங்கொடுத்தனுப்பினரென ஆதித்யபுராணத்திற் படிக்கப் பட்டுளது.

முன்னோர் ஆத்தியந்திகப் பிரளயமகன்ற சிறிது காலத்தில் பரமேசுவரர் மீண்டும் பிரபஞ்ச நிர்மாணத்தில் திருவுள்ளங்கொண்டு அப்ராக்ருத ப்ராக்குத ஸ்ருஷ்டிகள் சிறிது செய்து பிரமவிஷ்ணுக்களைப்பிறப்பித்து, "நீங்களிருவருங் கிரமமாகச் சிருட்டி ஸ்திதிக் கர்த்தர்களாயிருங்கள்'' எனத் திருவாய்மலர்ந்தருளினர். அப்பொழுது விஷ்ணு விமலரைப்பணிந்து “சுயம்பிரகாசா! துஷ்டநிவாரணத்தின் பொருட்டுத் தகுதியான ஆயுதமொன்றைத் தயவுசெய்தருளவேண்டும்'' என விண்ணப்பித்துக்கொண்டனர். சிவபிரான் அவ்வாறே தமது நேத்ர த்ரயத்தால் ஸூர்ய ஸோமாக்நிகளின் தேஜஸு பொருந்திய சக்ரமொன்று நிருமித்து அதனாலேயே கதையொன்று பிறப்பித்துக்கொடுத்தனர். அப்பொழுது பக்கத்திலிருந்த பராசத்தியாகிய உமாபிராட்டியார் தமது திருமுகத்தினால் ஓர் சங்கும் திருநேத்திரத்தினால் ஓர்பத்மமும் பிறப்பித்து அவற்றைத் தாங்குதற்கு முன்னிருந்த இருகரத்துடன் நூதனமாக இரண்டத் தங்களையு முண்டு செய்து பிரசாதித்தனர். இச்சரிதம் ஸ்கந்தருக்கும் அகஸ்திய முநிவருக்கும் நடந்த ஸம்பாஷணையிற் சாற்றப்பட்டுள்ளது.

ஸ்காந்தபுராணம் சங்கரஸம்ஹிதை.

இத்யுக்தோபகவாந்ஶர்வோஹரிணாவிஶ்வமூர்த்திநா
தமாஹமேகநாதேநஸர்வேணஹாபீஶ்வர:
ஆயுதம்சாஸ்யதாஸ்யாமிதபோவிக்நாபநுத்தயே
தேவாரீணா0சஸம்ஹத்யைரக்ஷாயைஜசதாமிஹா
இத்யுக்த்வாபகவாந்விஷ்ணு0தேவதேவஉமாபதி:
ஏகாக்ரமநஸாத்யாநகமகமத்பரமேஶ்வர:
த்யாயதஸ்தஸ்யதேவஸ்யப்ராதுராஸீத்தமோநுதம்
ஶாருநேத்ரத்யாதஸ்யஸஹஸ்திராதித்யஸந்நிபம்
அக்நேஸூர்யாச்சஸோமாச்சதந்மயால்லோசசநத்ரயாத்
த்ரிதேஜோமயமத்யுக்ரம்ஜ்ஞாநாஸ்த்ரம்வஜ்ரப0ஜரம்
நாபௌஸோமாம்ருதமயோஹ்யரேஷுபகவான்ரவி:
ப்ரா0தேஷுபகவாநக்நிஶ்சக்ரஸ்யஸ்யாச்சிவாத்வ:
ஸசக்ரமதிமாந்பூத்வாகி0கரோமீத்யபாஷத
க்ருதா0ஜலிகரஸ்தஸ்தௌபஹுபாஹுஸ்த்ரிலோசன:
த0சக்ரம்பாணிநாலம்ப்யவிஷ்ணவேப்ரததௌஶிவ:
விஷ்ணோர்வைதக்ஷிணம்பாஹுமபஜத்ஸோபிஹர்ஷித:
ததோதேவஸ்யவைஶம்போர்கதாகக்ராத்விநிஸ்ஸ்ருதா
தைத்யதர்பஹராகோராஸர்வரத்துசித்ரிதா
ஷட்சாஸ்த்ரரூபிணீதிவ்யாஷட்தாராஸ்த்ரீஸ்வரூபிணீ
ஆஜ்ஞப்தாஶம்புநாசாபிவிஷ்ணுமேவஸமாஶ்ரிதா
வாமமாஶ்ரித்யவைபாஹு0விஷ்ணோஸ்தஸ்யஸ்திதாபவத்
ததோதேவீஜகத்தாத்ரீபவாநீஸாபராத்பரா
ஶிவாங்கஸ0ஸ்திதாதத்யௌவிஷ்ணோராபேஶஸ0ஜ்ஞயா
தஸ்யாவக்த்ராத்ஸமுத்பந்ந;ஶங்கராஜஶ்ஶப்ரப:
ஸர்வதேவமய:ஶாந்த:ஸர்வஶத்ருநிபர்ஹண:
ஸோப்யாஜ்ஞப்தஸ்தயாதேவ்யாவிஷ்ணோ:பார்ஶ்வம்தாகமத்
தேவ்யாநேத்ராத்ஸமுத்பந்தமம்புஜ0ஸுப்ரபம்ஶுபம்
ரமாலயமநோஹாரிஸர்வலோகவிபூஷணம்
தஞ்சவிஷ்ணுமமஹாத்மாநமாஜ்ஞயாபத்மமுத்தமம்
ஸமாஶ்யேத்ததோவிஷ்ணுர்விஸ்மயம்பரமம்யயௌ
பூர்வம்துத்விபுஜோவிஷ்ணுர்கதா0சக்ரஞ்சஹர்ஷித:
ததாரஶம்புநாஜ்ஞப்த:ஸதுசிந்தாமவாபஹ
த்விபுஜோஹ0கதம்த்வத்யஆயுதாநாம்சதுஷ்டயம்
தரிஷ்யாம்யம்பயாதத்தாவுபௌஶங்காம்புஜாவபி 
எவஞ்சிந்ததஸ்தஸ்யவிஷ்ணோ:தேவ்யா:ப்ரஸாதத:
ப்ராதுராஸ்தாம்கரேளபீநௌதாப்யாந்தொளசாப்யதாரயத்
ததோவிஷ்ணு:ப்ரஸந்நாத்மாபாங்கசக்ரகதாதர:
நமஸ்க்ருத்யஶிவOஶாந்தம்க்ருதார்தோஸ்மித்யபாஷத!
ததோஜலதகம்பீரகோஷேணபகவாக்சிவ:!
விஷ்ணுமாஹமஹாத்மாந0க்ருதார்தோஸீதிகேஶவ:
இத்யுக்த்வாம்தததேர்தேவ:பரமாத்மாஸதாஶிவ: ||

ஈண்டெடுத் துதகரித்த பிரபல பிரமாணத்தானே திருமால் ஆதிகாலத்திலேயே சிவாநுக்கிரகத்தால், சக்ராயுத் தண்டாயுதங்களும், சாம்பவியின் கிருபையினால், சங்கமும் முன்னிருந்ததுடன் இரண்டு கரங்களும் பெற்றனரென்பது புலப்படும். அவ்வாறு சிவகடாஷத்தாற் சக்கரம் பெற்றதை மறந்து விஷ்ணு ஒருகாலத்தில் இறுமாப்புற, அஃது மறைந்துவிட்டது அச்சமயத்திலும் அதைப் பெறும்படி சிவார்ச்சனை செய்து மறுபடியும் பெற்றனரென வேறோர் உபாசனையும், ௸ ஸ்காந்தபுராணம் ஈஶாநஸம்ஹிதை விளக்குகின்றது. [விரிதல் கருதி இதுவரையும் நிறுத்தப்பட்டது.] இத்தியாதி நியாயங்களால் நான்கு முறையில் நாராயணன் சக்ராயுத நிமித்தமாய்ச் சங்கரோபாசனை செய்தவற்றை நிலைநாட்டப்பட்டது.

திருவாசகம்.

"சலமுடைய சலந்தரன்ற னுடறடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கண் றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்ற னயனமிடந் தரனடிக்கீ
ழலராக விடவாழி யருளினன்காண் சாழலோ.”

கூர்மபுராணம். மாயோன் நேமிபெற்ற அத்தியாயம்.

"வையம்பொதிந்தசெங்கனிவாய்மாயோனன்புக்குண்மகிழ்வுற
றையன்கையாற்புறநீவியடியிற்புனைந்தமலர்க்கண்ணு
மெய்தநல்கிச்சுதரிசனமென்னுஞ்சுடராழியுமீந்து
செய்யகமலக்கண்ணனெனும் பெயருஞ்சிறப்பினொடுமளித்தான்."

உபதேசகாண்டம்.

"என்னப்போற்றிமுடிபடிதொட்டிழுகப்பணிந்தானெழனோக்கி
மின்னுச்சடையோன்றிருவருள்கூர்ந்துருகாநின்றான்விழிக்கமலக்
கன்னிக்கிறைவன்கருத்துணர்ந்துகதிராயிரம்போன்றொளிபரப்பும்
பொன்னந்திகிரிபுரிந்துபின்னுமெதுவேண்டுவதுபுகலென்றான்.

நின்பாலுருகிநினதடிக்கீழ்நெடுங்கண்சாத்துநிலையுலக
மன்பாலறிவானெனக்கிருகணம்போருகத்தினருள்கென்னா
மின்பாலுகந்தோனஃதருளிவேண்டவேண்டும்வரங்கொடுத்தான்
பொன்பான்மருமத்திகிரியினானடைந்தானமரர்புடைபோற்ற."

காஞ்சிப்புராணம்.

"ஆங்கவனை யெதிர்நோக்கி நின்பூசைக் ககமகிழ்ந்தே முனக்கிஞ் ஞான்று
தேங்கமல விழியளித்தோம் பதுமாக்க னெனும் பெயரிற் றிகழ்வா யிவ்வூர்
பாங்குபெறு திருமாற்பே றெனப்பொலிக வென்றருளிப் பானு கோடி
தாங்குகதிர்ச் சுதரிசனப் பெயராழித் தனிப்படையு முதவி யெங்கோன்.”

திருமால் தக்ஷயாகத்தில் வீரபத்திரர்பேரிற் சக்கரத்தை விடுப்ப, அவர் தலைமாலையிலொன்று அதனை விழுங்கியது. பின்னர் விகடக்கூத்தாடி அதைச் சிரிக்கச் செய்தனர்; அதனாற் சக்கரம் நழுவி வாயினின்றுவிழ, ஸ்ரீ விநாயகக்கடவுள் அந்நடங் காணவிரும்பி அதனை எடுத்து மறைத்துவிட்டமையால் அவர் மகிழும்படி மீண்டும் அவ்வாறே கூத்தாடி அவர் திருவருளாற் பெற்றனரெனக் காஞ்சிப்புராணங் கூறும்.

''போராழி யதன்வாயிற் கழிந்துபுவி மிசைவீழப் பொருக்கென் றங்கை
யேரானை முகக்கடவு ளதுகவர்ந்தங் கறியான்போன் றிருப்ப நோக்கிப்
பேராண்மைப் படைத்தலைவ னினிச்செயலே தென் றழுங்கிப் பேதுற் றந்தச்
சீராளன் றிருமுன்புங் கைகண்ட விகடநடஞ் செய்து வேண்ட
ஏக்கறவா னவரியற்றும் விகடநட நெடும்போதெம் பெருமா னோக்கி
மாக்கருணை சுரந்தருளி யாழியவன் றனக்களித்தான்-“

சிவபெருமான். தம்மிடத் திடையறாத அன்புகொண்டு அருச்சித்த திருமாலுக்குச் சக்ராயுத முதவினமையால், அப்பெருமானுக்குச் சக்ரதாநஸ்வரூப மூர்த்தியென ஓர் திருநாமம் வேதாகமபுராணங்களில் விளம்பப்பட்டது.

வழிதீஞ்சுவைக்கள்வாய்மடுத்து மழலைச்சுரும்பரிசைமிழற்றுஞ்
செழிபூங்கமலமொன்றினுக்குத் திருந்துகாதன்மெய்யன்பின்
விழிசூன்றடியினருச்சித்த விறன்மாயனுக்குச்சுதரிசனங்
கழிபேரருளாலீந்தருளுங் கடவுட்பெருமான்றிருவுருவம்.

சக்ரதாநஸ்வரூபமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                    
 

Related Content

ஜலந்தரவத மூர்த்தி