logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-garudanthika-murthi

கருடாந்திக மூர்த்தி

கருடாந்திக மூர்த்தி
கருடாந்திக மூர்த்தி

திருமகள் விளங்கிய மருமமும், திசைமுகன் முதலா வகில முகிழ்த்த முண்டகமும் தண்டம் – சுதரிசனம் – சார்ங்கம் – கதை - சங்குடனைம்படை தாங்கியகரமும், தினகரரிருவர்சேர்ந்தொளி செயல்போற் றிருச்செவிக்குழையும், பன்னகப்பாயலும், பாற்கடற்றுயில்வும், அவுணரையழித்தலும் அமரரைப்புரத்தலும் அமைந்துலகளிக்கும் ஆதிநாரணன். முன்னொருபகலில் முக்கணரைத்தொழ எண்ணினனாகி, வண்ணநற் கருடவாகனமேறி வானெறி வழிக்கொடு கண்ணுதல் வீற்றிருக்கும் திருக்கைலையைச் சமீபித்து, தனது வாசஸ்தானமாகிய திருப்பாற் கடல்போல வெண்ணிறமுடையதும் பல புறங்களிலும் அருவியாறுக ளிறங்குவதும், சங்குகன்னன் - வாணன் - குண்டோதரன் முதலிய கணநாதர்கள் நாற்புறத்திலுங் காவல் செய்வதும், இடையறாது இமையவர் குழாங்கள் "ஹரஹர சங்கர ஜகதீஶ'' எனப் பலவகையாகத் துதிசெய்யும் பேரிறைச்சலுடையதுமாகிய வெள்ளிமலையின் சிகரங்களைத்தரிசித்துக் கை கூப்பி மலைச்சாரலைச்சமீபித்துச் சிவத்தியானத்துடன் திருமலைமேலேறி, திருக்கோபுரவாயிலை யடைந்து, வாஹனமாகிய கருடன் பேரிலிருந்திறங். துவாரப்பிரதேசத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து நந்தியெம் பெருமானது நளினபாதங்களை நமஸ்கரித்து, அவர் அநுஜ்ஞைபெற்றுத் தேவதேவ ரைத்தரிசிக்கத் திருச்சந்நிதானத்தி னுட்சென்று, காளகண்டமும், சூரிய சோமாக்கினி யாகிய திரிநேத்திரங்களும், மான் மழு வரதாபயமு முற்றுவிளங்குஞ் சதுர் புஜங்களும், கங்கையுங் கொன்றையுந் திங்களுமணிந்த செஞ்சடையும், பார்வதி தேவிபாகமுமாக ஸ்ரீசிவபெருமான் நவரத்தின கஜித மண்டபத்தில், இந்திராதி இமையவரும், நாரதாதிமுநிவரும் அட்டவசுக்களும், யக்ஷ கிந்நராதி பதினெண் கணங்களும் புடை சூழ்ந்துநிற்கவும், அரம்பை முதலிய தேவதாசிகள் நடிக்கவும், சர்வாடம் பரபூர்வமாய் எழுந்தருளியிருக்குந் திருக்கோலத்தைக்கண்களாரத்தரிசித்து வாயாரவாழ்த்தி ஆனந்தக்கடலி லமிழ்ந்திருந்தனர். இதுநிற்க:

விஷ்ணுமூர்த்தியின் வாகனமாயும், அவரால் வெளியேயிருக்க ஆஞ்ஞை பெற்றுள்ளதுமாகிய கருடன் சிறிதுநேரம்பார்த்து, திருமால் விரைவாகத் திரும்பி வராமையால், தானுந்திருச்சந்நிதானத்தினுட்செல்ல விரும்பி, உள்ளே போகையில், திருநந்திதேவர் வெகுண்டு “வைநதேய! உள்ளே புகாதுநிற்றி; மாதவன் வருமளவும்
ஈண்டிருத்தி" என இசைத்தனர். அதுகேட்ட கருடன்கடுஞ்சினங் கொண்டு "என்னைத்தடுக்க நீ எவ்வளவினன்; நீயோ பிச்சையெடுப்பவன் வாகனம்; உன்னை விரைவி லுயிரொழிப்பேன்" எனவுரைத்து விடைத்தேவர் பிரளயகாலாக்கிளி ருத்திரற்போற் பெருஞ் சினமுற்றுப் பேசுதெலொன்றுமிலராய் அக்கருடன்பேரில், தமது நிசுவாச உசுவாசங்களைச்செலுத்தினர். கருடன் அந்நிசுவாசத்தாற் ககனமார்க் கத்திற் கடுந்தூரம் போயும், உசுவாசத்தால் நந்திதேவரது நாசிகாபிலத்தையடைந்துங் கஷ்டப்பட்டுக்கொண்டு, ஊழிகாலத்துதித்த பிரசண்ட வாயுவேகத்திலலையுஞ் சிறுதுரும்புபோல்த்துன்புற்றுத் தனது வல்லமையால் உயிர்பிழைக்க உபாயமொன்று மில்லாமல் விஷ்ணுமூர்த்தியை “மாதவா! கேசவா! மதுசூதனா! அபயம், அபயம், எனது அஞ்ஞானத்தால் ஸ்ரீநந்திபகவானுக்குண்டாகிய கோபாவேச உசுவாச நிசுவாசங்களால் உயிரொழி யுந்ததியி லிருக்கின்றேன். அத்துன்பத்தையகற்றி அடியேனைக் காக்கவேண்டும்'' என இறைச்சலிட்டு முறையிட, சிவதரிசனஞ் செய்துகொண்டிருந்த திருமால், அது முறையிடும் இறைச்சலைச் செவியேற்று, சிவபிரான் சமுகத்தில் திருவிண்ணப்பஞ்செய்தனர்.

சிவபெருமான், தமக்கு மனைவியும் சத்தியும் அம்பும் பரமபக் தருமாகவுள்ள விண்டு மனம் வருந்தி வாய்விண்டு விண்ணப்பித்தவற்றைத் திருச்செவிசாத்தி, "மாலே! மாலுறாமல் நமது கட்டளை யென்று நந்திபால் நவின்று கருடனை விடுத்தி" எனத் திருவாய் மலர்ந்தருளினர். உவணகேதனன் உள்ளங்களித்து ஓடோடி விடைத் தேவர்பால்வந்து விமலர்கட்டளையை விளம்பி, "ஐயனே! அதன் அறியாமையை மன்னித்து அருள்புரிய வேண்டும்” என்று பிரார்த்திக்க, நந்திகேஸ்வரர் ''என் முன்னே இறைவரை இதழ்ந்து கூறிய இக்கருடனுயிரை இமைப்பொழுதில் மாய்ப்பேன்” எனச் சினத்துடன் செப்ப, நாரணன் நடுக்கெய்தி, மீண்டும் விடையூர்திபால் விண்ணப்பிக்க, சிவபிரான் நந்தியெம்பெருமானை விளித்துத் தமது கட்டளையாற் கருடனை விடுவித்து உயிர்காத்து மாயவனை மகிழ்வித்தனர்.

கருடன் கருவபங்கமுற்றுக் கமலைகேள்வனைச்சுமந்து பழையபடியே பதுமநாபனுடன் பாற்கடல்சேர்ந்தது. ஈண்டு நந்திதேவரால் துன்புற்ற கருடனுக்குச் சமீபத்தருள் செய்த காரணத்தால் கடவுளுக்குக் கருடாந்திகமூர்த்தியெனப் பெயரெய்தியது.

ருத்ரகோடி ஸ்தலமாஹாத்ம்யம்.

உச்வாஸேநஹ்ருபுஸ்தூர்ணம் யோஜநாநாOஶத0கத:
நிச்வாஸேநஸமாக்ருஷ்ய வ்ருஷநாஸாந்தரம்விஶத் இத்யாதி
ஏநாமுக்த்திம்ஹரேஶ்ருத்வா வ்ருஷோவசனமப்ரவீத்
அநேநாகாரிகோவிந்த ஶிவஶிந்தாமஹாத்தரா
ஹரிஷ்யேவைநதேயாஸூ நிதிவேகாத்வ்ருஷோப்ரவீத் இத்யாதி
ஶ்ருத்வைநாம்வ்ருஷபஸ்யோக்திம் மஹாவேகாத்ரியம்பக:
கருடம்முஞ்சமுஞ்சேதி வ்ருஷப0ஶங்கரோப்ரவீத்
வ்ருஷோமுத்க்வாதகருட0 வேகாதுக்தம்விபோ:புர:
தஸ்மாந்மஹிபவத்தோஷ்: இதிசிந்தாஸமாகுல:

பதினோராந் திருமுறை.

"கார்மலிசிறகின் கருடனைக்காய்ந்தனை
அன்னவற்கிரங்கிப் பின்னருமருளினை.''

கருடாந்திகமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                       
 

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி