சிவாக்கினைப்படி, இரண்டாயிரஞ் சதுர்யுகங்கொண்ட காலம் பிரமனுக்கொரு நாள்; அத்தகைய நாட்களாலாகிய நூறுவருடம் பிரமனுக்குரிய ஆயுட்காலம். அதுவே திருமாலுக்கொருநாள். அத்தன்மையாகவே திருமாலுக்கு வயது. நூறு கழியின் உலகிலுள்ள சர்வான்மாக்களுமொழியும். அக்காலத்திற் சமஸ்தலோகங்களும் மகாமயானமயமாகும். அச்சமயத்தில் எஞ்சி நின்ற பரம்பொருளாகிய சிவபெருமான் தமது சத்தியாகிய உமையும்மை தரிசிக்கும்படி திருநடம் புரிந்தருள் வர். இத்தன்மையான நேயுப்பிரளயத்தில் எல்லாத்தருமங்கட்கும் அதிதேவதையாக விளங்கும் தருமதேவதை தானுமிறக்கவருமே யென்செய்வேனென்றெண்ணி, சிவபிரானைச் சரணடைந்தால் மரணத் தீமை நீங்கி யென்று முயிர்கொண்டிருப்பே னெனத்தெளிந்து ஓரிடபவடிவேற்று எம்பெருமானையடைந்து ''ஈசனே! யானிறவா மையும் தேவரீருக்கு வாகனமாந்தன்மையும் சமானமில்லாவலியுடைமையும் பெற்றுயிர்வாழ அடியேனுக்கருள வேண்டும்'' எனப்பிரார்த்திக்க: அருட்கடலாகிய அம்பிகாபதி "அஞ்சாதே'' என்றபயமளித்து அதன் சிரமேற் றமது அருமைத் திருக்கரமாகிய திதித்தொழிற்குரிய அபயாஸ்தத்தைச் சூட்டிப் பின்வருமாறு திருவாய்மலர்ந்தருளினர்: "தருமதெய்வமே! நீ விரும்பியவாறே யவற்றையடைக: அன்றியும், தருமத்தின் காலநிலை யிஃதென்று கண்டோருணர முற்பட்ட கிருதயுகத்தில் நான்கு கால்களும், இரண்டாவதாகிய திரேதாயுகத்தில் மூன்று கால்களும், மூன்றாவதாகிய துவாபரயுகத்தில் இரண்டுகால்களும், நான்காவதுங் கடைப்பட்டதுமாகிய கலியுகத்தில் ஓர்காலுங்கொண்டூன்றிப் பூமியில் நடந்து காட்டக்கடவாய். யாம் உன்னைவிட்டுப்பிரியேம்; நீயே யெமக்கு வாகனமாயிருத்தி'' என்றறுக்கிரகித்து அதன் உயிர்போலத் தருமதேவதையைத் தனிவிடாமற் சிவபெரு
மான் பரிபக்குவமுற்ற பரமபத்தர்கட் கநுக்கிரகஞ் செய்யுந்தோறும் அதனையே வாகனமாக ஆரோகணித்தெழுந்தருளுவர். ஊழிக் காலத்தில் அறவுருவாகிய விடையை அணுகி ஆதரித்தமையால் ரூஷபாந்திகமூர்த்தியெனச் சிவபெருமானுக்கோர் திருநாமமெய்தியது.
ஆறு லாஞ்சடை யண்ணலைச் சேர்வனே
லீறி லாதென்று முய்ந் திடு வேனெனாத்
தேறி யேயறத் தெய்வதஞ் செங்கணா
னேறு தாயொ ரெழிலுருக் கொண்டதே.
ஏற்றின் மேனிகொண் டீசன் முன் னேகியே
போற்றி யானின்'று பொன்றிடுந் தன்மையை
மாற்றி யாறறல் வழங்கிநிற் கூர் தியாம்
பேற்றை யெற்குப் பிரானரு ளென்னவே.
இறத்தலை பின்மையும் யான மாய்த்தனைப்
பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையு
முறைத்திடு மன்பும்வா லுணர்வு நல்கியே
யறத்தனிக் கடவுளுக் கண்ணல் கூறுவான்.
முதலய விடைகடை மொழிய நின்றிடுஞ்
சதுர்வித யுகந்தனிற் றருமத் தின்றிற
மிதுவென நான்கு மூன் றிரண்டொன் றாகிய
பதமுறை யூன்றியே படியிற் சேறிமேல்.
ருஷபாந்திகமூர்த்தயே நம: