சிவப்பிரசாதம் பெற்ற மாபலிச் சக்கிரவர்த்தியின் மகனாகிய ஆயிரங்கை களையுடைய வாணாசுரன் சுப்பிரதீபிகை யென்பவளை மணந்து நருமதை நதிக்கரையிற் சிவலிங்கக்குறிகள் நாளொன்றிற் காயிரமாக அருச்சனை செய்து வருகையில் ஒருநாள் சிவபெருமான் பிரத்யக்ஷமாகி ''என்ன வரம் வேண்டும்'' என்று வினாவ, வாணன் மகிழ்ந்து, ''அடிகளே! அக்கிநி மதிலும், அவனிமுழுவதும் அரசு புரியும் ஆற்றலும், அழியாமையும், தேவரீரது அடித்தாமரையில் அன்பும் அவாவினேன்'' என, அரவாபரணர் அவ்வாறே அநுக்கிரகித்து அந்தர்த்தானமாயினர். வாணாசுரன் வையகமுழுதுங் கையகப்படுத்தி சோணிதபுரியில் அரசுசெய்து வாழ்ந்து வருகையில், ஒருநாள் கருணாநிதியைத் தரிசிக்கக் கயிலாயமடைந்தனன். அது சமயம் அருள்வள்ளல் நடிக்குத் ததியாயிருத்தலின், தனது ஆயிரங்கைகளாலுங் குடமுழவு வாசிக்க, மாது பங்கன் களித்து “யாது வரம்வேண்டும் ஓதுக" என, அசுரன் அண்ணலே! அடியேன் திருக்கயிலாயகிரியில் வந்து திருநந்திதேவர் பிரம்படிபட்டுச் சலியாமல், கஜமுக ஷண்முக பார்வதி சமேதராய்த் தேவரீர் அநவரதம் அடியேன் மாளிகையிற் காட்சி கொடுத்து வீற்றிருக்க வேண்டும்'' எனக் கழற, பெருமான் ''அவ்வாறே யாகுக'' வென்று சோணிதபுரமுற்று வாணன் மாளிகையில் வாழ்ந்திருந்தனர்.
இவ்வாறிருக்கிறபொழுது வாணன், இந்திரன் முதலிய வெண்டிசைக் கிறைவர் - திசைமுகன் - திருமால் முதலிய தேவர் குழுவுடன் எதிர்த்துப் போர்செய, ஒருவரு மாற்றாமல் ஓடிப்போனமையால் மமதை மிக்கவனாய் மகாதேவனை நண்ணி "அண்ணலே! அடியேனுடன் அமர்செய்வோர் அகி லத்தில்லாமையால், தோள்கள் தினவுற்றன. சிறிது செருச்செய்யத் திருவுள்ளங் கொள்ள வேண்டும்" என சிவபிரான் புன்சிரிப்பு கொண்டு, சிறிது மஞ்சாமல் இவ்வாறு கூறியதை யெண்ணி "கண்ணன் துவாரகையி லிருந்து வந்து உன் தோள் தினவு தீர்த்து அவற்றை விரைவிற் சங்கரிப்பான்” என, வாணன் "இருபதுதரம் எதிர்த்தோடிய இக்கிருஷ்ணனா என்னைச் செயிக்க வல்லவன்?" என, உலகநாதன் "உனக்குத் தோற்றபின் உபமந்யுமுநிவனிடம் தீக்ஷை பெற்று இடைவிடாது எம்மை யருச்சித்து உன்னை விட மேலாகிய உரைத்தற்கரிய வலி பெற்றுள்ளான்'' என, "அச்சமர் எப்பொழுது வரும்' என, மகள் மேல் பழிவரும்; உன் மயூரத்துவஜம் துணியும்; அதுவே போரெய்துங்காலம்'' என்றறைய, வாணன் தன் மாளிகை சேர்ந்து வசித்திருந்தான்.
ஒருநாள் வாணன் மகள் உஷை யென்பவள் துயிலுகையில், கண்ணன் பௌத்திரனாகிய அநிருத்தன் கலந்ததாகக் கனவுகண்டு கண்விழித்துக் காணாமல் மோகாக்கிர சித்தமுடையவளாய், சித்திரலேகை யென்னுந் தோழி எழுதிக்காட்டிய சித்திரப்படங்களால் அம்மன்னவனைக் குறிப்பித்து அத்தோழியால் துவாரகையிற் சயனித்திருந்த அதிருத்தனை மஞ்சத்துடன் வருவித்து நெஞ்சங்களித்து இன்பம் நுகர்ந்திருந்தாள். உஷை சிறிது நாளிற் கருப்பங்கொண்டனள். தோழியரா லஃதுணர்ந்த வாணன் அநிருத்தனைச் சிறையிட்டான். அதற்காக உஷை மனம் வருந்தினாள். வாணன் மாளிகையிலுள்ள மயூரத்துவஜம் அன்று ஒடிந்தது. அவற்றையெல்லாம் அறிந்த நாரதமுநிவர் துவாரகை சென்று கண்ணனுடன் கூறினர். மனவருத்தமுற்ற கண்ணன் எண்ணிலாதசேனையை இமைப்பொழுதிற் கூட்டிக்கொண்டு போர்க்கோலமாய்ச் சோணிதபுரத்தை யடைந்தனன்.
முதல் வாயிலில் மூத்தபிள்ளையார் வீற்றிருக்கக்கண்டு கனிவர்க்கம் - பாலுணவு - பலகாரவகைகள் இவற்றை நிவேதித்து ஐங்கரக்குரிசிலை அகமகிழச் செய்து, இரண்டாம் வாயிலில் இளைய பிள்ளையார் எழுந்தருளி யிருக்கக்கண்டு பலவகையாகப் பூசித்து விடைபெற்று, மூன்றாவதில் வசித்திருக்கும் உமாதேவியாரைக் கண்டுபணிந்து உட்செல்லுகையில், சிவபெருமான் முன்னொரு காலத்தில் மைநாககிரியில் தவஞ்செய்து கொண்டிருந்த திருமாலுக்கு "யானே எதிர்த்தாலும் நீ ஜெயிக்கக் கடவாய்' என்று கொடுத்தவரத்தைப் பாதுகாக்கும்படி தனது பிநாகமாகிய வில்லை ஏந்தி நிற்கக்கண்டு சிவகாமங்களைப்பாடி "எளியேனைக் காத்தருள வேண்டும்'' என்று வணங்க, நிமலர் “நீயெம்மை வென்றன்றோ வாணனை யெதிர்க்கலாம்'' என விநோதமாகக் கூறினர்.
சர்வாண்டங்களையும் க்ஷணத்திற் சாம்பலாக்கும் சங்கரா! புன்னகையாற் புரம் பொடித்த புண்ணியா! துரும்பொன்றால் தேவர் செருக்கைத் தொலைத்தோய்! கருப்புவில்லைக் கணமொன்றிற் காய்ந்த கண்ணுதலே! மறலியின் மமதைமாய்த்த மலரடியாய்! உந்தி வந்தோன் சிரங்கொய்த உகிருடையாய்! மச்சம் - கூர்மம் – வராகம் – நாரசிங்கம் - வாமனவடிவங்களாக வந்த எனது வலிமாய்த்து, கண் – ஓடு - கொம்பு - தோல் - என்பு இவற்றைக் கொண்ட இறைவா! தக்கனைத்தடிந்தோய்! சரணம் சரணம். உற்றுப்பார்த்தால் ஒழியும். எனக்கு ஓராயுதமும் எடுக்கவேண்டுமோ? அம்பும் - வாகனமும் - அடிமையும் - மனைவியுமாகவுள்ள என்னையும் எதிர்க்கலாகுமோ? என்று பலவகையாகத் தோத்திரஞ்செய்து பணிந்து பன்னகசயனைப் பரமன்பார்த்து "விண்டுவே! எம்மைக் கண்டு எட்டுணையு மஞ்சவேண்டாம். உனது வருகையை வாணனுக்கு முன்னரே உரைத்துள்ளோம். அவனைச்செயித்து வெற்றிமாலை தரிக்கக்கடவாய். நீயெம் மோடெதிர்த்தால் முருகன் விளையாட்டுப்போல நினைப்போம். தேவர்கள் வேடிக்கை பார்க்கும்படியா யிருவருஞ் சிறிது நேரம் செருச்செய்வோம். பகைமையாக யுத்தஞ்செய்யேம் : பயப்பட வேண்டாம்" என்று பலவகையாகத்தேற்றி, கண்ணுதல் கையிலேந்திய பிநாகம் என்னும் வில்லைவளைத்து நாணேற்ற, நாரணன் "நாதனே! நாயேனைக்காக்க” வென்று தனது சாரங்கம் என்னும் வில்லை நாணேற்றினன்.
பவளமலையுடன் நீலமலை யெதிர்த்தாற் போலநின்று இருவருஞ் செய்த நாணொலி திரிலோகத்திலிருந்த தேவர் - மானவர் - நாகர்களைச்செவிடுபடுத்தியது. உலக நடுங்கியது. தாமோதரன் சங்கரனை மீண்டும் வணங்கி, சம்பு என்று தியானித்து அருச்சனையாக ஓர் கணையை விடுத்தனன். இருவருஞ் சமர் தொடங்கிச் சொரிந்த அஸ்திரவருஷங்களை அளவிட்டுச் சொல்ல ஆயிரநாவையுடைய ஆதிசேடனுக்கும் ஆகாதென்றால், யானோ அதை அளவுபடுத்திச் சொல்ல வல்லவன். யுகாந்தகாலத்திற் சப்தமேகங்களும் ஒன்று கூடி வருஷித்த தன்மையாயிருந்தது. இதுகண்ட இமையவர் எம் பெருமானது திருவுள்ளக்குறிப்பு இஃதென் றுணராமல், இறைவரே எதிர்த்தனர். இனியென்ன விபரீதங்க ளெய்துமோவென்றெண்ணித் திகைத்திருந்தனர். இத்தகைய கடும்போர் எண்ணில் காலஞ்செய்கையில், கண்ணன் கண்ணுதலைப்பணிந்து ''அண்ணலே! அமர்புரிய இனி ஆற்றகில்லேன்'' என்றடிபறடிபணிய, அடியார்க்கனுகூலராகிய அம்பிகாபதி அச்சமரில் அச்சுதனுக்குச் செயமளித்து * அப்பாற்பட்டனர்.
* அண்ணல் கண்ணனுடன் அமராக்குகையில் அஞ்சினார் போல அகன்றது அதிசயமன்று. '' விஷவ்ருக்ஷோபி ஸம்வ்ருத் யஸ்வயம் தேசத்து மசாம்பிரதம்'' என்றபடியே நச்சுமரமாயிருப்பினும் தன்கையால் வளர்த்துத் தானே சங்கரித்தல் தகாதெனக் கருதி, "தோள் தினவு தீரவேண்டும்'' என்ற வாணனுக்கும் மைநாக மலையிற் றவஞ்செய்த விண்டுவுக்கும், திருவாய்மலர்ந்தருளியவற்றை நிறைவேற்ற லீலாமாத்திரையாய் அடியர் பக்திக் ககமகிழும் அருள் வள்ளலாதலின், அச்சுதன் ஜெயமுற நடித்துக்காட்டியதன்றி உள்ளபடியே ஓடியதன்று.
அவ்வாறு நடிக்காவிடில் விண்டு தன்னை நோக்கித் தவஞ்செய்த பொழுது மகுடாபிஷேகஞ் செய்வித்துத் தானேயெதிர்ப்பினுஞ் செயிக்கும்படி கொடுத்தவரம் அவலமாகும். அன்றியும் சிவப்பிரசாதமாகிய தனது வல்லமையைத் தற்செயலாகக்கருதி இறுமாந்த வாணன் கண்ணனையெதிர்க்க நேராது: அதனால் அவன் தோள்கள் சங்கரிக்கப்படா. இதுநிற்க. அவதார கோலமல்லாத ஆதிவிஷ்ணுவே தன்னொடு சண்டை செய்தற்கஞ்சி, பிருகுமுநிவன் மனைவிபால் அடைக்கலம்புக்க அவுணரைக்கொல்ல ஸ்திரீஹத்தி தேடிக்கொண்டு முநிவர் முனிந்து சபிக்கப் பத்துப்பிறவிகள் அடைந்ததையும், சிவகணத்தலைவருள் ஒருவனாகிய ஶங்குகர்ணனுக்குத் திருமாலுக்கும் நிகழ்ந்த யத்தத்தில் “ஶங்குகர்ண கணேஸேந பிந்நஸ்தேகேஶஸ0ஶய'' என்னும் ஸ்காந்த புராணத்தின்படி, அவனாற் சிகையை யறுத்து விடப்பட்டதையும், ததீசிமுநிவருடன் சண்டை செய்கையிற் சக்கரத்தின் கூர்வாய் மழுங்கி அவருடலினின் றுதித்த அளவில்லா விஷ்ணு மூர்த்திகளைக்கண்டு மூர்ச்சித்தரெனக் கூறும் பாத்ம ஸ்காந்தபுராணங்களையும், அவர் மைந்தர்களிற் பிரமனைச் சிரங்கொய்கையிலும், மதனனைச் சாம்பராக்குகையிலும் என்ன செய்தன ரென்பதையும், தக்ஷயாகத்திற் சங்கடப்பட்டதையும், இந்திரன் செல்லுருக்கொண்டு அவரேந்தியவில்லின் நாணைக்கறிக்க விழுந்ததையும், எண்ணிப் பார்ப்போமாக. இத்தியாதி நியாயத்தால், பலவா றவமதிப் பூண்ட திருமாலின்' கரியரோமமாகிய கண்ணனுக்கஞ்சிச் சிவபிரான் ஓடினார் என்பதைப் பூர்வபக்ஷஞ் செய்து, அவ்வாறு நடித்துக் காட்டினாரென்று சித்தாந்தமாக்குக.
திருமால் சிவபெருமானது கருணையை வியந்து நிற்கையில், வாணன் கடுங்கோபங்கொண்டு ஆரவாரித்து ஆயுதங்களைத் தாங்கிய அநேகமாகிய அவுணர் சேனையுடன் அமர்க்கோலங்கொண்டெதிர்க்க இருதிறத்தவருக்கும் பெரும்போர் நிகழ்ந்தது. இச்சமரில் கிருஷ்ணமூர்த்திக்குச் சிவா நுக்கிரக மேலீட்டால் வலிமிகுந்திருத்தலின் வாணன் புயங்களை ஒவ்வொன்றாகக் கண்டிக்கையில், நம்பர் “நம்மை யர்ச்சித்த இருகரங்களிருக்க" என, யாதவசிரேஷ்டன் மாதுபாகனால் வாய்மலர்ந்தருளியவண்ணம் ஏனையகரங்களை யிமைப்பிற் சங்கரித்தனன். பிறகு சிவபெருமான் ''வாண! உன் தோளிலிருந்த தினவு நீங்கியதா! '' என்று வினாவ, வாணன் “அடியேன் அறியாமையாலறைந்ததைப் பொறுத்தருளவேண்டும்” என வேண்டினன். சிவாக்கினைப்படி வாணன் தன்மகள் உஷையை அநிருத்தனுக்கு மணம்புணர்த்திக் கண்ணனோடு துவாரகாபுரிக்கனுப்பிவிட்டு, சிவப்பிரசாதத்தாற் பழையபடி ஆயிரம் அத்தங்களும் அமையப்பெற்றுத் திருக்கயிலாயகிரியிற் குடமுழா வெடுக்கும் பாக்கியம் பெற்றனன்.
சிவபிரானுந் திருமாலும் வாணன் மாளிகையில் விநோதாயுத்தஞ் செய்கையில் "படர் குறிப்பொடு வெம்பிணி படைத்தெதிர் விடுப்பார்'' என்றபடி சிவபிரான் பேரில் கண்ணன் பிரயோகித்த சீதளசுரத்தைத் தணிக்கும்படி ''மூன்று சிரங்கர நாலு கொடுங்கனல் முதிர்விழி யொன்பதுடன் - றோன்றி யடும்படை பூத பசாசுகள்சுற்றியுறக்கடுவே - கான்று கொளும்புகை யோடனல் வீசிய காலுற வேயுலக - மீன்றவன் முன்னுல கெங்கு “நடுங்க வெழுந்தது பரசு பதம்'' என்றபடியே சிவபெருமான் ஏவிய உஷ்ணசுரமானது மூன்றுசிரம் - நான்கு கரம் - ஒன்பது விழி - மூன்று கால்களுடன் சென்று கண்ணன் விடுத்த சீதள சுரத்தைக் கணத்தில் மாய்த்தது. தீராச்சுரமுற்றோர் அத்திருவுருவத்தைப் பணியின், சூரியன் முன்பனி போல விலகிச்சுகமுறுவர். விஷ்ணுவிடுத்தசுரத்தின் வீறு போக்கினமையால் சிவபிரான் ஜ்வராபக்ந மூர்த்தியெனப்பெயருற்றனர்.
தோஸ்ஸஹஸ்ரமத்வயாதத்தம் வரம்பாராயமேபவத்
த்ரைலோக்யம்ப்ரதியோத்தாரம் நலேபேத்வத்ருதேஸமம்,
கண்டூத்யநிர்வ்ருதைர்தோர்பிர் யுயுத்ஸுர்திக்கஜாகஹ0
அப்யயா0சூர்ணயந்நர்த்ரீந்பீதாஸ்தேவிப்ரதுருவ:
தச்ச்ருத்வாபகவாந்ருத்த: கேதுஸ்தேபஜ்யதேயதா,
த்வத்தர்பக்நோபவேந்மூட ஸம்யுகேமத்ஸ்மேந்தே
இத்யுக்த: குமதிர்ஹ்ருஷ்ட: ஸ்வக்ருஹம்ப்ராவிபார்க்ருப -
சித்சேதபகவான்பாஹூந்ஶாகா இவ்வநஸ்பதே:
பாணோபிப்ரதிபத்யாத மைத்ரேயாஹத்ரிலோசனம்
தேவபாஹுஸஹஸ்ரேண நிர்விண்ணோஸ்ம்யாஹவம்விநா
கஶ்சிந்மமைஷோபாஹூநாம் ஸாபல்யஜாசாரண:
பவிஷ்யதிவிநாயுத்தம் பாராயமமகிம்புஜை:
ஶங்கர:-மயூரத்வஜபங்கஸ்தே யதாபாணபவிஷ்யதி
பிஶிதாஶிஜநாநந்தம் ப்ராப்ஸ்யஸேத்வம்ததாரணம்.
ஸ்ரீதேவி - த்வத்தோவிஸிஷ்டபாவஸ்து விஷ்ணோஸம்ப்ரதிபத்யதே
தமேதத்தயாந்தோ க்ருபயாவதஸுவ்ரத்
ஶ்ருணுதேவிப்ரவக்ஷ்யாமி விஷ்ணோராதிக்யதாம்ப்ரதி
புராகதாசித்தேவேரி பரமாநந்தகாநநே
க்ரீடாஸக்தேமவிபுரா விஶ்வமேததநாயகம்,
உபத்ருஷ்டம்ஸதாதுஷ்டைர்வேதவாதபஹிஷ்க்ருதை:
ஸ்வாஹாஸ்வதாவஷட்கார ரஹிதேகர்மவர்ஜிதே
ப்ரஹ்மணஜ்ஞாதவ்ருத்தாந்த: கார்யஶேஷமசிந்தயத் .
சக்ரபாணிஸெமாஹூய ரத்நஸிம்ஹாஸநேஶுபே
அபிஷேச்யவரந்தத்வா ப்ரணாமம்கரவம்பிரியே
ஸ்ருஷ்டிஸ்திதிவிநாஶநாம் கர்த்ருத்வமகுதோபயம்
ஸர்வஜ்ஞதாதிஸித்திஞ்ச தத்தவாநஸ்மிவிஷ்ணவே
மத்தோதிகோபவாந்ராஜா பவவிஷ்ணோமஹரப்ரபோ
இதிதத்தவர:பூர்வம் வாரணஸ்யாம்ஹரி:புரா
இதிஜ்ஞாத்வாகவிப்ராஹ மேநிரேப்யதிகம்ஹரி0.
ஜ்வராபக்நமூர்த்தயே நம: